/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, December 28, 2019

கணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.

|36 comments



10. மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.
1.                     http://keepvid.com/    you tupe downlode saftwer.

11. எவ்வாறு  குறுஞ்செயலி உருவாக்குவது?
  1. https://www.youtube.com/watch?v=qb2n5Yr_zys
3.      https://www.youtube.com/watch?v=P8kppRBmBb8)  - சொக்கனின் குறுஞ்செயலி காணொலி.

12. எப்படித் தமிழில் தட்டச்சு செய்வது?
  1. https://www.youtube.com/watch?v=UgiQXOk_M2U
  2.       https://www.youtube.com/watch?v=DFFPwucs3Bc (NHM Writter)
குரல்வழி தட்டச்சு செயலி
13. தமிழில் மின் நூல் உருவாக்குவது
  1. https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs
14. எவ்வாறு மின்னூலை கூகுள் பிளேவில் இணைபது
15. இணையம் என்றால் என்ன? அதன் பயன்பாடு

16. தமிழில் ஃபுரகிராம் உருவாக்குவது
https://www.youtube.com/watch?v=zCNPwhRw2aY
17. தமிழில் OCR முறையில் உருவாக்குவது
www.youtube.com/watch?v=Kx3XJKYVKWs
18. தமிழில் வலைப்பதிவை உருவாக்குவது
2. https://www.youtube.com/watch?v=QIsizu-Y3TY
19. தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி
2.   https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw (தமிழில்)

20. தமிழ் கற்றல் கற்பித்தல் இணையதளம் & வலைப்பதிவு
3.      www.tamilacademy.com/
7.      http://tamilcube.com/
9.      http://edu.tamilclone.com/
21. தமிழ் இணைய நூலகங்கள்
8.   http://ilakkiyam.com/
22. தமிழ் எழுத்துரு மாற்றிகள்

            23. தமிழ் கணினிச் சார்ந்த இணையப்பக்கம் & வலைப்பதிவு.
          1.   http://www.techtamil.com/
          2.   http://www.zapmeta.co.in/
          3.   http://bestkulam.blogspot.in/
          5.   www.thozhilnutpam.com
          6.   www.suduthanni.bolgspot.in
          7.   www.tvs50.blogspot.in
          8.   www.pkp.blogspot.
                       9.      www.kaniyam.com/team/
                   10.  www.tamilarwiki.blogspot.in
                    11.  http://www.gnu.org/
                   12.  http://ilawasamenporul.blogspot.in
                   13.  http://ezilnila.com/archives/3031
         24. இணையப் பயன்பாடு புள்ளிவிபரக் கணக்கு
            http://www.internetworldstats.com/facebook.htm

        25. வலைப்பதிவு மொத்த லிஸ்ட்.
              http://www.valaitamil.com/tamilsites/
        26. கணினித் தமிழ் ஆய்விற்குப் பயன்படும் இணையதளங்கள்.
1..www.cict.org

27. ஆண்ட்ராய்டு உருவாக்கம்.
28. சொற்களைக் கண்டறியும் தளம்
29. apps உருவாக்கம் வலைப்பக்கம்.
2.   https://www.appypie.com/

30. ஆங்கில மொழிபெயர்ப்பு இணையதளம்.
http://www.easyhindityping.com/tamil-to-english-translation



Sunday, December 22, 2019

மணிவானதி MANIVANATHI: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி ...

|0 comments
மணிவானதி MANIVANATHI: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி ...: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்... காந்திகிராமம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்ற...

Saturday, December 21, 2019

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்

|2 comments
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்...

காந்திகிராமம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் தகவல் மையம் இணைந்து 19-12-2019 மற்றும் 20-12-2019 ஆகிய இருநாட்களில் நடத்திய “தமிழ்க் கணினி பயிலரங்கம்” முதல்நாள்
பல்கலைக்கழக பதிவாளர், மற்றும் பேராசிரியர்கள் ஆனந்தகுமார்,  இராசரெத்தினம்

நிறைவுரையாற்றிய வேளையில்...
சிறப்பிக்கப்பட்ட வேளையில்...
பயிற்சி பெற்றோர் பின்னூட்டக் கருத்துகள் வழங்கிய வேளையில்...
சான்றிதழ்கள் வழங்கிய வேளையில்..
மேடையில், முனைவர் வி. நிர்மலாராணி (பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்த்துறை. காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்), முனைவர் எம்.அன்புச்செல்வன் (துணை நூலகர்
மற்றும் நூலகர் (பொ), முனைவர் சி.சிதம்பரம் (உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை), முனைவர் துரை. மணிகண்டன் (உதவிப் பேராசிரியர், பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு) ஆகியோர்.

