/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, October 23, 2018

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரித் தமிழாய்வுத்துறை

|0 comments
முனைவர் திராவிடமணி அவர்கள் வரவேற்ப்புரை உடன் பேராசிரியர் சுகுமாறன் துறைத்தலைவர் திராவிட ராணி.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் 15/10/2018 அன்று ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் சிறப்போடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வை முன்நின்று நடத்தியவர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திராவிடராணி அவர்கள் ஆவார். இதற்கு முழுமுயற்சி எடுத்தவர் தமிழ்த்துறைப் பேராசிரியர் திராவிடமணி ஆவார்.

       தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திராவிடராணி அவர்கள் வாழ்த்துரை வழங்கியது.

மிக நேர்த்தியாக நடத்தப்பட்ட இந்த பயிலரங்கம் தமிழ் இணையத்தின் ஒரு மைல் கல் என்றுதான் சொல்வேன். தமிழ்த்துறைக்கு ரூசோ திட்டத்தின் மூலம் ஒரு கணினி ஆய்வுக்கூடத்தை நிறுவியுள்ளனர். 20 கணிப்பொறி மற்றும் இணைய இணைப்போடு இருந்தது. நானும் பல பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு இணையத்தமிழ் குறித்து சிறப்புரை ஆற்ற சென்றிருக்கின்றேன். ஒரு அரசு கல்லூரியில் ஒரு கணினித் தமிழ் ஆய்வுக்கூடத்தைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

                             கல்லூரி பேராசிரியைகள் சிறப்புச் செய்தல்.

நான் இணையத்தில் சொல்ல சொல்ல அவர்கள் உடனுக்குடன் செய்துமுடித்த பாங்கு மாணவிகளின் ஆற்றலையும் ஆர்வத்தையும் பார்க்க முடிந்தது.
இணையம் தோற்றம் அதன் வளர்ச்சி, இணையத்தில் தமிழ்த் தட்டச்சுப்பயிற்சி, வலைப்பூ உருவாக்கம், தமிழ் இணையக்கல்விக்கழகம், மற்றும் பல இணைய இதழ்கள் ( பதிவுகள், முத்துக்கமலம், திண்ணை, தேவாரம், வல்லமை) பற்றிய அறிமுகம், அதில் எவ்வாறு ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வெளியிட வேண்டும் என்ற கருத்துரைகளை வழங்கினேன்.


               தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்.

அரசு கல்லூரியில் பணியாற்றிய தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் 16 மேற்பட்டோர்கள் இந்தப் பயிற்ச்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.


Thursday, October 18, 2018

Pondicherry Global Economic Summit 2018 - Fifth World Tamil Economic Conference

|0 comments

    பாண்டிச்சேரியில் உலகப் பொருளாதார உச்சிமாநாடு 2018, ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 12,13,14 - 10- 2018 அன்று சங்கமித்திரா விழா மன்றத்தில் இதன் தலைவர் முனைவர் வி.ஆர். எஸ்.சம்பத் அவர்களின் தலைமையில் சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெற்றது. தமிழ் பொருளாதார மாநாட்டில் தமிழகம், இந்தியா மற்றும் 30 உலக நாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் கலந்துகொண்டு தமது நாட்டில் நடைபெறும்,  நடைபெற இருக்கின்ற பொருளாதார நிலை மற்றும் வணிகம் சார்ந்த நிகழ்வுகளைத் திறம்பட எடுத்துக்கூறினார்கள்.

