ஆட்சிமொழிப் பயிலரங்கம்
தமிழ் வளர்ச்சித் துறையின்
சார்பாக கணினித்தமிழ்ப் பயிற்சி - கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்களுக்கு....
கன்னியாகுமரி
மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக 07,08- 02
– 2023 ஆகிய இரு தினங்களில் கன்னியாகுமரி (நாகர்கோவில்) மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
07-02-2023 அன்று கன்னியாகுமரி
மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி அ.சிவப்பிரியா அவர்கள்
தலைமையில் நிகழ்வு தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்ட தமிழ்
வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி அவரகள்
வரவேற்புரை வழங்கினார்.
முதல் அமர்வில் முனைவர் கா. சரவணன்
அவர்கள் ஆட்சி மொழி வரலாறும் சட்டமும் என்ற தலைப்பில் அலுவலர்களுக்கு சட்டம்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அன்று மதியம் தமிழ் வளர்ச்சித்
துறை உதவி இயக்குனர் திருமதி செ. கனகலட்சுமி
அவர்கள் ஆட்சி மொழி அரசாணைகளும் செயலாக்கமும் என்ற பொருள் உரை வழங்கினார்
திருவாரூர் முதுகலை
தமிழாசிரியர் இராசகணேசன் அவர்கள் தமிழில்
குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியம்மாக்கள் என்ற தலைப்பில்
அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
தொடர்ந்து 08-02-2023 இரண்டாம் நாள் நிகழ்வில் முதுகலை தமிழாசிரியர் திரு கோமல் தமிழ் முதல்வன் அவர்கள் அலுவலர்களுக்கு கோப்புகளை எழுத தேவைப்படும் மொழி பயிற்சியை வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறையின்
உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி அவர்கள் இணையத்தமிழ்
ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தார்.
மாவட்ட ஆட்சியர் பி. என். ஸ்ரீதர் மற்றும் துரை.மணிகண்டன், பேரா.வேணுகுமார், ப.ஆனந்தநாயகி, தே.ஷீஜா, கவிஞர் தமிழ்க்குழவி குறளகம்
இணையத்தமிழ் ஆய்வாளரும்
பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் (கணினித்தமிழ்) குறித்த உரையைப் பயிற்சியுடன் வழங்கினார்.
பயிற்ச்சியல் கலந்துகொண்டவருகள் அனைவருக்கும்
ஒருங்குறியில் தட்டச்சு செய்து கோப்புகளை அனுப்புவது? எப்படி? என்று பயிற்சி
வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு சந்தேகங்களை என்னிடம் முன்
வைத்தனர். அனைத்திற்கும் கணினிவழியில் தெளிவான முறையில் விளக்கம் அளித்தேன்.
நிகழ்வின் இறுதியாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி. என். ஸ்ரீதர் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி கருத்துரை வழங்கினார்.
நிகழ்வில் பரிசு வழங்கி சிறப்பித்த மாவட்ட ஆட்சியர்
இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் 100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.
கலக்குங்க