திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஐந்து நாள் தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வாக நான்காம் நாள் இன்று தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்பதை செயல்முறை விளக்கம் (எ.கலப்பை,முரசு,NHM ) மூலம் முனைவர் குண்சீலன், முனைவர் சிதம்பரம், முனைவர் துரை.மணிகண்டன் ஆகியோர் பயிற்ச்சி அளித்து வந்தோம். 60 மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்று வந்தனர். குணசீலன் அவர்கள் வலைப்பதிவு பற்றி சிறப்புரையாற்றினார். அடுத்து நான் சிறந்த தமிழ் வலைதளங்களை எடுத்துக்காட்டி பேசினேன்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சிதம்பரம், CIIL ஒருங்கிணைப்பாளர் திரு.பிரேம் அவர்களும் உடன் இருந்தனர்.
தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வு மூலம் பல வலைத்தளங்களும் உருவாகவும் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி ஐயா. தங்களது வலைப்பதிவை அன்று நடந்த பயிலரங்கில் மாணவர்களிடம் காண்பித்து பேசினேன். அங்கு இருந்தவர்கள் பெறு மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ் கற்க மற்றுமொரு வாய்ப்பு