/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 29, 2018

பத்மவாணி மகளிர் கல்லூரி- சேலம்

|1 comments
அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட தமிழ் அன்லிமிடேட் நிறுவனமும் சேலம் பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் 27/07.2018 அன்று கல்லூரி அரங்கில் சிறப்பாக  நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் முனைவர் அ.காமாட்சி உறுப்பினர்கள் முனைவர் க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன் கலந்துகொண்டு மாணவிகளுக்குப் பயிற்சி வழங்கினார்கள். 


நிகழ்ச்சியில் பத்மவாணி கல்லூரி தாளாளர் திரு.கா.சத்தியமூர்த்தி, முனைவர் க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் அ.காமாட்சி, கல்லூரி இயக்குநர் ச.நிவிதா மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அ.பழனியம்மாள்...

பயிற்சியில் முனைவர் துரை.மணிகண்டன் தமிழ்கணினி இணையம் அறிமுகம்  என்ற தலைப்பில் உரைவழங்கினார்.


அடுத்து முனைவர் அ.காமாட்சி தரவுதளங்கள் மற்றும் மொழியியல் நோக்கிம் கணினி என்ற பொருண்மையில் விளக்கம் நந்தார்.


முனைவர் க.உமாராஜ்  கணினி மொழியிலும் கணிப்பொறியும் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.







காவேரிக் கல்லூரி தமிழ்த்துறை- திருச்சிராப்பள்ளி.

|0 comments
25/07/2018 புதன்கிழமை திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரி  “பாரதி தமிழ்மன்றத் தொடக்கவிழாவில்”  "தமிழும் இணையப் பயன்பாடும்" என்ற தலைப்பில் சிறப்புரை.
உடன் தமிழ்த்துறைத் தலைவியும் கல்லூரியின் துணை முதல்வருமான முனைவர் ராமலெடசுமி  கல்லூரி செயற்குழு உறுப்பினர், பேராசிரியர் கவிதா மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.



காவேரி கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மதிப்புறு பேராசிரியர் ராமர்லெட்சுமி கல்லூரி செயற்குழு உறுப்பினர்....



தமிழ் இணையம் அறிமுகம், தமிழ்த்தட்டச்சுப் பயிற்சி, மற்றும் தமிழ் மென்பொருள்களின் பயன்கள் குறித்து விளக்கினேன்.

கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி பயிலரங்கம் -- சிதம்பரம்.

|0 comments

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வரலாற்றுத்துறை சார்பாக 24/07/2018 நடைபெற்ற கல்வெட்டு எழுத்துக்கள் மற்றும் ஓலைச்சுவடி தொடர்பான ஏழுநாள் பயிற்சியின் நிறைவுநாள் நிகழ்வில் கணிப்பொறி எழுத்துக்கள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியது.





Thursday, July 19, 2018

ஊடகவியல் - Media Studies

|2 comments



பொருளடக்கம்
அலகு – 1
ஊடகங்கள் – அறிமுகமும் விளக்கமும் (1 – 29)
1.0. முகவுரை – 1.1 ஊடகங்கள் பற்றிய விளக்கங்கள் – 1.2. தகவலும் அவற்றின் தொடர்புகளும் – 1.3. தகவல் தொடர்பியல் ஊடகங்களின் பங்குகள் – 1.4. ஊடக வலைகள் – 1.4.1. மரபு வழிப்பட்ட ஊடகங்கள் – I. ஒற்றர்கள் மற்றும் தூதுவர்கள் – II. பறவைகளும் பிற உயிரினங்களும் – III. நாட்டுப்புறப் பாடல்களும் கதைகளும் – IV. தெருக்கூத்து – V. பண்பாட்டுக் கூறுகள் – 1.4.2. அச்சு வழி ஊடகங்கள் – 1.4.3. மின்வழி ஊடகங்கள் – 1.4.4. மின்னணு வழி ஊடகங்கள் – 1.5. ஊடகங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் – 1.6. ஊடகங்களினால் உருவாகும் பயன்கள் – 1.6.1. அறிவித்தல் (Information) - 1.6.2. அறிவுறுத்தல் (Instruction) – 1.6.3. மகிழ்வித்தல் (Entertainment) – 1.6.4. சமூகச் சார்புடையவராக்குதல் (Involvement) – 1.6.5. வணிக உறவுகள் (Business relationship) – 1.7. ஊடக நுகர்வோர் கடமைகள் – 1.8. முடிவுரை.

அலகு – 2
அச்சுவழி ஊடகங்கள் இதழ்கள் (30 - 66)
2.0. முகவுரை – 2.1. தமிழகத்தில் அச்சு ஊடகங்கள் – 2.2. ஊடகங்கள் மிகச்சிறப்பாகக் கருதப்படும் இதழ்கள் – 2.2.1. 1947 முதல் 2000 வரை இதழ்கள் – 2.3. தற்கால தமிழ் இதழ்களின் வகைகள் – 2.4. கால பாகுபாட்டில் இதழ்கள் - I. நாளிதழ்கள் – II. வாரம் இருமுறை இதழ்கள் – III. வார இதழ்கள் – IV. மாதம் இருமுறை இதழ்கள் – V. மாத இதழ் – VI. காலாண்டு இதழ் (மூன்று மாதத்திற்கு ஒருமுறை) - VII. ஆறு மாத இதழ் – VIII. ஆண்டு இதழ் – 2.5. கருத்தின் அடிப்படையில் இதழ்கள் - I. அரசியல் (துப்பறியும் பணியுடன்) – II. ஆன்மீகம் – III. இலக்கியம் – IV. சோதிடம் – V. மகளிர் – VI. கதைகள், நெடுங்கதைகள், குறுங்கதைகள் - VII. அறிவியல் – VIII. பொது அறிவு – 2.6. இதழ்களின் பணிகள் – 2.6.1. அறிவித்தல் பணி – 2.6.2. அறிவுறுத்தல் – 2.6.3. மகிழ்வித்தல் – 2.6.4. வணிகச் செய்திகள் – 2.7. பொதுப்பணிகள் – 2.8. தமிழ் இதழ்களின் அமைப்பு முறை – 2.9. இதழ்களின் தலையங்கம் – 2.10. இதழ்களின் கட்டுரைகள் – 2.11. இதழ்களில் இலக்கியம் – 2.12. இதழ்களில் விமர்சனங்கள் – 2.13. இதழ்களில் கருத்துப்படங்கள் – 2.14 இதழ்களில் விளம்பரங்கள் – 2.15. இதழ்களின் நடைகள் – 2.16. இதழாளருக்குரிய தகுதிகள் – 2.16.1. நிறுவனர்  மற்றும் நிர்வாகக்குழு – 2.16.2. முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழு – 2.16.3. செய்தி சேகரிப்போரும் உதவியாளர்களும் – 2.16.4. அச்சுத்துறை உழைப்பாளர்கள் – 2.17. இதழ் நுகர்வோர் கடமைகள் – 2.18. முடிவுரை.

அலகு – 3
வானொலியும் தொலைக்காட்சியும் (67 - 114)
3.0. முகவுரை – 3.1. வானொலி மற்றும் தொலைக்காட்சியின் சிறப்புகள் – 3.2. வானொலியின் தோற்றமும் வளர்ச்சியும் – 3.3. மார்க்கோனியின் முதல் ரேடியோ – 3.4. இந்தியாவில் வானொலி – 3.5. பண்பலை வானொலி – 3.6. மாதமிரு இதழ் – 3.7. உலக வானொலி நாள் – 3.8. தேசிய ஒலிபரப்புகள் – 3.9. மாநில ஒலிபரப்புகள் – 3.10. பேச்சுமொழி நிகழ்ச்சி – 3.11. இசை நிகழ்ச்சிகள் – 3.12. எஃப்.எம்.கோல்டு மற்றும் எஃப்.எம்.ரெயின்போ – 3.13. விவத்பாரதி – 3.14. பிரச்சார் பாரதி – 3.15. சில விதிமுறைகளும், மசோதாக்களும் – 3.16. தமிழக வானொலி நிலையங்கள் – 3.17. பல்வேறு நிகழ்ச்சிகள் – 3.17.1. செய்திகள் – 3.17.2. செய்தி என்றால் என்ன? – 3.17.3. கல்வி – 3.17.4. விவசாய நிகழ்ச்சிகள் – 3.17.5. இளைய பாரதம் – 3.17.6. சிறுவர் நிகழ்ச்சிகள் – 3.17.7. நலவாழ்வு – 3.17.8 மெல்லிசை – 3.17.9. கருநாடக இசை – 3.17.10. இலக்கிய ஒலிபரப்புகள் – 3.17.11. வானொலியில் தனிநபர்கள் கலந்துரையாடல்கள் – 3.18. நேர்காணலுக்கான திறன் – 3.18.1. செய்ய வேண்டியவை – 3.18.2. செய்யக் கூடாதவை – 3.19. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குதல் – 3.20. வானொலி ஒலிபரப்பில் – சில அடிப்படைகள் – 3.20.1. நோக்கம் – 3.20.2. ஒலிவாங்கி குறித்த கவனமின்மையால் நேரும் சில தவறுகள் – 3.20.3. அறிவிப்பாளரின் கடமையும் – பொறுப்புகளும் – 3.21. நேரடித் தொலைபேசி நிகழ்ச்சிகள் – 3.21.1. நேயர் விருப்பம் – 3.21.2. வல்லுநர் பங்கேற்பு – 3.21.3. உரையாடல் நிகழ்ச்சிகள் – 3.21.4. நேரடித் தொலைபேசி நிகழ்ச்சியை நடத்தும்போது, நாம் கவனிக்க வேண்டியவை – 3.21.5. நேரடித் தொலைபேசி நிகழ்ச்சிகளில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் – 3.21.6. அப்படியே படிக்காதீங்க – 3.21.7. பேச்சுத்திறனின் முக்கியத்துவம் – 3.22. தகவல் தொடர்புத் திறன் – 3.23. உங்கள் குரல் – அது வானொலியின் குரல்! – 3.24. ஒலிபரப்பு மொழியில் தவிர்க்க வேண்டியவையும் கவனிக்க வேண்டியவையும் – குரல் கறைபாடுகளைத் தவிர்க்க, வேண்டுவன, வேண்டாதன உண்டு. I. வேண்டுவன – II. வேண்டாதன – 3.25. தொலைக்காட்சி – 3.25.1. தொலைக்காட்சி தோற்றமும் வளர்ச்சியும் – 3.25.2. அரசின் நோக்கம் – 3.26. அறிவுசார், பல்சுவைசார் நிகழ்ச்சி – 3.26.1. வரிவடிவப்படியான மனமகிழ்வு நிகழ்ச்சிகள் – 3.26.2. வரிவடிவமிடப்படாத மனமகிழ்வு நிகழ்ச்சிகள் – 3.26.3. தகவல் நிகழ்ச்சிகள் – 3.27. முடிவுரை.

