/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, March 27, 2014

|1 comments


பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக நடைபெற்ற தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற  தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் இனிதே தொடங்கியது.

நிகழ்வின் தொடக்கமாகத் தலைமையுரையைப் பாரதிதாசன் பல்கலைககழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் முனைவர் எஸ். சுப்பையா அவர்கள் இலக்கியங்களைப் படித்தால் மன அமைதியுடன் மகத்தான வாழ்வும் கிடைக்கும். பழமை வாய்ந்த திருக்குறளின் பெருமையை எடுத்துரைத்தார். இலக்கியங்களின் பெருமையை இணையத்தின் வழியாகவே நாம் அறிந்து கொள்ளமுடியும்.இது காலத்தின் கட்டாயம் என்று கூறினார். தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் கருத்தரங்கோடு நின்றுவிடாமல் அதனை மக்கள், மாணவர்கள் பயன்படுத்தும் விதமாக இருக்க இக்கருத்தரங்கம் பெரிதும் பயன்பட வேண்டும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் அவர்கள் முனைவர் ஏ.இராம்கணேஷ் இணையத்தின் மூலம் தமிழ்மொழி நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது என்றும், தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் எதிர்க்காலத்தில் மாணவர்களால் வளர்க்கப்படும் என்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் பா. மதிவாணன் அவர்கள் இலக்கண நூற்பாக்களையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் கணினி வழியே இணைந்து இனி வருங்காலங்களில் இணையமும் தமிழும் நம் வாழ்வோடு இணைந்தது.பிரிக்க முடியாதது என்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் (ஸ்ரீரங்கம்), துணைவேந்தர் முனைவர் ந. முருகவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வாழ்த்துரையில் சட்டத்தமிழும் இணையமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய செயல்கள் என்னென்ன என்பதை பற்றி எஉத்துரைத்தார்.

 கருத்தரங்க சிறப்புரையாக உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தில் இந்திய தலைவர் முனைவர் மணி.மு.மணிவண்ணன் அவர்கள் தமிழரின் கடமை, தமிழ்க் கணினியின் பயன்பாடுகள் இன்று இணையத்தில் செல்வாக்குப் பெற்று வளர்ந்துவருகிறது. தமிழ் மின்னஞ்சல் போக்கு தமிழ் மொழியில் போற்றப்படும் இரகசியங்கள் கைப்பேசியின் பயன்பாடுகள், ஆங்கிலத்தில் பேசப்படும் சொற்களைத் தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை எடுத்டுரைத்தார்.

 மணி.மு.மணிவண்ணன் சிறப்புரை. பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ.இராம்கணேஷ், துணைவேந்தர் பொருப்புக்குழு உறுப்பினர் எஸ்.சுப்பையா, தமிழ்நாடு சட்டப்பள்ளி துணைவேந்தர் , பாரதிதாசன் பல்கலைகழகத் தமிழ்த்துறை தலைவர் ப.மதிவாணன், கருத்தரஙக ஒருங்கினைப்பாளர் முனைவர் துரை.மணிகணடன்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், திரு.செல்வமுரளி, பேராசிரியர் சி.சிதம்பரம், திரு.இலக்குவனார் திருவள்ளுவர் மற்றும் பலர்.Monday, March 24, 2014

தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பிதழ்.

|0 comments

தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பிதழ். வலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் அன்போடு கருத்தரங்கிற்கு அழைக்கின்றேன்.


Tuesday, March 11, 2014

சங்க இலக்கியமும் இணையப்பயன்பாடும்

|2 comments


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை. -- உருமு தனலட்சுமி கல்லூரி- தமிழாய்வுத்துறை (திருச்சிராப்பள்ளி) இணைந்து நடத்தும் சங்க இலக்கியமும் பிறதுறைகளும் என்ற தலைப்பில் பத்துநாள் பயிலரங்கம் (11-03-2014 முதல் 20-03-2014 வரை) இன்று காலை தொடங்கியது.தொடக்கவிழாவில் பட்டிமன்ற பேச்சாளர், பேராசிரியர், முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இப்பயிலரங்கில் முதல் அமர்வில் சங்க இலக்கியமும் இணையப்பயன்பாடும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன்.

1. தமிழ் இணையக்கல்விக்கழகம்.
2. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
3. தேவாரம் இணையப்பக்கம்
4. மதுரைத்திட்டம்
5. தமிழ் மரபு அறக்கட்டளை
6. வேர்களைத்தேடி
7. தமிழ் விக்கிப்பீடியா
போன்ற தமிழ் இணையப்பக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டினேன்.
முதல் படத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இ.ஆர்.இரவிச்சந்திரன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன், உருமு தனலெட்சுமி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கோ.வீரமணி முனைவர் கு.ஞானசம்பந்தன், கல்லூரி தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் முனைவர் கா.சேகர் மற்றும் பலர்.

அடுத்து படத்தில் நான் சிறப்புரையாற்றியது.


Tuesday, March 4, 2014

|0 comments

இன்று திருச்சிராப்பள்ளியில் தூய வளனார்க்கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடைபெற்ற மின் - ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற பத்து நாள் பயிலரங்கில் இணையத்தமிழ்- தமிழ் வலைப்பூக்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினேன். இதில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தஞ்சை பல்கலைக்கழகம் மாணவ மாணவிகள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


Saturday, March 1, 2014

உலகமயமாதல் பின்னணியில் வளர்ந்து வரும் தமிழ் கணினி முயற்சிகள் பயிலரங்கம்.

|3 comments


திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஐந்து நாள் தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வாக நான்காம் நாள் இன்று தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்பதை செயல்முறை விளக்கம் (எ.கலப்பை,முரசு,NHM ) மூலம் முனைவர் குண்சீலன், முனைவர் சிதம்பரம், முனைவர் துரை.மணிகண்டன் ஆகியோர் பயிற்ச்சி அளித்து வந்தோம். 60 மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்று வந்தனர். குணசீலன் அவர்கள் வலைப்பதிவு பற்றி சிறப்புரையாற்றினார். அடுத்து நான் சிறந்த தமிழ் வலைதளங்களை எடுத்துக்காட்டி பேசினேன்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சிதம்பரம், CIIL ஒருங்கிணைப்பாளர் திரு.பிரேம் அவர்களும் உடன் இருந்தனர்.