செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை. -- உருமு தனலட்சுமி கல்லூரி- தமிழாய்வுத்துறை (திருச்சிராப்பள்ளி) இணைந்து நடத்தும் சங்க இலக்கியமும் பிறதுறைகளும் என்ற தலைப்பில் பத்துநாள் பயிலரங்கம் (11-03-2014 முதல் 20-03-2014 வரை) இன்று காலை தொடங்கியது.தொடக்கவிழாவில் பட்டிமன்ற பேச்சாளர், பேராசிரியர், முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இப்பயிலரங்கில் முதல் அமர்வில் சங்க இலக்கியமும் இணையப்பயன்பாடும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன்.
1. தமிழ் இணையக்கல்விக்கழகம்.
2. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
3. தேவாரம் இணையப்பக்கம்
4. மதுரைத்திட்டம்
5. தமிழ் மரபு அறக்கட்டளை
6. வேர்களைத்தேடி
7. தமிழ் விக்கிப்பீடியா
போன்ற தமிழ் இணையப்பக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டினேன்.
முதல் படத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இ.ஆர்.இரவிச்சந்திரன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன், உருமு தனலெட்சுமி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கோ.வீரமணி முனைவர் கு.ஞானசம்பந்தன், கல்லூரி தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் முனைவர் கா.சேகர் மற்றும் பலர்.
அடுத்து படத்தில் நான் சிறப்புரையாற்றியது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
இணையத் தமிழ் குறித்த தங்கள் தேடலும், வழிகாட்டலும் பாராட்டுதலுக்குரியன நண்பரே.
எனது வலையையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.