தமிழ்க் கணிப்பொறி வளர்ச்சியானது பல பாதைகளைக் கடந்துவந்துள்ளன. இன்று நாம் பயன்படுத்தும் தமிழ்க் கணிப்பொறி மற்றும் அதுசார்ந்த இணையதள தொடர்புகளுக்குத் தமிழ் ஆர்வளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், வேதியல் துறையைச் சார்ந்தவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சமூக ஆர்வளர்கள், இணையதள அமைப்பாளர்கள் என பல்வேறுபட்டவர்கள் இதற்காக உழைத்துள்ளனர்.
அந்த வகையில் தமிழை முதன்முதலில் இணையத்தில் ஏற்றி அழகு பார்த்த பேராசிரியர் நா.கோவிந்தசாமியில் தொடங்கி இன்றுவரை புதிய தமிழ் மென்பொருள்களைக் உருவாக்கி உழைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களின் முழு விபரங்களைத்தான் இந்த பகுதியில் காணச்செல்கிறோம்.
முனைவர் நா.கோவிந்தசாமி
நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ்
விரிவுரையாளராகப் பணியாற்றிய திரு நா கோவிந்தசாமி அவார். தந்தை பெயர் நாரயாணசாமி.தம் நேரத்தைத் தமிழ் இலக்கியம், கணிப்பொறி, இணையம் என்று செலவிட்டுத் தமிழுக்குப் பல பெருமைகளைத் தேடித் தந்துள்ளார். இணையத்தில் முதன் முதலில் தமிழைத் தவழவிட்ட பெருமை சிங்கப்பூரரான திரு நா. கோவிந்தசாமியையே சேரும்.
ஆரம்ப காலம்
திரு நா கோவிந்தசாமி அவர்கள் 1946 ஆம் ஆண்டு சிங்கப்பூரில்
பிறந்தவர். அங்கு உயர் கல்வியை முடித்த பின்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பின், தமிழில் இளநிலைப் பட்டக் கல்வி முடித்து, சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிவந்துள்ளார்.
திரு நா. கோவிந்தசாமி, உஷா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
எழுத்துத் துறையில் ஆற்றிய பங்கு
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருக்கும் திரு நா. கோவிந்தசாமி, அறுபதுகளில் தமது இலக்கியப்பணியைத் தொடங்கினார். அறுபது, எழுபதுகளில் ஏராளமான வானொலி, தொலைகாட்சி நாடகங்களை இவர் எழுதியிருக்கிறார். இவரின் "அன்புக்கப்பால்", "அலைகள் ஓய்வதில்லை" ஆகிய வானொலித் தொடர் நாடகங்கள் மிகவும் பிரபலமானவை. அப்போதைய நடப்புப் பிரச்சினைகள் பலவற்றை முன்னிருத்தி பல குறுநாடகங்களையும் எழுதியுள்ளார்.
நாடகங்கள் மட்டுமன்றிச் சிறுகதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டிய இவர் "தேடி" என்ற சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார். இப்புத்தகத்திற்கு, 1992ம் ஆண்டின் தேசிய புத்தக மேம்பாட்டுக் கழகத்தின் விருது கிடைத்தது. இவரின் "சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பைத் தமிழ்ப்புத்தகாலயம் 1992ல் வெளியிட்டது.
சிங்கப்பூர் இலக்கியத்திற்கு வரலாற்றுப் பார்வையை உண்டாக்கியவர் திரு நா கோவிந்தசாமி அவர்கள். 1979ல் பல்கலைக் கழக பேரவை மாநாட்டில் இவர் படைத்த தமிழ் இலக்கியக் கட்டுரை சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றுக்கு ஓர் அடித்தளமாக அமைந்தது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 1975ல் தொடங்கப்பட்டபோது அதன் உறுப்பினராகவும் செயலாளராகவும் இருந்து பல பணிகளை ஆற்றியுள்ளார். சிங்கப்பூர் எழுத்தாளர் வாரம் 1988ல் தொடங்கியது முதல் 1999ம் ஆண்டுவரை அதன் செயற்குழு உறுப்பினராக இருந்து பல தமிழ் எழுத்தாளர்களைச் சிங்கப்பூர்த் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இவரின் முயற்சியால் 1979ல் பிரபல எழுத்தாளர் அகிலன் அங்கு அழைக்கப்பட்டார். அகிலனின் வருகை, சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் இடையே ஓர் இலக்கியப் பாலம் அமையக் காரணமாய் இருந்தது.
"Fiction of Singapore" (1990), "Asean Drama Anthology" ஆகிய சிங்கப்பூர்த் தொகுப்புகளின் தமிழ்ப் பிரிவுக்கு திரு நா கோவிந்தசாமி அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தேசிய கலைகள் மன்றம், தேசிய தகவல் கலைகள் அமைச்சு மற்றும் பல இலக்கிய அமைப்புகளின் குழுக்கள் பலவற்றிலும் பங்காற்றியுள்ளார்.
பல இளையர்களை எழுத்துத் துறையில் ஊக்குவித்து உருவாக்கியவர் திரு நா கோவிந்தசாமி அவர்கள். புதிய இலக்கியங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றுக்கு ஆதரவளித்தவர். தரமான இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் இவர் எப்பொழுதும் மதிப்பளித்து வந்தார். தமிழில் எழுதப்படும் புதிய இலக்கியங்கள், புதிய படைப்புகள் பற்றிய ஆழ்ந்த அறிவும் விழிப்புணர்வும் உள்ளவர்.
1977ல் இலக்கியவட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி மிகச் சிறந்த கதைகள் எவை என்ற அலசல் ஆய்வின் மூலம் சேகரித்த கதைகளை 1981ல் தொகுப்பாக வெளியிட்டார். அவரின் "உள்ளொளியைத் தேடி", "தேடி" என்ற சிறுகதைத் தொகுப்பும் "வேள்வி" என்ற நாவலும் அவர் தமிழ் இலக்கியத்துக்கு விட்டுச் சென்ற அழியாச் சொத்துக்களாகும். கவிதைகளில் நாட்டம் கொண்ட இவர் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவராக இருந்தார்.
கணினித்துறையில் ஆற்றிய பங்கு
திரு நா. கோவிந்தசாமி அவர்கள் தமிழ் கணினி வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. முதன் முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிய பெருமையைச் சிங்கப்பூருக்குத் தேடித் தந்தவர் திரு நா. கோவிந்தசாமி. 1995ல் "Journey" என்னும் சிங்கப்பூர் கவிதைத் தொகுப்பின் தமிழ்க் கவிதைகள் முதன் முதலில் கணினி வலைப் பக்கத்தில் இடம்பெற்றது.
உலகத் தமிழ்க் கணினி பேராளர்கள் பலர் பங்கு கொண்ட முதல் அனைத்துலக தமிழ் இணைய மாநாட்டை 1997ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஏற்பாடு செய்து நடத்தினார். தமிழகத்தில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக இணைய மாநாட்டில் சிங்கப்பூரின் முக்கிய பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சிங்கப்பூரின் தமிழ் கணினி வளர்ச்சி பற்றி உரையாற்றினார். தேசியப் பல்கலைக் கழக கணினித் துறையுடன் இணைந்து "கணியன்" தமிழ் மென்பொருளை உருவாக்கினார். மாணவர்களுக்கான "செந்தமிழ்" என்ற குறுவட்டுகளையும் உருவாக்கியுள்ளார்.
1965 லிருந்து 1968 முடிய இவர் பதினான்கு சிறுகதைகள் எழுதினார். அவற்றில் 'காட்டாற்றின் கரையினிலே' (1967), தமிழர் திருநாள் கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
பிறகு வானொலி நாடகத் துறையில் ஏழு ஆண்டுகள் உழைத்தார். மீண்டும் 1976 லிருந்து பத்திரிகையில் கதைகள் எழுதி வந்தார். இவரது முதற்காலப் பிரிவைச் சேர்ந்த பெரும்பாலான கதைகள் காதலைப் பாடுபொருளாகக் கொண்டவை. இரண்டாம் காலப் பிரிவில் உதித்த `ஓர் ஆன்மாவின் திரை அகற்றப்படுகிறது’ (1977) கதையில் முரண்பாடுமிக்க ஓர் எழுத்தாளனைப் படைத்து, உள்ளும் வெளியும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் இணைய வளர்ச்சியின் முடிசூடா மன்னன் நா.கோவிந்தசாமி 1999 ஆண்டு இயற்கை எய்தினார்.
உமர் தம்பி
வாழ்க்கைக் குறிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 1953 ல் பிறந்தவர். தந்தை அ. அப்துல் அமீது, தாய் ரொக்கையா.
தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்துள்ளார்.
அதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே 1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.
மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.
இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள Al Futtaim Group of Companies ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.
கல்வி பயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது அவரது மனைவியின் பெயர் பெளஷியா (Fouzia). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்.
துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network Administrator, SAP Implementation Team Head, Kiosk Programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார்.
ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. பதினேழு ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், 2001 -வது ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார்.
தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார்கள்.
தமிழ் கணிமைக்கு செய்த பங்களிப்புகள்
தேனீ இயங்கு எழுத்துரு
மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய வெஃப்ட் என்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாலமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை இவ்வெழுத்துரு வழங்குகிறது. தேனீ எனப்படும் இவரது தயாரிப்பான எழுத்துருவை இவ்வாறு இயங்கு எழுத்துருவாக பல்வேறு இணைய முகவரிகளில் பயன்படுமாறு மாற்றி வெளியிட்டார். இன்று தமிழ் வலைப்பதிவு உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வசதியை தமது வலைப்பதிவுகளில் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் இணைய அகராதி
கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் தமிழ் இணைய அகராதியைக் கொண்டுவந்தார். இந்த அகராதியை தமிழ் உலக உறுப்பினரும் talktamil.4t.com என்ற இணையத் தள நிர்வாகியான மஞ்சு அவர்களும் இணைந்து உருவாக்கினார்கள்.
சமுதாயப் பணிகள்/கட்டுரைகள்
சமூக சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட சகோதரர் உமர் அவர்கள் அதிரை பைத்துல்மால் எனும் சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளையில முக்கிய நிர்வாகியாக இருந்து சேவை செய்து வந்துள்ளார்கள்.
குழம்பி நிற்கும் குமுகாயம், நமக்கு கண்கள், செவிகள் இரண்டிரண்டு ஏன்?, தவிடுபொடியாகிறது டார்வின் கொள்கை, காரியம் சிறிது, காரணம் பெரிது 3, காரியம் சிறிது காரணம் பெரிது -2, காரியம் சிறிது, காரணம் பெரிது
உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும்
AWC Phonetic Unicode Writer, Online RSS creator - can be used in offline as well, RSS செய்தியோடை உருவாக்கி [1][2], எண்களாக தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி, தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி,எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி [3][4], ஒருங்குறி மாற்றி [5][6], க்னூ பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள் [7][8], தேனீ ஒருங்குறி எழுத்துரு[9][10][11], வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு[12][13] , வைகை இயங்கு எழுத்துரு, தமிழ் மின்னஞ்சல் , தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி, Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்), தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.
உமர் தம்பி அவர்களின் வலைப்பதிவு
தென்றல்
உமர் தம்பியின் ஆக்கங்கள்
எழுதப்பழகுவோம் எச்.ரி.எம்.எல், யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள், RSS ஓடை-ஒரு அறிமுகம், தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு , முத்தமிழ்மன்றம்
தமிழ்க் கணினி வளர்ச்சிக்கு உருதுணையாக இருந்த திரு உமர்தம்பி 2006 ஆம் ஆண்டு இயறகை எய்தினார்.
யாழன் சண்முகலிங்கம்
அப்பு ஆர்ச்சி என அழைக்கப்பட்ட அமரர் யாழன்சண்முகலிங்கம் இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மென்பொருள் பொறியாளரான இவர் அமெரிக்காவில் பணியாற்றி அங்கு குடியுரிமைப் பெற்றிருந்தார். அமெரிக்காவில் இருந்து கொண்டே தனது தமிழ் தொண்டை ஆற்றினார். ‘யாழன் தமிழ் சொற்பகுப்பி‘ இவரது முக்கிய தமிழ் மென்பொருள். இதனை 1995ம் ஆண்டிலேயே பயன்படுத்தி உலகளவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார்.
கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு வழிவகுத்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
யாழன் விசைப்பலகையை 1993ம் ஆண்டில் உருவாக்கி அதை தமிழர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். தமிழ் இணைய வளர்ச்சியின் முக்கிய காலக்கட்டங்களில் இந்நிகழ்வும் ஒன்றாகும். இவரது தமிழ் கணினி ஆர்வத்தினால் கோவை, ஜூன் 24& உலக தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்குகளில் ஒன்றனுக்கு இவரது பெயரும் சூடப்பட்டது.
முரசொலி மாறன்
தமிழ் இணைய மாநாட்டை 1999&ம் ஆண்டு நடத்த பெரும் முயற்சி எடுத்தவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் முக்கியமானவர். மின்வழி தமிழ் வளர மென்பொருள் தயார் செய்து தமிழர்களுக்கு வழங்கிட வழிவகை செய்தவர். ஆங்கிலம்&தமிழ் ஆகிய இரு மொழியில் அமைக்கப்பட்ட ‘தாப்‘ என்ற எழுத்துருவும், தமிழில் மட்டுமே தட்டச்சு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட ‘தாம்‘ என்ற எழுத்துருவும் 1999&ம் ஆண்டு மாநாட்டில் தான் வழிவகை செய்யப்பட்டது. முரசொலி மாறன் தமிழர்களிடம் மென்பொருட்களின் தரப்படுத்துதலுக்கான முயற்சியை வற்புறுத்தியவர்.
தமிழ் மென்பொருள் உற்பத்தியாளர்களிடையே பல்வேறு மென்பொருள்களை உருவாக்க ஊக்குவித்தவர். தமிழகத்தில் மென்பொருள் உற்பத்தியாளர்களுக்கு அரசு மூலமாக நிதியுதவிகள் பல செய்து சிறந்த தமிழ்மென்பொருள்களை உருவாக்க முயற்சி எடுத்தவர்.
சுஜாதா
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அமரர் ரங்கராஜன் என்பவர் தான் சுஜாதா. தமிழ் இலக்கிய உலகில் ஆணித்தரமான இடத்தை பெற்றவர். கணினி வழி தமிழை பயன்படுத்தும் ஒரு சிறந்த பயனாளராக விளங்கினார். 1997&ல் நடந்த தமிழ் இணையதள மாநாட்டில் தமிழ் இணைய வளர்ச்சியின் அவசியத்தை உணர்ந்தவர்களில் இவரும் ஒருவர். முரசு அஞ்சல் எனும் தமிழ் தட்டச்சு மென்பொருளை பயன்படுத்தி தமிழ் கணினி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இணையதளத்தில் தமிழில் நிறைய கதைகளை எழுதி தமிழ் வாசகர்களை ஈர்த்தவர்.
கோவை, ஜூன் 24& உலக தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்குகளுக்கு இவர்கள் பெயரும் சூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்
முனைவர் கு.கல்யாணசுந்தரம்.
சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின் தலைவராக நின்று அத்திட்டத்தினை வழிநடத்தி வருபவர். தகுதரம் அனைத்துலகத் தரமாக மாறுவதிலும் பெரும் பங்காற்றி உள்ளார்.
மயிலை (எழுத்துரு) இவரது உருவாக்கமேயாகும்.
இவர் உத்தமம் அமைப்பின் தலைவராகக் கடமையாற்றி வந்துள்ளார்.
