குளித்தலை (ஐயர்மலை) அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக 17 -03- 2023 அன்று
இணையதமிழ் குறித்து மாணவர்களுக்கு உரை வழங்கினேன்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அர.ரவிச்சந்திரன்
அவர்கள் தலைமை உரையாற்றினார்.
பேராசிரியர் வைரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அறிமுக உரையாக முனைவர் பெ.
முருகானந்தம் அவர்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற்புரை ஆற்றிய தமிழ் துறை
தலைவர் முனைவர் ஆ. ஜெகதீசன் அவர்கள் இன்றைய தொழில்நுட்பத்தின் பயன்கள்
குறித்துச் சுறுக்கமாக வழங்கினார். நிறைவாக இணைய தமிழ்
ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் அறிவு மேம்படுத்தழில் தமிழ் மென்பொருள்கள்
என்ற தலைப்பில் உரை வழங்கினேன். இனி வரும் காலங்களில் மாணவர்களுடைய படைப்புகளை
இணையம் வாயிலாக வெளியிட்டு மாணவர்களது ஆழ்ந்த சிந்தனைகளை வெளிக்கோண்டுவர வேண்டும் என்று
பேசினேன்.
நிகழ்வில் 150 மேற்பட்ட மாணவிகள் மாணவர்கள் கலந்துகொண்டு இணையத்தமிழ் குறித்த செய்திகளைத் தெரிந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment