/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, April 2, 2023

Central Institute of Classical Tamil (CICT) - இயற்கை மொழி ஆய்வில் செம்மொழித் தமிழ் பத்துநாள் பயிலரங்கம்

Central Institute of Classical Tamil (CICT)

                நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சிப் பெற்ற மாணவர்களோடு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் 2023, மார்ச் 14 முதல் 23 வரை பத்து நாட்கள் இயற்கை மொழி ஆய்வில் செம்மொழித் தமிழ் என்ற பொருணமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.   இந்தப் பத்து நாள் பயிலரங்கில் 18 -3- 2023 அன்று இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் மின் ஊடகங்களில் சங்க இலக்கிய உருவாக்கமும் பயன்பாடுகளும் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார். இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் 30 பேர் கலந்து கொண்டனர்


                        ஒருங்கிணைப்பாளர்களில் முனைவர் தேவி - 

இப்யிற்சியில் சங்க இலக்கியங்களை எவ்வாறு நாம் மின்னூடகங்களில் பதிவேற்றம் செய்வது என்பது குறித்து பயிற்சியாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.



இப்ப பயிற்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் ஒரு வலைப்பதிவை உருவாக்கி அதில் சங்க இலக்கிய நூற்பாக்களையும், உரைகளையும் உள்ளீடு செய்து பயன்பெற்றனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் தேவி,  நிரலாளர்கள் முனைவர் இரா. அகிலன், முனைவர் கார்த்திக் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள்

அன்றைய நிகழ்வில் காலை ஆய்வாளர் பட்டாபிராமன் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார்.

    நிரலாளர் முனைவர் கார்த்திக் NIT பேராசிரியர் முனைவர் ஆனந்தகுமார்                 முனைவர் பட்டாபிராமன் முனைவர் துரை.மணிகண்டன், முனைவர்                     இரா.அகிலன்

இந்நிகழ்வில் உரை வழங்குவதற்காக மங்களூர் NIT பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் முனைவர் ஆனந்தகுமார், பட்டாபிராமன், இரா.அகிலன், கார்த்திக்  அவர்களோடும் கணினித்தமிழ் குறித்து விவாதித்தோம்.  


எமது தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் நூலினை NIT பேராசிரியர் ஆனந்தகுமார் அவர்களிடம் வழங்கிய போது.

0 comments: