/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, May 31, 2022

மேம்பட்ட கணித்தமிழ்க் கருத்தரங்கம் - திண்டுக்கல்

|0 comments

 

திண்டுக்கல் எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரித் தமிழ் துறையும், கணினி அறிவியல் துறையும் இணைந்து நடத்திய கணித்தமிழ்ப் பேரவை தொடக்க விழா மற்றும் மேம்பட்ட கணித்தமிழ்க் கருத்தரங்கம் என்ற தலைப்பில் 30. 5. 2022 திங்கட்கிழமை கல்லூரியின் காமராஜர் அரங்கத்தில் காலை 10:30 மணிக்கு இனிதே தொடங்கியது.

நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் நாகநந்தினி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

                                            முனைவர் நாகநந்தினி

நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் தே. லட்சுமி அவர்கள் தலைமை உரையை வழங்கினார். இதில் இணையத்தின் தோற்றம், இணையத்தில் தமிழ் எவ்வாறெல்லாம் இடம்பெற்றிருந்தது, பேரா. நா.  கோவிந்தசாமியின் இணையத்தமிழ் பங்களிப்பு குறித்தும் தனது தலைமையுரையில் விளக்கிக் கூறினார்.


                                                        முனைவர் தே. லட்சுமி

தொடர்ந்து நிகழ்வில் முதல் அமர்வில் இயற்கை மொழி ஆய்வு என்ற தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் மொழியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கா. உமாராஜ் அவர்கள் வழங்கினார்.

                                                    முனைவர் கா .உமாராஜ்

இயற்கை மொழி ஆய்வுக்குறித்துத் தெளிவாக விளக்கினார். இன்று இயற்கை மொழி ஆய்வு எவ்வாறெல்லாம் செயல்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறித்தும் கணினிக்கு மொழியை கற்றுக் கொடுக்கும் போது ஏற்படுகின்ற சிக்கல்களையும் அதைத் தீர்ப்பதற்கான தீர்வுகளையும் தெளிவாக விளக்கிக் கூறினார்.

மேலும் இயற்கை மொழி ஆய்வில் கணினியில் தமிழ் நுட்பங்கள் வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அதனால் பேச்சு தொழில்நுட்பமும் எவ்வாறெல்லாம் இன்று இணையத்தில்  வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது என்பதை குறிக்கும் மிகத் தெளிவாக விளக்கினார்.

அடுத்த அமர்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள்

 

                        இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன்

தமிழில் எழுதும்போது  ஏற்படும் சிக்கல்களாக சொற்பிழை, சந்திப்பிழை, இலக்கண பிழைகளை எவ்வாறு நாம் கணினிவழி திருத்தம் செய்யலாம்? என்பது குறித்த செய்திகளை அடிப்படையில் தமிழ் மென்பொருள்களின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் பயிற்சியை வழங்கினார்.

இன்று  இணையத்தில் தமிழ் மென்பொருள்கள் என்னென்ன இதுவரை தோன்றி இருக்கின்றன? அவற்றில் எவற்றையெல்லாம் நாம் பயன்படுத்த முடியும் என்பது குறித்து விளக்கினார்.  மேலும் இதுவரை தமிழில் தோன்றியுள்ள தமிழ் இலக்கணப்பிழை திருத்திகளைக் கூறி அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

நிகழ்வின் நிறைவு விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினர் இளைஞர் நலத்துறையின் பேராசிரியர் முனைவர் சு.ச. பாரி பரமேஸ்வரன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இதில் தமிழ் மொழியின் சிறப்பும், தமிழ் மொழி கடந்து வந்த பாதையும் இன்றைய இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக் குறித்தும் தெளிவாக விளக்கினார்.

                        முனைவர் சு.ச. பாரி பரமேஸ்வரன்

மேலும் இந்த நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து சுமார் 250 மாணவிகள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டனர்.


நிகழ்வின் இறுதியில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கு.பெரியசாமி அவர்கள் நன்றியுரை கூறினார்.

இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் லொ.ஆ.உமாமஹேஸ்வரி மற்றும் கணினி அறிவியில் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அ.சுப்பிரமணி அவர்களும் திறம்பட செயல்புரிந்தனர்.   கணினி அறிவியில் துறைத் தலைவர் முனைவர் சீ.கிருஷ்ணவேணி அவர்களும் கலந்துகொண்டும் சிறப்பித்தார்கள்.

                                        முனைவர் லொ.ஆ.உமாமஹேஸ்வரி 

Wednesday, May 11, 2022

பேராசிரியர் முனைவர் கு.விஜயா

|0 comments

 

 தமிழ் இணையக் கழகம் சார்பாக 08-05-2022 அன்று பேராசிரியர் முனைவர் கு.விஜயா அவர்கள் முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய  இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி என்ற நூல் குறித்த திறனாய்வு வழங்கிய காணொலி.