    இந்நிகழ்வில் சசிந்திரன் முத்துவேலு(கயானா), கென்னத் ஈஸ்வரன் (மலேசியா), லோகிநாயுடு ( தென் ஆப்பிரிக்கா), பாலு பாலேந்திரா(ஆஸ்திரேலியா), ரோஜர் லேட்சமன் (தென் ஆப்பிரிக்கா), ஏ.எஸ்.இளவரசன் (ஐக்கிய அரபு அமீரகம்) பி.திருநாள்கரசு(சிங்கப்பூர்), பிளேஸ் கண்ணன் (அமெரிக்கா), இதயதுல்லா சுலைமான் (ஓமன்), முனைவர் பி.சண்முகராஜ் (லண்டன்), சுசீந்தரன் முத்துவேலு (நியு கினியா) பிரகி பிள்ளை(தென் ஆப்பிரிக்கா), ஜேக்கப் ரவிபாலன்(லண்டன்), திருமதி ஜெயந்தி மாலா சுரேஸ் (ஐக்கிய அரசு அமீரகம்), முனைவர் எம்.மாரிமுத்து (மலேசியா), முனைவர் வி.ஜானகிராமன் (அமெரிக்கா), முனைவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், மோசஸ் வீராசாமி நாகமுத்து( கயனா நாட்டின் பிரதம மந்திரி), பரமசிவம் பிள்ள வையாபுரி (மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர்) யோகிதா சாமிநாதன்(மொரிஷியஸ்) மற்றும் பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகள், இந்தியாவைச் சார்ந்த பல்வேறு தொழில் வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள நிர்வாகத் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கி சிறபித்தார்கள்.


               மாநாட்டின் தொடக்க விழாவின்போது பல்வேறு நாட்டின் தலைவர்கள்.



மாநாட்டில் பேரா.மு.முத்துவேலு (மாநாட்டின் செயலாளர்)  அவர்களுக்கு மொரிசீயஸ் நாட்டு குடியரசு தலைவர் மரியாதை செய்தபோது..


முனைவர் துரை.மணிகண்டன் (Dr.Durai.Manikanadan)


முனைவர் துரை.
     இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. அதில்  ஒரு அமர்வாக “தமிழ் மொழியின் மூலம் வணிகத் தொடர்புகளும் விழைதொழில் வளர்ச்சியும்” (Business communication anad professional ethics through Tamil language)என்ற தலைப்பில் மாண்புமிகு தமிழக கலாச்சாரத்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன்  தலைமையில் மலேசியாவை சேர்ந்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவர் முனைவர் எம்.மாரிமுத்து அவர்களும்,  ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் அமைப்பாளர் முனைவர் வி.ஜானகிராமன் அவர்களும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் மாநிலக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு அவர்களுடன்  திருச்சிராப்பள்ளியில் இயங்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லுரி தமிழ்த்துறைத் தலைவர்  முனைவர் துரை.மணிகண்டன் அவர்களும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.
அதில் முனைவர் துரை.மணிகண்டன் “தொழில்நுட்ப வழியில் தமிழ்மொழியின் ஊடாக வணிகம் சிறக்க என்ன வழிமுறைகள்” என்ற தலைப்பில்  உரையாற்றினார். இதில் அவரின் கருத்தாக தமிழ்மொழியின் வழி வணிகத்தை நம்மால் பெருக்க வழியுண்டு அதற்கு நாம் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன என்றார். உலகில் இருக்கும் மக்களிடம் நம் பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்ய தடையாக இருப்பது மொழியே. இதனை நன்கு உணர்ந்து மொழி தடையாக இருக்காமல் அவரவர் தாய்மொழியிலேயே உலகில் வாணிகம் நடந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அப்படி நடக்க வேண்டுமெனில் அவரவர் தாய் மொழியிலேயே (தமிழில்) உலகநாடுகளில் இருக்கும் மக்கள் பொருளை வாங்கிக்கொள்ள செல்பேசி மொழிபெயர்ப்புத்(Speech translation) தேவை அதற்கான மென்பொருளை நாம் உலக அரங்கில் உருவாக்க வேண்டும் என்றார். மேலும் உலக அளவில் தமிழ்மொழிக்கென தனியான சொற்கோவையை (Tamil word net) உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தில் சிறுகடைகளில் இருந்து பெரிய பல்பொருள் அங்காடி வரையிலும் விற்பனை செய்யும் கடைகளில்  தமிழில் பற்றுச்சீட்டை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத நிறுவனங்களுக்குத் தனியாக 2 சதவீதம் வரியை உயர்த்தி கட்டவேண்டுமென்று தமிழக அரசு ஆணையை வெளியிட்டால் தமிழில் தொழில்நுட்பம் வளரவும் புதிய தமிழ் மென்பொருள் உருவாகவும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்றார். உள்நாட்டுப் உற்பத்திப் பொருளை விற்பனைசெய்ய சிறிய குறுஞ்செயலிகளை (Smart application) உருவாக்கி ஒன்றினைக்கலாம். இதனால் வாங்குவோர் விற்போருக்கு இடையே  இருக்கும் இடைவெளி குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் விற்பனை மற்றும் வியாபாரம்  உலக அரங்கில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

முனைவர் மு.முத்துவேலு,  திரு.க.பாண்டியராஜன்,  மொரீசியசு நாட்டுக் குடியரசுத் தலைவர் (மேதகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, முனைவர் துரை.மணிகண்டன்,  முனைவர் வி.ஆர் சம்பத் , முனைவர் வி.ஜானகிராமன், முனைவர் எம்.மாரிமுத்து.


