/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, February 13, 2023

‘இணையத்திற்கோர் பாலம் அமைப்போம்’ கணினித்தமிழ் பயிற்சி

 


முனைவர் மு.பழநியப்பன் அவர்கள் துரை.மணிகண்டன் எழுதிய தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் நூலை மாணவிக்குப் பரிசாக வழங்குகின்றார். 
புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும், கலை அருவி இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய  ‘இணையத்திற்கோர்  பாலம் அமைப்போம்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கணினித் தமிழ் பயிலரங்கம் பிப்ரவரி 01.02 - 2023 ஆம் நாள் ஜெ.ஜெ கல்லூரி கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு.தயாநிதி அவர்கள் வரவேற்பு வழங்கினார்.

தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ. பரசுராமன் அவர்கள் தொழில்நுட்பங்களில் இன்றைய வளர்ச்சி குறித்துச் சுருக்கமாக தெளிவுப் படுத்தினார். 



முதல் அமர்வில், முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் தமிழ் மென்பொருள்களின் உள்ளடக்கங்கள் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.


 தமிழ் மென்பொருள்களின் வரலாறு, அதன் தோற்றம் வளர்ச்சி குறித்தும், இன்று தமிழ் மென்பொருளாக வளம் வந்து கொண்டிருக்கின்ற மென்தமிழ் சொல்லாளர், பொன்மொழி, பொன்விழி, ஒற்றன், அழகி, யாப்பு மென்பொருள், ஓவன், போன்ற மென்பொருள்களின் பயன்பாடுகளை இணைவழியில் மாணவர்களுக்குப் பயிற்சி மூலம் வழங்கினார்.

தொடர்ந்து இரண்டாவது அமர்வில் திருவாடனை அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறை தலைவர் மு. பழநியப்பன் அவர்கள் இணையதமிழ் கடல் என்ற தலைப்பில் உரை வழங்கினார். இன்று இணையத்தில் கிடைக்காத எந்த செய்தியும் இல்லை என்பதை மிகச் சுருக்கமாக பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். தொடர்ந்து இரண்டாவது நாள் நிகழ்வு கல்லூரியின் உதவி பேராசிரியர் முனைவர் சு.வாசகி  அவர்கள் இணையத்தமிழ் வலைப்பக்கம் உருவாக்கமும் விரிவாக்கம் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு கார்த்திகேயன் லைப்பக்கம் உருவாக்கமும் அதன் மூலம் வருமான ட்டுதலும் என்ற தலைப்பில் மாணவர்களுக்குப் பயிற்சியை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் ஐந்திற்கும் மேற்பட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்றனர்.




0 comments: