/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, April 1, 2012

தமிழ் எழுத்துருக்களும் மென்பொருள்களும்.

தமிழ் எழுத்துருக்களும் மென்பொருள்களும்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றான் தமிழ்ச் சங்கப்புலவன் கனியன் பூங்குன்றன். ஆம், அஃது இன்று உண்மையாகிவிட்டது. உலகத்தைச் சுற்றிவந்தால்தான் கனி என்றான் சிவன். மகன்களில் முருகன் மயில்மீது ஏறி உலகைச் சுற்ற, மற்றொருமகன் கணபதி தன் தாய் தந்தையைச் சுற்றிவிட்டு கனியைப் பேற்றுக்கொண்டான் என்கிறது புராணம். இன்றும் அவ்வாறே கணிப்பொறி ஒன்றும், அதனோடு இணைய இணைப்பும் இருந்துவிட்டால் உலகை நாம் உட்கார்ந்த இடத்திலிருந்து பார்ந்துவிடலாம், கண்டுவிடலாம்.
இன்று நாம் கணினித் திரையில் காணும் எழுத்துருக்கள் எங்கு? யாரால்? எவ்வாறு? தோற்றம் பெற்றிருக்கும் என்று நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.எனவே இக்குறையைப் போக்க தமிழ் எழுத்துருக்களும், மென்பொருள்களும் என்ற தலைப்பில் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

இக்கட்டுரையில் பதிவாகியுள்ள செய்திகளை நான் ஒருவனே எழுதவில்லை. பல இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்கள், அழகி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் எமது நண்பர்கள் பலரிடம் கேட்டும், முனைவர் பொன்னவைக்கோ அவர்களது நூலிலிருந்தும் எடுத்துள்ளேன். இதில் ஒருசில எழுத்துருக்கள் விடுபட்டிருந்தாலும் அதனை தயவு செய்து தெரியப்படுத்தினீர்கள் என்றால் உங்களுக்குத் தமிழ் உலகம் நன்றிக்கடன் பட்டதாக இருக்கும்.

தமிழில் நீங்கள் கணினியை பயன்படுத்தி ஏதேனும் எழுத விரும்பினால் முதலில் உங்களுக்கு தேவைப்படுவது ஃபான்ட்ஸ் (Fonts) என ஆங்கிலத்தில் கூறப்படும் எழுத்துரு. நவீன கணினி இயங்குதளங்களில் (ஆப்பிரேட்டிங் சிஸ்டம்களில்) தமிழில் தட்டச்சு செய்ய இது ஒன்றே போதுமானது.

தமிழ் மென்பொருள் என்றால் என்ன?

பல கணினி இயங்குதளங்கள் நேரடியாக தமிழில் உள்ளீடு செய்வதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதில்லை. ஆங்கிலத்திற்கும் தமிழ் போன்ற மொழிகளுக்கும் கணினியில் கையாள்வதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எளிமையாக கூறுவதென்றால், நாம் பயன்படுத்தும் விசைப்பலகைகள் ஆங்கில மொழியில் உள்ளீடு செய்வதற்கு ஏற்றவாறு, ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள்தான் ஆனால் தமிழில் 247 மற்றும் சில சமஸ்கிருத எழுத்துக்களை நாம் உள்ளீடு செய்யும் வகையில் விசைப்பலகைகளின் அமைப்பு இல்லை. இத்தகைய பிரச்சினைகளை கையாள சில உத்திகள் மென்பொருட்களின் மூலம் செய்யப்படுகின்றன. இத்தகைய மென்பொருட்களின் உதவி இல்லாமல் நம்மால் தமிழில் உள்ளீடு செய்ய முடியாது.

மேலும் அங்கிலத்திற்கு ஒரே உள்ளீட்டு முறைதான் உள்ளது (Typing method). ஆனால் தமிழுக்கு பல்வேறு உள்ளீட்டு முறைகள் (typewriter, typewriter old, phonetic, transliteration, tamilnet99, போன்றவை) உள்ளன. ஒரு முறையில் பழகியவர்களால் வேறு முறைகளில் உள்ளீடு செய்ய முடியாது. ஆகவே இவற்றிற்கு ஏற்ப எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கு மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

இவை தவிர ஆங்கில இலக்கணமும் தமிழ் இலக்கணமும் வெவ்வேறானவை என்பதால், பிழைதிருத்தி, பக்க வடிவமைப்பு போன்ற தமிழ்சார்ந்த கணினி வேலைகளுக்கென சிறப்பான மென்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

முடிவாக கூறுமிடத்து எழுத்துரு என்பதும் ஒரு வகையில் ஒரு சிறு மென்பொருள்தான். அதனை நேரடியாக பயன்படுத்துவதில் குறிப்பாக வின்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை திறமையுடன் கையாள்வதற்காகவும், ஆங்கில மொழியில் உள்ளீடு செய்யும் பொழுது அது தரும் மொழிசார்ந்த துணைக்கருவிகளைப் போல் (இலக்கணத் திருத்தி, சொல்திருத்தி, போன்றவை) தமிழுக்கும் உருவாக்கப்பட்டவையே தமிழ் மென்பொருட்களாகும் என இரா. கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு என்றால் என்ன?

ஒரு மொழியில் உள்ள எல்லா எழுத்துக்களையும் விருப்பபட்ட வடிவில் (style, design) வடிவமைத்து, கணினி ஏற்றுக் கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறு மென்பொருளாகும். டிரெடில் அச்சுக்கோர்க்கும் முறையில் கூறுவதென்றால் அஞ்சறைப்பெட்டி வடிவத்தில் பல எழுத்துக்களின் பிளாக்குகளை போட்டு வைத்திருக்கும் சட்டகங்களை போன்றதே எழுத்துரு எனப்படுவது.

தொடக்கத்தில் கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளைக் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், படம் வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என கணினியில் திறமையாக பாவித்துச் சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென் பொருள்களை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர்.இம்மென்பொருள்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடித்தன.
ஆதமி மென்பொருள் ஆங்கில மென்பொருள்போல தமிழிலும் மென்பொருள்கள் உருவாக்கவேண்டுமென பல கணிப்பொறி வல்லுனர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக முதலில் கனடாவில் வசிக்கும் திரு.கலாநிதி சீனிவாசன் என்பவரால்1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆதமி தமிழ் மென்பொருளாகும். இதன் மூலம் கணிபொறியில் தமிழில் எழுதி அதனை அச்சுப்பதிவு செய்துகொள்ள முடிந்தது. இந்த ஆதமி எழுத்துருவை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. பிறகு சீனிவாசனின் விண்டோஸ் பதிப்பாக ஆதவின், திரு ஆகியவையும் உருவாயின.

மயிலை

தொடர்ந்து1985-ஆம் ஆண்டு சுவட்சர்லாந்தில் உள்ள முனைவர் கு.கல்யாண்சுந்தரம் என்பவரால் உருவமைத்த மயிலை எனும் மென்பொருள் ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு உருவமைக்கப்பட்டது. இம்மென்பொருள் ஆங்கில எழுத்தாகிய A-வைத் தட்டினால் அது அ-என்ற தமிழ் எழுத்து தோன்றும் விதமாக உருவாக்கப்பட்டது. இதைபோன்று K-க, O- கொ என உருவாகும் முறையில் அமைந்திருந்தன. மேலும் இவருடன் இணைந்து முத்தெழிலனும் மயிலை, இணைமதி, தமிழ், ஃபிக்ஸ் போன்ற எழுத்துருவையும் உருவாக்கிச் செயல்படுத்தினர்.

கு.கல்யாணசுந்தரம் வடிவமைத்த மயிலை எழுத்துரு அமைப்பு



முரசு அஞ்சல்
“தமிழ் மூலம் மின்னஞ்சல்” பிரச்சினைகளுக்குத் தீர்வு முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986 ஆம் அண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் போன்ற செயல்கள் இலகுவாக்கப்பட்டன.


முரசு அஞ்சல் மென்பொருள் எழுத்துரு


தமிழ் லேசர்

அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைகழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் உருவைமைத்த ’தமிழ் லேசர்’(tamil laser), காஞ்சி என்ற இரண்டு குறியீட்டு முறையில் அமைந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.


