/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, June 21, 2020

எழில் கணினி மொழியும் கட்டற்ற தமிழ்

தமிழ் இணைய கழகமும் -  தமிழ் இணைய வானொலியும் இணைந்து நடத்திய ‘எழில் கணினி மொழியும் கட்டற்ற தமிழ்’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் கணினி மேலாளராகப் பணிபுரியும் மதிப்பிற்குரிய முத்து அண்ணாமலை அவர்கள்  21- 6- 2020 அன்று உரை வழங்கினார். உரையில் தமிழ் இணையத்தில், கணினியில் எவ்வாறு முன்னேற்றம் அடைந்து வந்திருக்கிறது என்பதையும், அதன் வழியில் எழில் மொழி மென்பொருளின் பயன்பாட்டையும், இந்த எழில் மொழி மென்பொருளை 2017 ஆம் ஆண்டு வெளியீட்டு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிறகு எழில் மொழியை ஆண்ட்ராய்டு கருவி மூலம் செயல்பட வழிவகை செய்துள்ளதாகவும் கூறினார். தமிழ் மொழி ஒரு வணிக மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் உருவாக்கம் பெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் தனது உரையில் முத்தாய்ப்பாக எடுத்து வைத்தார். எழில் மொழியைத் தொடர்ந்து திறமூல மென்பொருள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார். குறிப்பாக இயல் மொழி ஆய்வுகளில் தமிழ் மொழி கடந்து வந்த பாதைகளை விளக்கினார்.  செம்மொழித் தொகுப்பு சேர்த்தியம் மைசூரில்- தமிழ் மொழியில் 10  மில்லியன் சொற்களைத் தொகுத்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றைப் பயன்படுத்தி புதிய தமிழ் மென்பொருள்களை உருவாக்கலாம் என்றார். மேலும் திறமூல மென்பொருளின் வரிசையில் தமிழ் வாய்ப்பாடு,  சுருக்கெழுத்து உருவாக்குவது, சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி, ஒரு கோப்பில் இருக்கின்ற எழுத்துக்களின் எண்ணிக்கையை எண்ணி காட்டுவது, உரை சுருக்கத்தை வழங்குவது, வேர்ச்சொல் பகுப்பாய்வு செய்வது, போன்ற பயன்பாட்டு மென்பொருள்களை இன்று வெளியிட்டு வருகின்றார்கள் என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். உரை முடிந்த பிறகு திரு முத்து அண்ணாமலை அவர்களிடம் சுகந்தி, யாழ்பாவாணன், பாக்கியராஜ், இனிய நேரு, உமா ராஜ், பசும்பொன், முருகானந்தம், கோ பழனிராஜன் போன்றோர்கள் வினாக்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார்கள் . இந்த அமர்வில் தமிழ் கணினிமை சார்ந்த பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அதேபோன்று மாணவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளும்படி எழில் மொழி மென்பொருளைக் கையேடாக வழங்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

2 comments:

  • முத்து அண்ணாமலை says:
    June 22, 2020 at 3:39 PM

    http://ezhillang.org என்ற தளத்தில் இருந்து எழில் கணினி மொழியின் நிறுவுதல், பரிசோதனை செய்யலாம்.

    தமிழ் இயல் மொழி ஆய்வுகள் செய்ய Open-Tamil என்ற Python பதிப்பு உள்ளது; இதன் பயன்களை நிரலாளர் அல்லாதவர் http://tamilpesu.us வலைவழியாகவும் பெறலாம்.

    நன்றி.

  • மணிவானதி says:
    June 25, 2020 at 12:39 AM

    நல்ல விளக்கம் ஐயா நன்றி