/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Latest Post

Tuesday, October 26, 2021

Online education in Indian Higher Education institution - இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்

|0 comments

 இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய ‘ இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி என்ற நூலை எழுதி அமேசானில் வெளியிட்டுள்ளார்.https://www.amazon.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-ebook/dp/B09BK3L23D

Friday, August 20, 2021

அகரமுதலி திட்டத்தில் கணினிக்கலைச்சொல் தொகுப்பு நிகழ்வு

|0 comments

 


முனைவர் துரை.மணிகண்டன், இணையத்தமிழ் ஆய்வாளர்


நிகழ்வில் கலந்துகொண்ட வல்லுநர்கள்இணைந்ததமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டன் கலைச்சொல்லை வழங்க இயக்குநர் தங்க.காமராசு பெற்றுக்கொண்டது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் 19-08- 2021 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள நகர நிருவாக வளாகத்தில்  தொடங்கியது.  மாலை 7 மணி வரை இந்தக் கூட்டம் சென்றது.  தமிழ்நாடு அரசின் அகரமுதலி திட்ட இயக்குனர் திரு தங்க. காமராசு அவர்களுடைய தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கணினி தொழில்நுட்பத்துறை வல்லுர்கள் கலந்துகொண்டு கலைச் சொற்களை உருவாக்குவதும், கணினி சார்ந்த கலைச் சொற்களைத் தொகுப்பதும்,   அதை எவ்வாறு மக்களிடமும், மற்றவர்களிடமும் கலைச்சொற்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற மூன்று அடிப்படை காரணங்களை மையப்படுத்திதான் இந்தக் கூட்டம் நடைபெற்றது.  இதில்  கணினி தமிழ், இணையத்தமிழ், மென்பொருள் வல்லநர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தார்கள். அப்படி முன் வைத்தவர்களில் நானும் ஒருவன்.

 இந்த கணினித்தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கி தரப்படுத்த வேண்டும் என்றும் இந்தக் கணினித்தமிழ் கலைச்சொற்களைக் குறிப்பாக அகரமுதலி திட்டத்தை மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கு எப்படி தமிழக அரசால் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் நிதி உதவி வழங்கி கணினித்தமிழ் பேரவையைத் தொடங்கியதோ அதுபோன்று இந்த அகரமுதலித் திட்ட இயக்கத்தையும் ஒவ்வொரு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் ஒரு குறைந்த அளவு நிதியை வழங்கி செயல்படுத்தினால் மிக விரைவாக இந்த அகரமுதலித் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என்ற எனது கருத்தைத் தெரிவித்தேன்.  

மேலும் அங்கே கலந்துகொள்ள வந்திருந்த 15 வல்லுர்களும் தங்களுக்குத் தெரிந்த கணினிகலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டுவரப் பனித்திருந்தார்கள். அந்த வகையில் நான் 184 கலைச்சொல்லை  அகரமுதலித் திட்ட இயக்குனர் திரு. தங்க.காமராசு  அவர்கள் வழங்கி அவருகள் பெற்றுக் கொண்டார்கள். 

இந்த நிகழ்வில் எங்களுக்கு சலிப்பு தட்டவில்லை. புதிய புதிய சொற்களையும் புதிய புதிய அறிவையும் பெற்றுக் கொண்டதைத் தவிர எந்த இடத்திலும் எனக்குச் சோர்வு தட்டவில்லை. தமிழ்மொழிக்கு  மிக ஆக்கப்பூர்வமான  செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அறிஞர்களும் பலாப்பழத்தை  உரித்துக் கொடுப்பது போன்றும், தேனை அப்படியே வாயில் ஊற்றுவது போன்றும் அவர்கள் வழங்கிய கருத்து இருந்த்து.  எனவே இந்த நிகழ்வில் கணினிக் கலைச்சொல்லாக்கதிற்கான ஒரு  முன்னெடுப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இதில் கலந்து கொண்ட அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

Tuesday, July 20, 2021

10,978 காவலர் படணிகளுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

|0 comments

 

10,978 இரண்டாம் நிலை காவலர் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை பணியிடத்துக்கான உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூலை 23 ல் இருந்து தொடங்குகிறது.


Monday, July 19, 2021

போட்டோஷாப்பை எவ்வாறு திறன்பேசியில் (mobile phone) பயன்படுத்தலாம்

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் பேராசிரியர் குணசீலன் கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோஷாப்பை எவ்வாறு திறன்பேசியில் (mobile phone) பயன்படுத்தலாம் என்பது குறித்த பயிற்சியின் மூன்றாவது காணொலியைக் காணலாம்.Saturday, July 17, 2021

தமிழில் போட்டோஷாப்பை பயன்படுத்துவது எப்படி?

|0 comments

 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் பேராசிரியர் குணசீலன் கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோசாப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த பயிற்சியின் இரண்டாவது காணொலியைக் காணலாம்.Friday, July 16, 2021

+2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு

|0 comments


 

+2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு


கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு 2020-2021 கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு செயல்முறை தேர்வு, 11 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மதிப்பெண் கணக்கிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. மேலும் இந்த மதிப்பெண்ணில் மாணவர்களுக்குத் திருப்தி இல்லை எனக் கருதும் மாணவர்களுக்குத் தனியாக பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தது.


Thursday, July 15, 2021

கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோஷாப் அறிமுகம்

|0 comments

 


தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் பேராசிரியர் குணசீலன் கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோசாப் அறிமுகத்தை இந்தக் காணொலியில் காணலாம்.