/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, February 13, 2023

‘இணையத்திற்கோர் பாலம் அமைப்போம்’ கணினித்தமிழ் பயிற்சி

|0 comments

 


முனைவர் மு.பழநியப்பன் அவர்கள் துரை.மணிகண்டன் எழுதிய தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் நூலை மாணவிக்குப் பரிசாக வழங்குகின்றார். 
புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும், கலை அருவி இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய  ‘இணையத்திற்கோர்  பாலம் அமைப்போம்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கணினித் தமிழ் பயிலரங்கம் பிப்ரவரி 01.02 - 2023 ஆம் நாள் ஜெ.ஜெ கல்லூரி கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு.தயாநிதி அவர்கள் வரவேற்பு வழங்கினார்.

தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ. பரசுராமன் அவர்கள் தொழில்நுட்பங்களில் இன்றைய வளர்ச்சி குறித்துச் சுருக்கமாக தெளிவுப் படுத்தினார். முதல் அமர்வில், முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் தமிழ் மென்பொருள்களின் உள்ளடக்கங்கள் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.


 தமிழ் மென்பொருள்களின் வரலாறு, அதன் தோற்றம் வளர்ச்சி குறித்தும், இன்று தமிழ் மென்பொருளாக வளம் வந்து கொண்டிருக்கின்ற மென்தமிழ் சொல்லாளர், பொன்மொழி, பொன்விழி, ஒற்றன், அழகி, யாப்பு மென்பொருள், ஓவன், போன்ற மென்பொருள்களின் பயன்பாடுகளை இணைவழியில் மாணவர்களுக்குப் பயிற்சி மூலம் வழங்கினார்.

தொடர்ந்து இரண்டாவது அமர்வில் திருவாடனை அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறை தலைவர் மு. பழநியப்பன் அவர்கள் இணையதமிழ் கடல் என்ற தலைப்பில் உரை வழங்கினார். இன்று இணையத்தில் கிடைக்காத எந்த செய்தியும் இல்லை என்பதை மிகச் சுருக்கமாக பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். தொடர்ந்து இரண்டாவது நாள் நிகழ்வு கல்லூரியின் உதவி பேராசிரியர் முனைவர் சு.வாசகி  அவர்கள் இணையத்தமிழ் வலைப்பக்கம் உருவாக்கமும் விரிவாக்கம் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு கார்த்திகேயன் லைப்பக்கம் உருவாக்கமும் அதன் மூலம் வருமான ட்டுதலும் என்ற தலைப்பில் மாணவர்களுக்குப் பயிற்சியை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் ஐந்திற்கும் மேற்பட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்றனர்.
Saturday, February 11, 2023

கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்களுக்கு கணினிப் பயிற்சி

|0 comments

                                         ஆட்சிமொழிப் பயிலரங்கம்தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ்ப் பயிற்சி  - கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்களுக்கு....

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும்சிறப்புமாக 07,08- 02 – 2023  ஆகிய இரு தினங்களில் கன்னியாகுமரி (நாகர்கோவில்) மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

07-02-2023 அன்று கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி அ.சிவப்பிரியா அவர்கள் தலைமையில் நிகழ்வு தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி அவரகள் வரவேற்புரை வழங்கினார்.

                        உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி

முதல் அமர்வில் முனைவர் கா. சரவணன் அவர்கள் ஆட்சி மொழி வரலாறும் சட்டமும் என்ற தலைப்பில் அலுவலர்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அன்று மதியம் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர்  திருமதி செ. கனகலட்சுமி அவர்கள் ஆட்சி மொழி அரசாணைகளும் செயலாக்கமும் என்ற பொருள் உரை வழங்கினார்

திருவாரூர் முதுகலை தமிழாசிரியர்  இராசகணேசன் அவர்கள் தமிழில் குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியம்மாக்கள் என்ற தலைப்பில் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

                        முதுகலை தமிழாசிரியர்  இராசகணேசன்

தொடர்ந்து 08-02-2023 இரண்டாம் நாள் நிகழ்வில் முதுகலை தமிழாசிரியர் திரு கோமல் தமிழ் முதல்வன் அவர்கள் அலுவலர்களுக்கு கோப்புகளை எழுத தேவைப்படும் மொழி பயிற்சியை வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி அவர்கள் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தார். 


மாவட்ட ஆட்சியர் பி. என். ஸ்ரீதர்  மற்றும் துரை.மணிகண்டன், பேரா.வேணுகுமார், ப.ஆனந்தநாயகி, தே.ஷீஜா, கவிஞர் தமிழ்க்குழவி குறளகம்

 இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் (கணினித்தமிழ்) குறித்த உரையைப் பயிற்சியுடன் வழங்கினார்.

பயிற்ச்சியல் கலந்துகொண்டவருகள் அனைவருக்கும் ஒருங்குறியில் தட்டச்சு செய்து கோப்புகளை அனுப்புவது? எப்படி? என்று பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு சந்தேகங்களை என்னிடம் முன் வைத்தனர். அனைத்திற்கும் கணினிவழியில் தெளிவான முறையில் விளக்கம் அளித்தேன்.

 நிகழ்வின் இறுதியாக  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி. என். ஸ்ரீதர் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி கருத்துரை வழங்கினார்.

            நிகழ்வில் பரிசு வழங்கி சிறப்பித்த மாவட்ட ஆட்சியர்

இந்நிகழ்வில்
 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள்  100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.


நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்ற அரசு அலுவலர்கள்

Friday, February 10, 2023

அரசு அலுவலர்களுக்கு இணையத்தமிழ்ப் பயிற்சி

|0 comments

   


தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ் பயிற்சி  - திருவாரூர்  மாவட்ட அலுவலர்களுக்கு....

திருவாரூர் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும்சிறப்புமாக ஜனவரி 5,6 – 2023  ஆகிய இரு தினங்களில் திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி அவர்கள் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தார். உடன்  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் ப. வேல்முருகன் அவர்களும் உரை வழங்க வருகைதந்திருந்தார்.

இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள்  100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.

இதனடிப்படையில் இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கமாக 06-01--2023-   அன்று இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் (கணினித்தமிழ்) குறித்த உரையைப் பயிற்சியுடன் வழங்கினார்.இப் பயிற்ச்சியில் ஒருங்குறியில் எவ்வாறு தட்டச்சு செய்வது? ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி அலுவலக கோப்புகளை அனுப்பவது? தமிழக அரசு தரப்படுத்தியுள்ள தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்தும் முறை, மருதம் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்துதல் குறித்த இணையவழியாக நேரடியாகப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஆர்வமுடன் பலர் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து காட்டினார்கள்.


தொழில்நுட்பங்களில் தமிழ்

|0 comments


 

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் நெல்லூர் சத்யமூர்த்தி சுப்ரமண்யன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு 19-01-2023 அன்று நடைபெற்றது. நிகழ்வின் முன்னதாக, தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ப.சண்முகம் அவர்கள் வரவேற்புரை நல்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். துணைமுதல்வர் முனைவர் ஸ்ரீரா.சத்தியநாராயணன் அவர்கள் நிகழ்விற்கு முன்னிலை வகிக்க கலைப்புல முதன்மையர் முனைவர் ச.லெட்சுமி அவர்கள் வாழ்த்துரை நல்கினார். 

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர் அரசு கலைக் கல்லூரி (நவலூர் குட்டப்பட்டு) தமிழாய்வுத்துறைத் தலைவர், இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் தொழில்நுட்பங்களில் தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  

இந்நிகழ்வில் தமிழ் மென்பொருள்களின் பயன்பாடுகள் குறித்து மென்தமிழ் சொல்லாளர், பொன்விழி, யாப்பு மென்பொருள் பற்றிய விவரங்களை மாணவர்களுக்குப் பயிற்சி மூலம் விளக்கினார்.

நிகழ்வில் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பிற துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்கள்.  நிகழ்வினை தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் திரு.சு.திருக்குமார்  ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.