                                                                    தேனி.சுப்பிரமணி

                                            முனைவர் துரை.மணிகண்டன்

                                                          முனைவர் சி.சிதம்பரம்

 பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியபோது
 தமிழ்த்துறைத் தலைவர் பேரா.நிர்மலாதேவி அவ்ர்கள் சான்றிதழ் வழங்கியபோது

நிகழ்வில் கலந்துகொண்ட  பிற கல்லூரி   பேராசிரியர்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ்

|0 comments
தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறையில் 08/11/2019 அன்று அறக்கட்டளைப் பொழிவுகள் இனிதே தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக அறிவியல்தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் தியாகராஜன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

                                                      முனைவர் தியாகராஜன்

                                                  முனைவர் துரை. மணிகண்டன்

நிகழ்வின் தலைமையுரையாகப் பேராசிரியர் அன்னபூரனி இராமநாதன் அவர்கள் உரை வழங்கினார்.
முதல் பொழிவில் தேசியக்கல்லூரித் தமிழ்ததுறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன் அவர்கள் “அறிவியல் கலைச்சொல்லாக்க வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரை வழங்கினார்.
                                                           முனைவர் ச.ஈஸ்வரன்
அடுத்து பேராசிரியர் முனைவர் துரை. மணிகண்டன் “தமிழும் இணையமும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்வில் பல்கலைக்கழகப் புலத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் “

|0 comments
04/12/2019 அன்று திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் “ இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் “ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினேன். நிகழ்வில் சங்கத்தின் அமைச்சர் திரு. உதயகுமார் அவர்களும் துணை அமைச்சர் மற்றும் பார்வையாளர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சோத்கங்கா, சோதசிந்து, மின்பாடசாலை, NDL, NAD, MOOC, SWAYAM போன்ற இணையவழி கல்வித்திட்டம் பற்றி உரை வழங்கினேன்.




Saturday, June 15, 2019

“சமூக ஊடகங்களின் இன்றைய நிலை”

|0 comments


திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க அரங்கில் 5/6/2019 அன்று மாலை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் “சமூக ஊடகங்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் சிறு உரை வழங்கினேன்.
சமூக ஊடகங்கம் என்பதின் பொருளை விளக்கக்கூறி இன்று சமூக ஊடகங்களாக முகநூல், டிவிட்டர், வாட்சப் ,கூகுள் + ,ஆர்குட் ,இனஸ்டாகிராம் , யூடியூப் போன்றவைகளின் தோற்றம் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்து வழங்கினேன். சமூக ஊடகங்களினால் ஏற்படும் நன்மைகளாக கருத்துக்களைப் பகிர்வது, புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது , குழு உரையாடல் , வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொள்ளல், உலக அளவில் நடப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல் போன்ற பயனுள்ள தகவல்களை வழங்கினேன். மேலும் சமூக ஊடகங்களினால் ஏற்படும் தீமைகளாக தவறானபுகைப்படங்களை பதிவேற்றம் செய்வது தேவையில்லாத விடயங்களில் சிக்கிக்கொள்வது போன்ற செய்திகளையும் எடுத்துக்கூறினேன்.
இறுதியாக சமூக ஊடகங்களை நாம் நல்வழியில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம்
அடையலாம் என்று கூறினேன்.

நிகழ்வில் புனித சிலுவைக் கல்லூரி மாணவிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் தமிழ்ச்சங்க அமைச்சர் திரு. சிவக்கொழுந்து அவர்கள் துணை அமைச்சர் திரு. உதயகுமார் அவர்களும் உடன் இருந்தனர்.





Saturday, April 6, 2019

பின்ன சின்ன ஒருங்குறியைத் தமிழ் எழுதிகளில் (Tamil Editors) வெளிவர இ-கலப்பை, என்.எச்.எம் உள்ளிட்ட எழுதி ஆக்குநர் விரைந்து முயற்சி எடுக்க வேண்டும்.

|3 comments


அறிஞர்குழுவில் இடம்பெற்ற ஆய்வாளர்கள்.


பின்ன சின்ன ஒருங்குறிப்பணி இனிதே நிறைவேறியது. ஒருங்குறியில் ஏறவிருந்த 55 குறியீடுகளில், குறைகள் உள்ளன என்று தெரிவித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல,
தமிழக அரசு தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி, ஏறத்தாழ ஓராண்டு ஆய்வுக்குப்பின், 33 குறியீடுகளில் திருத்தம் செய்து, ஒருங்குறிச்சேர்த்தியத்திற்கு பரிந்துரைத்தது. தற்போது, ஒருங்குறிச்சேர்த்தியம், யுனிக்கோடு 12.0 வேற்றத்தில் (version) 51 வரலாற்று தமிழ்க்குறியீடுகளை சேர்த்துள்ளது. பார்க்க: http://www.unicode.org/charts/PDF/U11FC0.pdf.
2014ல், ஒருங்குறியில் 55 வரலாற்றுக்குறியீடுகளை சேர்க்கும் ஒரு முன்னீட்டை ஆய்வு செய்து, திருத்தங்கள் தேவை என்று அடியேன் எழுதிய கட்டுரை/மடலில் தொடங்கிய இப்பணி, முனைவர் இராம.கி, முனைவர் இர.வாசுதேவன் (இரவா கபிலன்), திரு.இரா.சுகுமாரன், திரு.ஆல்பர்ட்டு பெர்னாண்டோ ஆகியோருடன் இணைந்து எங்களின் கடின உழைப்பில் அரசுக்கு முன்வைக்கப்பட்டது.
பல தொல்லியல் அறிஞர்களோடு பணிசெய்த அந்த நாள்கள் இனிமையானவை.
தொல்லியல் அறிஞர்களின் ஆய்வும் அறிவும் தொழப்பட வேண்டிய ஒன்று. (தமிழ்த்துறையும் தொல்லியல் துறையும் ஒற்றுமையாக பணியாற்றினால் தமிழுக்கு எத்தனையோ சாதனைகளை செய்ய முடியும்.)
இதற்காக உழைத்த தொல்லியல் துறையறிஞர்கள்(கீழே பட்டியல் காண்க), இதற்கு முழுமையான வழிகாட்டலையும் ஆதரவையும் நல்கிய அன்றைய தமிழிணைய கல்விக்கழகத்தின் இயக்குநரும் நிதித்துறைச்செயலருமான திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப, தகவல் நுட்பத்துறையின் செயலர் திரு.டி.கே.இராமச்சந்திரன் இ.ஆ.ப, அறிஞர் குழுவின் தலைவராக இருந்து இதற்கான கூட்டங்கள் அனைத்தையும் வழிநடத்திய பேராசிரியர் பொன்னவைக்கோ, இந்த முன்னீட்டை (proposal) சீர்செய்து அனுப்ப, பொறுப்பையும் ஒருங்கிணைப்பையும் எடுத்துக்கொண்ட சென்னைப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத்தலைவர் பாலாசி ஆகிய அனைவருடனும் பணியாற்றிய காலம் மிக அறிவார்ந்தது, இனிமையானது. த.இ.க சார்பாக முனைவர் சேம்சு அவர்கள் அருந்துணையாயிருந்தார்.
திரு.இரமணசர்மா முதலில் வைத்த முன்னீடு (proposal) அண்மைக்கால அதாவது 18,19,20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சிலர் எழுதியிருந்த நூல்களில் இருந்த சான்றுகளை அடிப்படையாகக்கொண்டது. ஆங்கிலேயர்கள் கல்வெட்டுகளை, ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்து எழுதிய நூல்கள் அல்ல அவை. அதனால்தான் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தன. திருத்தங்கள் தேவைப்பட்டன. இதை அறிஞர் மன்றங்களில் எடுத்து வைத்து, அரசிடமும் எடுத்து வைத்தபின்னர், தமிழக அரசின் அறிஞர்குழு பொ.பி 8-9 ஆம் நூற்றாண்டில் இருந்து கல்வெட்டுகளையும் சுவடிகளையும் ஆய்வு செய்து திருத்தங்களை தந்தது. அதன் அடிப்படைகளையும் காரணங்களையும் சரியான முறையில் ஏற்றுக்கொண்டு திரு.இரமணசர்மா இறுதி முன்னீட்டை செய்து வரலாற்றின் தமிழ்க்குறியீடுகள் நல்ல முறையில் ஒருங்குறியில் சேர துணையாயிருந்தார்.
தமிழக அறிஞர் குழுவில் (Subject Experts Panel) கீழ்க்கண்ட அறிஞர்கள்/வல்லுநர்கள் இருந்தனர். இவர்களின் அரும்பணியில் குறியீடுகள் தெள்ளியதாகி திருத்தப்பரிந்துரை உருவாகியது. அந்த ஆவணத்தை அறிஞர் குழுவின் சார்பாக எழுதும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. பார்க்க : https://www.unicode.org/…/L20…/16062-tamil-frac-sym-fdbk.pdf
அவ்வாவணத்தின் 68ஆம் பக்கத்தில் இதில் பங்குபெற்ற அறிஞர்/வல்லுநரின் பெயர்களைக்காணலாம்.
1) முனைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ
2)
முனைவர் பி.டி.பாலாசி
3)
முனைவர் சு.இராசவேலு
4)
முனைவர் நடனகாசிநாதன்
5)
நாக.இளங்கோவன் (அடியேன்)
6)
முனைவர் ஆ.பதுமாவதி
7)
முனைவர் இராசகோபால்
8)
முனைவர் இராம.கி
9)
முனைவர் விசய வேணுகோபால்
10)
முனைவர் இர.வாசுதேவன் (இரவா கபிலன்)
11)
முனைவர் சாந்தலிங்கம்
12)
முனைவர் கலா சிரீதர்
13)
முனைவர் தமிழப்பன்
14)
முனைவர் சிவப்பிரகாசம்
15)
முனைவர் குழந்தைவேல்
16)
முனைவர் மார்க்சிய காந்தி
17)
முனைவர் சேம்சு
18)
முனைவர் வெங்கடாசலம்
19)
முனைவர் வெங்கடேசன்
முனைவர் சு.இராசவேலு, முனைவர் காந்திராசன், முனைவர் வெங்கடேசன் ஆகியோரொடு இணைந்து அடியேனும் மைசூரில் நடுவணரசின் தொல்லியல் நிறுவனத்தில் (ASI) மூன்று நாள்கள் கல்வெட்டுகளில் பின்ன சின்ன வரலாற்றுக்குறியீடுகளுக்கான சான்றுகளை திரட்டினோம். அது எனக்கு மறக்க முடியாத இனிமையான அறிவார்ந்த கல்வி நாள்கள் என்றால் மிகையல்ல.
அதொடு, சரசுவதி மகாலில், த.இ.கவிற்காக தமிழ்க்கணிமை சார்புடைய ஓர் ஆய்விற்கு அடியேனை திரு.உதயச்சந்திரன் பணித்திருந்தார். அங்கு கிடைத்த ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுநூல்கள் ஆவணம் எழுதுவதற்கு மிகவும் துணையாயிருந்தன.
முனைவர் இராம.கி முனைவர் இராசவேலு ஆகியோருடன் ஆவணம் ஆக்கும்போது படித்த கல்வெட்டாவணங்கள் பெரிய படிப்பினை. முனைவர் இராம.கியின் நூலகத்தில் உள்ள அத்தனை கல்வெட்டு நூல்களிலும் சான்றுகள் தேடியது எனக்கு அரிய துய்ப்பறிவு.
ஒருங்குறிச்சேர்த்தியம் வெளியிட்டிருக்கும் இந்தக்குறியீடுகள் தமிழ் எழுதிகளில் (Tamil Editors) வெளிவர இ-கலப்பை, என்.எச்.எம் உள்ளிட்ட எழுதி ஆக்குநர் விரைந்து முயற்சிகள் எடுக்க வேண்டும்.

நன்றி : நாக இளங்கோவன் முகநூல் பக்கம்.


அனைவருக்கும் மிக்க நன்றி