முனைவர் மு.முத்துவேலு,  திரு.க.பாண்டியராஜன்,  மொரீசியஸ் நாட்டுக் குடியரசுத் தலைவர் (மேதகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, முனைவர் துரை.மணிகண்டன்,  முனைவர் வி.ஆர் சம்பத் , முனைவர் வி.ஜானகிராமன், முனைவர் எம்.மாரிமுத்து.


அமைப்பாளர் மாநாட்டுக்குழுத்  தலைவர் முனைவர் வி.ஆர்.எஸ்.சமபத் அவர்கள்.

Thursday, October 11, 2018

“International Workshop on Tamil Research through Computer Technology”

|1 comments

“International Workshop on Tamil Research through Computer Technology” was conducted on October 8, 2018 in Department of Linguistics, Bharathiyar University, Coimbatore, Tamilnadu in collaboration with TAMIL UNITED, Mechaniscburg-USA. The Inaugural Function was started at 10.15 am. Prof. V.M. Subramanian, Head of the Department of Linguistics, Bharathiar University welcomed the guests and the audience. Prof. Dr. K. Karunakaran, Former Vice-chancellor, Tamil University, Thanjavur inaugurated the workshop and Prof. A. Kamatchi , Secretary, Tami Unlimited offered felicitation. Dr. N. Ramesh, Assistant Professor, Department of Linguistics, Bharathiar University gave vote of thanks. The Inaugural Function was followed by a technical session. Prof. S. Rajendran, Amrita University, Coimbatore delivered a lecture on “Computational Lexical Semantics” by showing a demo on “Tamil Onto-thesaurus”. Prof. A. Kamatchi delivered a lecture on “Grammatical Corpus for Tamil” substantiating it with a demo. Dr. K. Umaraj Assistant Professor, Department of Madurai Kamaraj University delivered a lecture on “Making Dictionary for Sangam Tamil”. His lecture covered many aspects of Tamil computing including speech analysis. Dr. Durai Manikandan of Bharathidasan University Constituent College, Tiruchirappalli delivered a lecture on “How to create a Blog?”. It was a very useful one as many participants learned through his active demonstration how to make a blog. All the lectures were very useful and well received by the audience. The Valedictory Function was held on the same day after the technical session. Dr. N. Ramesh welcomed the gathering. Dr. P. Thirunavukkarasu, Member, Vice-Chancellor’s Committee, Bharathiar University delivered the valedictory address and distributed the certificates. Dr. K. Umaraj, delivered a special address. Dr.V.M. Subramanian gave vote of thanks. Nearly 70 registered participants attended the workshop and received certificates. According to their feedback the workshop was very useful. They wanted it to be a long one. Thanks to Mrs. Suganthi Nadar the founder of Tamil Unlimited for sponsoring the program. I have learnt that TAMIL UNLIMITED is running such programs throughout Tamil Nadu for promoting Tamil Computing. Hats off to it.








Friday, October 5, 2018

one day Workshop on Tamil Research through Computer Technology.

|0 comments
Department of Linguistics, Bharathiar University in collaboration with Tamil Unlimited,USA organize A one day Workshop on Tamil Research through Computer Technology. பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறையும் அமெரிக்காவிலுள்ள தமிழ் அன்லிமிடேட் (தமிழ் அநிதம்) என்ற நிறுவனமும் இணைந்து கணினி தொழிற்நுட்பம் வழி தமிழ் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டு பயிற்சி பட்டறையை வரும் 8/10/2018/அன்று பல்கலைக்கழக மொழியியல் துறையில் நடத்தவுள்ளனர். அனைவரும் வருக.