ISCII-83

இந்திய அரசால் நிருவப்பட்ட Centre for Developments for Advanced Computing (CDAC)என்ற அமைப்பால் ISCII-83 என்ற தமிழ் மெபொருள் உருவாக்கப்பட்டது.

தமிழ் இனையம் 99 கருத்தரங்க முடிவில் 1-6-1999 அன்று தமிழக அரசின் பரிந்துறையில் தமிழ் அச்சுப் பணிகளுக்கு அழகூட்டும் வகையில் தமிழ் எழுத்துருக்களை மட்டுமே கொண்ட TAM என்ற ஒரு தமிழ் எழுத்துத் தரம், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் செயல்படும் TAB என்ற தரமும் உருவாக்கப்பட்டது.

பிற தமிழ் எழுத்துருக்கள்.

அமெரிக்கத் தமிழர் மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமியால் தொடங்கப்பட்ட அணங்கு, கனடாவில் வசிக்கும் தமிழ் ஆர்வளர் முனைவர் திரு.விஜயகுமாரின் சரஸ்வதி போன்ற தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன.
1990-இல் அமெரிக்கவைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் T.கோவிந்தராசு என்பவர் உருவமைத்த பல்லாடம், சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் கணியன் போன்ற மென்பொருள்கள் தமிழில் உருவாகி தமிழ் மொழி இணையத்திலும் கணிப்பொறியிலும் வளர்ந்த நிலையில் உள்ளது.

தாரகை

சிங்கப்பூரில் உள்ள ஆர்.கலைமணி என்பவரால் வடிவமைக்கப்பட்டதுதான் தாரகை எழுத்துரு மென்பொருளாகும்
இவைகள் மட்டுமன்றி தமிழகத்தைச் சார்ந்த கணிப்பொறி வல்லுனர்களும் மென்பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களில் திரு.செல்லப்பனின் asian printers,க.இளங்கோவனின் CAD Graph, டாக்டர். கூப்பர் modular infotech, திரு துளுக்காணம் அவர்களின் lastech, மா.ஆண்டோபீட்டர் அவர்களின் softview(inscript fonts), திரு.தியாகராசனின் வானவில் போன்றவையும் அடங்கும்.

இ-கலப்பை

முரசு 2000-த்தை தொடர்ந்து பெங்களூரில் பணியாற்றிவரும் மென்பொருள் தயாரிப்பாளர் திரு.முகுந்தராஜாவின் முயற்சியால் இ-கலப்பை என்னும் மென்பொருள் ஒருங்குறியீட்டில் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் இ-கலப்பையைக் கணினியில் நிறுவுதல்,தொடர்ந்து யூனிக்கோடு எழுடத்துருக்களை நிறுவுதல் என்ற இரு செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இம்மென்பொருள் உருவாக்கப்பட்டு வெளிவந்தது.


இ-கலப்பை மென்பொருள் எழுத்துரு

தமிழ் குறிமுறை நியமங்களின் வரலாறு

அஸ்கி (ASCII)
ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியைத் தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது.
தகுதரம் (TSCII)
இந்த ஏற்பாட்டில், இணையத்தின் வரவு புதிய நடைமுறைச்சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர்த்து, பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேற்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு மதுரைத்திட்டக் குழுவினரால் வடிவமைத்த தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (அதாவது, Tamil Standard Code for Information Interchange [TSCII]) உருவாக்கப்பட்டது.. இதில் முதல் 0-127 எழுத்துகள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் தமிழ் எழுத்துகள் நிரப்பப் பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன் படுத்தப்படுகிறது.

ஒருங்குறி (UNICODE)

ஒருங்குறி ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளைஒன்றினைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகமானது. விண்டோஸ் 2000/XP/2003/Vista, ஆப்பிள் Mac OS 10.4, லினக்ஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களும் தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கின்றன. இன்று அநேகமாக உலகிலுள்ள தேடுபொறிகள் (Search Engines) கூகிள்மற்றும் யாகூ ஒருங்குறியில் தேடல்கள் செய்ய வல்லன. மேலும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒருங்குறியினூடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை ஆபிஸ் 2003 மற்றும் விண்டோஸ் XPல் அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது.. உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

மேலும் சில தமிழ் எழுத்துருக்கள்.

மலேசியாவைச் சேர்ந்த கே.பால். இரவீந்தரன் என்பவர் துணைவன் 2.3 என்ற எழுதியை உருவாக்கியுள்ளார். பாரிசில் வாழும் கோபாலகிருஷ்ணன் எனபவர் புதுச்சேரி என்ற தமிழ் மென்மத்தை உருவாஅக்கியுள்ளார். வட அமெரிக்கரான தமிழர்கள் ஞானசேகரன் மற்றும் பால. சுவாமிநாதன் ஆகியோர் யுனிக்ஸ் முறையில் அமைந்த எழுத்துருக்களை உருவாக்கினர். நா.கோவிந்தசாமியால் தமிழ்நெட் என்றதொரு எழுத்துருவை உருவாக்கினார். உமர் தம்பி தேனி இயங்கு எழுத்துருவை உருவாக்கினார். சுரதாவின் தமிழ் எழுதி யுனிகோடு முறையில் எழுத உதவும் எழுதியாகும். சுரபி என்ற தமிழ் எழுதி ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. மின்தமிழ் என்ற எழுதி வாப்டெக் (vabtech) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.


கூகிள் தமிழ் ஒலிமாற்றி மென்பொருள்

கூகிள் தமிழ் ஒலிமாற்றிப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் பரவிறக்க பதிப்பாக Input Method Editor [IME] என்கிற மென்பொருளை வழங்குகிறது. இதில் தமிழ் மூலபதிப்பை தரவிறக்கி விளக்கம் கூறியப்படி நிருவிக்க் கொள்ளலாம். அதன் பின் வேண்டிய இடங்களில் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம் அவை நோட்பேடோ அல்லது MS வேர்டாகவோ இருக்கலாம். தட்டச்சிடும் ரோமன் எழுத்துக்களின்[English] ஒலிகளுக்குத் தகுந்த தமிழ் எழுத்தை தட்டச்சிடும். சொந்த கணினியாக வைத்திருப்பவர்கள் இதை ஒருமுறை பதிப்பதன் மூலம் வலை தளங்கள் முதல் கணினி படங்கள் வரை தமிழில் அடிக்கலாம்.
http://www.google.com/ime/transliteration/


தமி்ழ் ஆங்கில மொழிப்பெயர்ப்பு மென்பொருள்கள்
.
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர்.

சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்).

மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் குறித்து, "சென்' குழுவைச் சேர்ந்த சோமன், தனலட்சுமி, ஆனந்தகுமார், மணிகண்டன் ஆகியோர் கூறியது:

கம்ப்யூட்டர் துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளில் இயற்கை மொழிகளை கம்ப்யூட்டருக்குள் புகுத்தும் முயற்சி நடக்கிறது. அந்தந்த நாட்டு மொழிகளில் பலரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் இயற்கை மொழி ஆய்வில் 2007ல் இருந்து ஈடுபட்டுள்ளோம். கம்ப்யூட்டர் மொழிப்பெயர்ப்புக்கு தேவையான மொழியியல் கருவி, துவக்கநிலை மொழிப்பெயர்பு சாதனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கலாம். தமிழ் சொல்வகை அடையாளப்படுத்தி, தொடர் பகுப்பான், உருபனியல் பகுப்பாய்வி போன்ற சாப்ட்வேர் மூலம் ஆங்கில சொற்றொடர்கள், வார்த்தை, பால்விகுதி, காலம் போன்றவற்றின் அடிப்படையில் தமிழில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. எந்த வினைச்சொல்லாக இருந்தாலும், எப்போது, எந்த பால் விகுதியை குறிக்கும் என கணித்து மொழிபெயர்க்கப்படும்.

வார்த்தைகளில் குறில், நெடில், வினை, மாத்திரை போன்ற அடிப்படை இலக்கணத்தையும் அடையாளம் காட்டும். எனவே, ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் உட்பட பலரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி எளிதாக தமிழில் மொழிப்பெயர்க்கலாம். ஆசிரியர்கள் உதவியின்றி இலக்கணத்தை கூட கற்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்தி மொழியிலும் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது; அடுத்தடுத்து பிற முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் உருவாக்கப்படும். ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை கூட அந்தந்த மொழிகளில் எளிதாக மொழிப்பெயர்த்து பயனடையலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு எளிமையான மொழிபெயர்ப்பு கருவியை வழங்குகிறது. அதன் பெயர் Microsoft காப்ஷன்ஸ் லாங்க்வேஜ் பேக் (CLIP) .இதன் மூலம் டூல்டிப் தலைப்புகளில் ஆங்கில பயனர் இடைமுகச் சொற்களுக்கு இணையான தமிழ் மொழிபெயர்ப்புகளை பார்க்கலாம்.

இதைப் பயன்படுத்த. உங்கள் சுட்டியை திரையில் நகர்த்தி, நீங்கள் மொழிபெயர்த்துப் பார்க்க வேண்டிய உரையின் மீது சிறிது நேரம் நிறுத்தினால் போதும், தமிழில் அதன் விளக்கம் காண்பிக்கபடும்.

பயனர்கள் மேலும் சொந்தமாக மொழிபெயர்ப்புகளை சேர்த்துக்கொள்ளலாம், அதைப் பிரதி எடுத்து வேறோரு இடத்தில் ஒட்டிக்கொள்ளவும் செய்யலாம்.

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்த....சொடுக்கவும்.

http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=4e5258d2-52f4-46b8-8b74-da2dbec7c2f7&DisplayLang=ta

http://www.amrita.edu/campuses/cbr/index.ph

கூகிள் மொழிப்பெயர்ப்பு

கூகிள் மொழிப்பெயர்ப்பு தளம் ஒருஇணையப்பக்கத்டிஅ எளீதில், ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்ய உதவும் மென்பொருள்கௌம். உதாரணமாக நீங்கள் ஒரு இணையப் பக்கத்தில் உலாவும் போது அதை மற்றவர்களுக்குத் தமிழில் பார்க்க உதவவேண்டு என்றால், இந்த உத்தியை பயன்படுத்தலாம்.
முதலில் இந்த பக்கத்திற்குச் சென்று, இடஹ்டு பக்கம் உள்ள translater dools ki என்ற தொடரைச் சொடுக்கவும். உங்களுக்குக் கூகிளீல் ஒரு கணக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு கனக்கை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.உங்கள் கூகிள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சுல்லை கொடுத்து உள்ளே சென்றுவிடுங்கள்.
அப்லோட் என்ற பொத்தானை அழுத்துங்கள்.சிறிது நேரம் கழித்து வரும் பக்கத்தில், உங்கள் கணினியில் உள்ள கோப்பு ஒன்றை ப்ரவுஸ் பொத்தானை அழுத்தி உங்கள் கூகிள் கணக்கில் தள ஏற்றம் செய்ய அயத்த படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு( இந்த மொழிப்பெயர்ப்பு செய்யப்படும் கோப்பிற்கு) ஒரு பெயரைச் சூட்டுங்கள். எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு என்பதை தெரிவு செய்துகொள்ளுங்கள்.
பிறகு அப்லோடு பார் மொழிப்பெயர்ப்பு பொத்தானை அழுத்துங்கள்.உங்கள் கோப்பு பரிசீலிக்கப்பட்டு மொழிபெயர்ப்பு செய்ய தயாராகி விடும்.
கூகிள் இரண்டு சாளரமாக –இடது பக்கம் கோப்பின் இருப்பு மொழியிலும், வலது பக்கம் நீங்கள் தேர்வு செய்த மொழியில் மொழிபெயர்க்க தயாராகவும் இருக்கும்.
மேல் வலது பக்கத்தில் பல பொத்தான்கள் உள்ளன.அதில் உங்கள் மொழி எழுத்தில் ஒரு பொத்தானை காணலாம். அது அமுங்கிய நிலையில் இருந்தால் நீங்கள் தட்டசிடுவது உங்கள் மொழியில் வரும். இது கூகிள் புக்மார்க்லேட் முறையில் வேலைசெய்யும்.
அவ்வப்போது உங்கள் உழைப்பை சேமித்துகொள்ள் சேமிப்பு பொத்தானை சொடுக்கவும். உங்கள் மொழிப்பெயர்ப்பு செய்த கோப்பு கூகிள் கணக்கில் இருக்கும். இதை நீங்கள் உங்களுக்கு வேண்டியவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.அல்லது ஒரு குழுவாக சேர்ந்து இந்த கோப்பை மொழிபெயர்க்கலாம். உங்கள் கூகிள் கணக்கில் இருந்து இந்த மொழிபெயர்க்கப்பட்ட கோபை தள்விறக்கம் செய்து உங்கள் சொந்த தளத்தில் தள ஏற்றமும் செய்துகொள்ளலாம்.

அகபே தமிழ் எழுதி

அகபே தமிழ் எழுதி தமிழில் எளிமையாகத் தட்டச்சு செய்ய உதவும் தமிழ் எழுதி மென்பொருள். இந்த தமிழ் எழுதியை இலவசமாக வலைப்பூக்களிலும், வலைத்தளங்களிலும் நிறுவிக் கொள்ள முடியும்.

அழகி மென்பொருள் (azhagi.com/docs.htm)

விஷி (எ) விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது. தன்னை நோக்கிக் காலம் விடும் சவால்களை ஆன்மீகப் பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது.இவரது அயராத முயற்சியால் உருவான மென்பொருள்தான் அழகி ஆகும்.
மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிச்சிறப்பு* ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு' (transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை (productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது). உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, Srithar, sreedhar, shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration). 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and straightforward transliteration).
ஒலியியல் முறையில், தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சம்ஸ்கிருதம், மராத்தி, கொங்கனி, ..., ...), தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்சு செய்ய வல்லது.

என்.எச்.எம் மென்பொருள்(new Horizon media)

சென்னையில் உள்ள கிழக்குப்பதிப்பக திரு.பத்திரிசேசாத்திரி அவரகளின் முழுமுயற்சியோடு திரு.கே.எஸ்.நாகராஜன் அவர்களால் இம்மென்பொருள் உருவாக்கப்பட்டது.இதுவரை வந்துள்ள தமிழ்ஒருங்குறியீட்டு மென்பொருள்களில் முதன்மையானது என்று கூறலாம்.இதனை இலவசமாக கணிப்பொறியில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.இம்மென்பொருள் தமிழ்மொழித் தவிர பிற இந்திய மொழிகளிலும் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கனியன் பூங்குன்றன் விருது இம்மென்பொருள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்லினம் மென்பொருள்

என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கிதைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் அறிமுகமாக வணிகப்பயன்பாட்டுக்காக வெளியிடபட்டது.

சர்மா சொற்பிழைச்சுட்டி மென்பொருள் (http://sarma.co.in/tamil/index.htm)

சொற்பிழைச் சுட்டிக்கான இம்மென்பொருட்கள் சொற்களின் எழுத்துப் பிழைகளை மட்டும் சுட்டுவதாக அமைந்துள்ளன.
சொற்பிழைச்சுட்டி மென்பொருள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருட்களிள் 35 வகையான (பட்டியலிலுள்ள, Unicode) எழுத்துருக்களையும் தானாகவே இனம் கண்டு சொற்பிழைகளைக் கண்டறிந்து மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளில் உள்ளவாறு (English spell checking) தவறான வார்த்தைகளின் அடியில் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டிடும். எனவே பயனாளர் குறிப்பிட்ட எழுத்துருவில் மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலம், தமிழ் இரண்டு உள்ளீடுகளையும் இனம் கண்டு தானாகவே சொற்பிழைகளைக் கண்டறியும்.

மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர் ( Tamil Wordprocessor)

ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களும் , அவரின் மாணாக்கர்களும் ஆவர். கணினித்துறையில் தொழில் புரியும் அவரது மகனும் இப்போது உதவுகிறாராம்.
மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர் ( Tamil Wordprocessor) என்ற தமிழ்மென்பொருள்
தமிழுக்கு ஒரு புதிய வரவாக அமைந்துள்ளது. கணினிமொழியியல் ( Computational
Linguistics) , மொழித்தொழில்நுட்பம் ( Language Technology) ஆகிய
அறிவியல், தொழில்நுட்பத்
துறைகளின் அடிப்படையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்துருக்கள் ( fonts) ஒருங்குறி உள்ளீட்டுமுறையில் ( Unicode )
அமைந்துள்ளன. தமிழ் இணையம்99 உட்பட நான்குவகை விசைப்பலகைகள் இடம்
பெற்றுள்ளன. தமிழ்
ஆவணங்களைப் பதிப்பிக்கத் தேவையான அனைத்து பதிப்புவசதிகளும் இடம்
பெற்றுள்ளன.இம்மென்பொருளில் சொற்பிழைதிருத்தி
, சந்திவிதி விளக்கம், அகராதி பயன்பாடு ஆகிய பல இன்றியமையாத பயன்பாடுகள்
நிறைந்துள்ளன. இம்மென்பொருள் பற்றிய அனைத்துத் தகவல்களும் நிகழ்ச்சி நிரல்
விவரம் இணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன. தமிழாசிரியர்களுக்குப் பெரிதும்
பயன்படக்கூடிய மென்பொருளாக இது அமையும். .

தமிழ் மின் அகராதி மென்பொருள் இலவசமாக..

இது கூக்ளியில் வந்திருக்கும் இலவச போர்ட்டபிள் மென்பொருள்.இதன் மூலம் மொழிமாற்றம் மட்டுமின்றி அர்த்தம் காணலாம்.இதனை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம்.இதனை நாம் டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம்..மேலும் இதனை நம்முடைய கணிப்பொறி STARTபோது தன்னிச்சையாக ஆரம்பிக்குமாறும் செட்டிங் செய்யலாம்.
தமிழ் அகராதி இலவசமாக தரவிறக்க கீழே சொடுக்கவும்.
http://denaldrobert.blogspot.com/2011/11/blog-post_25.html



இது கூக்ளியில் வந்திருக்கும் இலவச போர்ட்டபிள் மென்பொருள்.இதன் மூலம் மொழிமாற்றம் மட்டுமின்றி அர்த்தம் காணலாம்.இதனை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம்.இதனை நாம் டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம்..மேலும் இதனை நம்முடைய கணிப்பொறி START போது தன்னிச்சையாக ஆரம்பிக்குமாறும் செட்டிங் செய்யலாம்.


இதன் சிறப்பம்சங்களாக பன்மொழி அகராதி,கூக்ளி மற்றும் பிங் இணைய தேடுதல், OCR, தேர்வு செய்த மொழியினை எழுதும் பலகை (Virtual கீபோர்ட்) மற்றும் விக்கிபீடியா தேடுதல்.


இதன் சிறப்பம்சமாக நாம் தேடும் மொழியின் உச்சரிப்பையும் ஒலி வடிவில் கேட்கலாம்.நாம் தேர்வு செய்த அல்லது மொழி பெயர்ப்பு செய்த தகவல்கள் தேவை என்றால் கோப்பாக சேமிக்கும் வசதியும் உள்ளது.

இதனை பயன்படுத்தும் போது வேறு இடத்தில் கர்சரை கிளிக் செய்தால் இந்த அகராதி கடிகாரமாக மாறி கீழே உள்ளவாறு அழகாக காட்சி அளிக்கும்.நாம் வேறு பணியை செய்யும் போது அது நம்முடைய கணினியின் மேற்பரப்பிலேயே இருக்கும்.தேவையென்றால் அதில் கிளிக் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.தேவை இல்லாவிட்டால் அதனை close செய்வதன் மூலம் மீண்டும் டாஸ்க் பாரில் அமர்த்திக் கொள்ளலாம்.


இதம் மூலம் 65 மொழிகளை கையாளலாம்.இந்தியாவின் முன்னணி மொழியான ஹிந்தி,தமிழ் வட இந்திய மொழிகளான மராத்தி,குஜராத்தி மற்றும் தென்னிந்திய மொழிகளான மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்றவற்றையும் இதில் பயன்படுத்தலாம்.


குறள் தமிழ்ச் செயலி

மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது.
இதன் சிறப்பம்சங்கள் தமிழில் UNICODE, TSC, TAB, TAM, LIPI போன்ற எழுத்து வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம். தமிழில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையும் தமிழ் 99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும் புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.