முனைவர் திராவிடமணி அவர்கள் வரவேற்ப்புரை உடன் பேராசிரியர் சுகுமாறன் துறைத்தலைவர் திராவிட ராணி.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார்
அரசு மகளிர் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் 15/10/2018 அன்று ஒருநாள் தமிழ் இணையப்
பயிலரங்கம் சிறப்போடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வை முன்நின்று நடத்தியவர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திராவிடராணி அவர்கள் ஆவார். இதற்கு முழுமுயற்சி எடுத்தவர்
தமிழ்த்துறைப் பேராசிரியர் திராவிடமணி ஆவார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திராவிடராணி அவர்கள் வாழ்த்துரை வழங்கியது.
மிக நேர்த்தியாக நடத்தப்பட்ட
இந்த பயிலரங்கம் தமிழ் இணையத்தின் ஒரு மைல் கல் என்றுதான் சொல்வேன். தமிழ்த்துறைக்கு
ரூசோ திட்டத்தின் மூலம் ஒரு கணினி ஆய்வுக்கூடத்தை நிறுவியுள்ளனர். 20 கணிப்பொறி மற்றும்
இணைய இணைப்போடு இருந்தது. நானும் பல பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு இணையத்தமிழ்
குறித்து சிறப்புரை ஆற்ற சென்றிருக்கின்றேன். ஒரு அரசு கல்லூரியில் ஒரு கணினித் தமிழ் ஆய்வுக்கூடத்தைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
கல்லூரி பேராசிரியைகள் சிறப்புச் செய்தல்.
நான் இணையத்தில் சொல்ல சொல்ல அவர்கள் உடனுக்குடன் செய்துமுடித்த பாங்கு மாணவிகளின்
ஆற்றலையும் ஆர்வத்தையும் பார்க்க முடிந்தது.
இணையம் தோற்றம் அதன் வளர்ச்சி,
இணையத்தில் தமிழ்த் தட்டச்சுப்பயிற்சி, வலைப்பூ உருவாக்கம், தமிழ் இணையக்கல்விக்கழகம்,
மற்றும் பல இணைய இதழ்கள் ( பதிவுகள், முத்துக்கமலம், திண்ணை, தேவாரம், வல்லமை) பற்றிய
அறிமுகம், அதில் எவ்வாறு ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வெளியிட வேண்டும் என்ற கருத்துரைகளை
வழங்கினேன்.
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்.
அரசு கல்லூரியில் பணியாற்றிய
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் 16 மேற்பட்டோர்கள் இந்தப் பயிற்ச்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டு
பயிற்சி பெற்றனர்.
0 comments:
Post a Comment