/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, November 1, 2018

அன்னை (மதர்) தெரசா பல்கலைக்கழகம்- கொடைக்கானல்

 அன்னை (மதர்) தெரசா பல்கலைக்கழகம் கொடைக்கானலில் தமிழாய்வுத்துறையில் தமிழ் இணையப் பயிற்சி பணிமனைக்குச் 17/10/2018  புதன் கிழமைச் சென்றிருந்தேன். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் கமலி அவர்கள் இன்முகத்தோடு வரவேற்றார்.

                                     பேராசிரியர் கமலி அவர்கள்

ஐயா தாங்கள் இந்த பயிற்சி பணிமனைக்கு வந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஐயா என்றார்கள். ஐயா தாங்கள் 2012- ல் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து இணையத்தமிழ் பயிற்சியை மாணவிகளுக்கு வழங்கினீர்கள். அதனுடைய தொடர்ச்சியாக நாங்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆறுமாதம் மற்றும் ஒரு ஆண்டு பட்டயப் பயிற்சி வகுப்பாக தமிழ் இணையத்தில் தட்டச்சு மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்பைத் தொடங்கினோம். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நீங்கள்தான் ஐயா என்றார்கள். நான் வியந்தே போனேன். நான் நினைத்த இலக்கை வெகுவிரைவாக செய்துகாட்டிய தமிழ்த்துறைத் தலைவர் பேரா.கமலி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டேன்.

         நிகழ்வில் கல்ந்துகொண்ட முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்.

மேலும் தமிழாய்வுத்துறையில் பதினைந்து கணிப்பொறி உள்ளது. அவையாவும் இணைய இணைப்பைப் பெற்றுள்ளது என்பது தனிச் சிறப்பான ஒன்றாகும்.
இங்கு கல்வி பயிலும் முதுகலை மாணவிகள், ஆய்வியல் நிறைஞர் மாணவிகள், முனைவர்ப்பட்ட ஆய்வாளர்கள் என 50 மேற்பட்ட மாணவிகள் தமிழில் தமிழ் 99 விசைப்பலகைப் பயன்படுத்தி விரைவாக தட்டச்சு செய்தது என்னை வியக்க வைத்தது.  அதைபோன்று தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தி தனது திட்டக்கட்டுரையை உருவாக்கி இருந்த விதம் தமிழை அடுத்தக் கட்டத்திற்கு இணையத்தின் வழி ஆய்வு செய்ய இருந்த மாணவிகளை நான் வெகுவேகப் பாராட்டினேன்.
திட்டக்கட்டுரையை அனைவரும் சொந்தமாக தமிழ்99 விசைப்பலகைக் கொண்டு அவரவர் தட்டச்சு செய்து உருவாக்கியது என்பது இன்னும் என்னை திகைக்கவைத்தது. இதற்குப் பேராசிரியர் கமலிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மாணவிகள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்.
மதியம் தமிழ் இணையம் குறித்தும் அதில் எவ்வாறு தமிழ்ப்படித்தவர்கள் வேலைவாய்ப்பை பெறுவது என்பது குறித்தும் பேசினேன். மாணவிகள் ஆர்வமுடன் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.



0 comments: