/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, February 23, 2018

வெள்ளச்சாமி நாடார் கல்லூரி, மதுரை

|0 comments


வெள்ளச்சாமி நாடார்  கல்லூரியில்  (மதுரை) ஒருநாள்   “தமிழ்க் கணினி” பன்னாட்டுப் பயிலரங்கம்  27-02-2018  செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளனர்.

Tuesday, February 13, 2018

கணினித் தமிழ் பயன்பாடுகள் - பயிலரங்கம்-சென்னை

|0 commentsவணக்கம்.
சென்னை, மேடவாக்கத்தில் செயல்படும் எங்கள் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை அறிவியல் கல்லூரி கணித்தமிழ்ப் பேரவையின் சார்பில் 19-2-2018, திங்கள் கிழமை அன்று கணினித் தமிழ்ப் பயன்பாடுகள் - பயிலரங்கு (Workshop on Applications in Tamil Computing) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கணிப்பொறித் துறை மாணவர்களுக்கும், தமிழ் மொழித் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பிற துறை மாணவர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகுந்த பயனளிக்கத்தக்க வகையில் இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிலரங்குக் கட்டணம் மற்றும் விவரங்கள் அடங்கிய அறிவிப்பு மடல் - அழைப்புமடல் மற்றும் பதிவுப் படிவம் (Registration Form) இணைக்கப்பட்டுள்ளது. பதிவுப் படிவத்தை நகல் எடுத்தோ அல்லது தங்கள் கல்லூரியின் மடல் தாளில் (Letter Head) பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பெயர்களைப் பட்டியலிட்டோ அனுப்பி வைக்கலாம்.
முதலில் பதிவு செய்பவருக்கே வாய்ப்பு (Fisrt Come First Serve) என்கிற அடிப்படையில் மாணவர்களின் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும். மாணவர் பதிவு ஏற்றுக்கொள்ளப் படுவதில் நிருவாகத்தின் முடிவே இறுதியானது.
தங்கள் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றுப் பயனடைந்திட அனுப்பிவைத்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பங்கேற்பாளர் அனைவருக்கும் WorkShop Kit, தேநீர், பகல் உணவு, மற்றும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.