அலகு – 4
கணிப்பொறி – இணையம் (115 – 167)
4.0. கணிப்பொறியின் வரலாறு (History of Computer) – 4.2. கணிப்பொறியின் வளர்ச்சி (Growth of Computer) – 4.3. கணிப்பொறியின் குணங்கள் (Characteristics of Computer) – 4.4. கணிப்பொறியின் தலைமுறைகள் (Generation of Computer) I. முதலாம் தலைமுறை (1940 – 1956) – II. இரண்டாம் தலைமுறை (1956 – 63) – III. மூன்றாம் தலைமுறை (1964 – 71) – IV. நான்காம் தலைமுறை (1971 லிருந்து) – V. ஐந்தாம் தலைமுறைக் கணிப்பொறிகள் (இன்று வரை உள்ளது) – 4.5. மேகக் கணிமை – 4.6. பல்துறைப் பயன்பாடுகள் – 4.7. இணைய அறிமுகம் – 4.8. வலைப்பின்னல் – 4.9. நிறுவன உள் இணையம் – 4.10. இணையத்தின் வரலாறு – 4.11. அமெரிக்காவும் இணையமும் – 4.12. இணைய இதழ்கள் – 4.13. இணையத்தில் இதழ்கள் தோன்றக் காரணம் – 4.14. இணையத்தில் தமிழ் மின் இதழ்கள் – 4.15. மின் இதழ்களின் சிறப்புகள் – 4.16. இணையத்தில் அச்சு இதழ்கள் – 4.17. தமிழ் மின்னியல் நூலகம் (Digital Library) – 4.17.1. மின்னியல் நூலகம் – 4.18. உலக மின்னியல் நூலகம் – 4.18.1. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (http://www.lib.unicago.edu/e/su/southasia/rmrl.html) - 4.18.2. தமிழ் இணையக் கல்விக்கழகம் (http://www.tamilvu.org/library/libindex.htm) - 4.18.3. சிறப்புக் கூறுகள் – 4.18.4. தேவாரம் (www.thevaaram.org) - 4.18.5. நூலகம். நெட் (http://www.noolaham.org) - 4.18.6. சென்னை நூலகம் (http://www.chennailibrary.com/) - 4.18.7. மின்னியல் நூலகப் பயன்பாடு – 4.19. தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் – வலைப்பதிவு – (Tamil Blogs) – 4.19.1. வலைப்பூ – வலைப்பதிவு – 4.19.2. தமிழ் வலைப்பூ – 4.19.3. வலைப்பூ சேவை – 4.19.4 முதல் தமிழ் வலைப்பூ – 4.20. தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி – 4.20.1. தமிழ் வலைப்பூக்களின் வகைப்பாடுகளும் வளர்ச்சிகளும் – 4.20.2. அ.ராமசாமி – 4.20.3. தொழில் நுட்ப வலைப்பூ – 4.20.4. பெண்கள் சார்ந்த வலைப்பூக்கள் – 4.22. மின் அஞ்சல் (ELECTRONIC MAIL) – 4.23. மின்னஞ்சலின் பயன்பாடுகள் (E-mail Uses) – 4.24. முதல் மின்னஞ்சல் முகவரி (First E-Mail) – 4.25. மின்னஞ்சல் உருவாக்கம் (Creation of E-Mail) – 4.26. கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் – 4.27. மின்வழிக் கற்றலின் பயன்பாடுகள் – 4.28. தொழில் நுட்ப வழிகள் எவை? – 4.28.1. PPT வழி கற்றல் – 4.28.2. இணைய தளங்கள் மூலம் கற்றல் – 4.29. தமிழ் இணையக் கல்விக்கழகம் - (http:/www.tamilvu.org) 4.29.1. தெற்காசிய மொழிவள மையம் (www.southasia.sas.upenn.edu/tamil/index.html) – 4.29.2. தமிழ் கழகம் – 4.29.3. தமிழகம்.வலை (www.thamizhagam.net/about/aboutus.html) – 4.30. அலைபேசிகள் – குறுஞ்செயலிகள் மூலம் கற்றல் – 4.30.1. வலைப்பதிவுகளின் மூலம் கற்றல் – 4.32. குரல் பதிவுகள் (Podcast) I. ஒளிக்காட்சிகள் (Vodcast) – 4.33. சமூக ஊடகங்களின் வழிக் கற்றல் – 4.34. கற்றல் கற்பித்தலில் சிக்கல்களும் தீர்வுகளும் – 4.35. நிறைவாக.

அலகு – 5
ஊடகப் பணியாளர்களுக்கான பயிற்சிகள் (168 - 205)
5.0. முகவுரை – மூவகைப் பணிகள் – 5.1. ஊடகப் பணியாளர்களுக்குத் தேவைப்படும் பொதுத் தகுதிகள் – 5.2. அடிப்படைத் தகுதிகள் – 5.2.1. அ) பண்புசார் தகுதிகள் – 5.2.2. அறிவுசார் தகுதிகள் – 5.2.3. சமூகம் சார் தகுதிகள் – 5.3. படிப்பும் பயிற்சியும் – 5.4. மொழிப்பயிற்சி (தமிழுக்குரியது) – 5.5. அச்சுப்படி சரிபார்க்கும் பயிற்சிகள் – 5.6. தலையங்கங்கள் தயாரிக்கும் பயிற்சி – 5.7. பயிற்சி வழங்கும் அல்லது எழுதும் முறையின் பயிற்சி – 5.8. செய்திகள் தயாரிக்கும் பயிற்சி – 5.9. தொலைக்காட்சியில் செய்தி வாசித்தல் – 5.10. பொதுவான விதிகள் – 5.11. செய்ய வேண்டியவை – 5.12. செய்யக்கூடாதவை – 5.13. கருத்துக்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்துக் கூறும் பயிற்சி – 5.14. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு – 5.15. நிகழ்ச்சி வர்ணனை – 5.16. நேர்முகவர்ணனைக்கான பயிற்சிகள் – 5.17. ஒளிபரப்பிற்காக நேர்காணுதல் – 5.17.1. நேர்காணலுக்கு சில யோசனைகள் – 5.17.2. உங்களுடைய திட்டம் என்ன? உங்களுடைய மையப்படுத்தல் என்ன? – 5.17.3. கேள்விகளை தெளிவாக கேளுங்கள் – 5.17.6. நேர்காணல் – 5.18. நிகழ்வுகளை செய்தியாக்குதல் – 5.19. இயற்கை ஒலிகளைப் பயன்படுத்தல் – 5.20. நேர்க்காணல் பயிற்சி மற்றும் வகைகள் – 5.20.1. வீதியில் நிற்கும் மனிதன் (Man on the street) – 5.20.2. சந்தர்ப்பச் சூழலில் பெறப்பட்ட நேர்காணல் – 5.20.3. செய்தி நேர்காணல் (Casual interview) – 5.20.4. ஆர்வமூட்டத்தக்க ஆளுமையும் குண இயல்பும் கொண்டவருடனான நேர்காணல் (Personality Interview) – 5.20.5. தொலைபேசி நேர்காணல் (Telephone Interview) – 5.20.6. தபால் மூலமான ஈ-மெயில் மூலமான நேர்காணல் – 5.21. வினாக்கள் – குறிப்புக்களின் வகைகள் – 5.22. நேர்காணல் நுட்பங்கள் – 5.23. கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான பயிற்சி – 5.24. இலக்கிய நிகழ்ச்சி செய்திகளுக்குரிய பயிற்சி – 5.25. இன்றியமையாத நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பயிற்சிகள் – 5.26. தொலைக்காட்சியின் செல்வாக்குகள் – 5.27. முடிவாக.