கனடிய தமிழர்கள் அமைப்பான தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த 2007ஆம் ஆண்டுக்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றுள்ளார்.
மலேசியாவில் இணையவழி தமிழ்:
”மலேசியாவில் தமிழ்மென்பொருளை முதன் முதலில் உருவாக்கிய பெருமை’பெர்லீஸ்’மாநிலத்தைச் சார்ந்ததிரு.மா.அங்கையாவையே சாரும். இவர் 1980களில் ஒரு தமிழ்ச்சொல் செயலாக்கியை உருவாக்கினார்.கணினி இயக்கத்திற்கு விசைப்பலகையும் உருவாக்கினார்”.13 இவரை அடுத்து கால ஓட்டத்தில் தற்சமயம் மலேசியாவில் மூன்று விதமான விசைப்பலகைகள் உதயமாகி உள்ளன.
1) 1992 – நளினம் சொல் செயலாக்கியின் விசைப்பலகை
2) 1985 – முரசு சொல் செயலாக்கியின் விசைப்பலகை
3) 1987 - துணைவன் சொல் செயலாக்கியின் விசைப்பலகை
கணினி தனக்குள் பயன்படுத்துவது 0,1 கொண்ட இருநிலை மொழி மட்டும் தான். உள்ளீடு, வெளியீடு செய்து ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் போன்ற மொழிகளுக்கான குறியீடுகளை பயன்படுத்தலாம்.
”மா.அங்கையா, முரசு நெடுமாறன், திரு.சி.சிவகுருநாதன் ஆகிய மூவரும் மலேசியாவில் தமிழ்மொழியை இணையத்தில் இணைக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். இம்மூவரும் தங்களுக்கான தனித்தனி தகவல் வலைப் பக்கங்களை உருவாக்கினர்”.14இவர்களது இப்பணி மலேசியாவில் ஆயிரக்கணக்கான தமிழர்களும், தமிழ் சார்ந்த அமைப்புகளும் தங்களுக்கென சுயமான தகவல் வலைப் பக்கங்களை உருவாக்கவும், மக்களுக்கு அரிய பல தகவல்களையும் அவ்வப்போது கொடுத்து வருகிறது.
இன்று இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழும் ஒன்று என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குத் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள ஆதிநாள் கணினி வல்லுநர்கள் முக்கிய காரணமாகும். ”மலேசியாவின் பாலப்பிள்ளை,முத்து நெடுமாறன், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரிநிவாசன், ஹரோல்ட் ஹிஃப்மன் ஆகியோர் நினைவு கூறத்தக்கவர்கள்”.15
இன்று தமிழ் இணையத்தில் நல்ல வளம் பெற்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான அகப்பக்கங்கள் உருவாகியுள்ளன. இன்றும் பல நாள்தோறும், நிமிடந்தோறும் வலையில் ஏறியவாறே இருக்கின்றன.
மலேசியாவில் முத்துநெடுமாறன்:
இனையத்தமிழ் மலேசியத் தமிழருக்கு எட்டாத தொலைவில் தான் இருந்த்து. கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்தும் பயனாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். இச்சூழ்நிலையில் மலேசியா கண்டெடுத்த சொத்து முத்துநெடுமாறன் கணினி செயல்படும் ’முரசு’ தமிழ்ச்செயலியை உருவாக்கி பிறகு கைபேசியில் செயல்படும் ’செல்லினம்’ தமிழ்ச் செயலியை உருவாக்கி தமிழைத் தொழில்நுட்பத்திற்குள் கொண்டுவந்து சாதனை படைத்தவர்.
கணினி, கைபேசி, இணையத்தில் வந்தால் போதாது. அடுத்து வரப்போகும் ஐபோன்(IPHONE), ஐபேட்(IPAD) தொழில்நுட்பத்திலும் தமிழை மிளிரச் செய்யும் பணிகளை அமைதியாகச் செய்து கொண்டிருப்பவர். கணினித் தொழில்நுட்பத்தில் தமிழை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்வதில் முனைப்பாக இருப்பவர் முத்துநெடுமாறன். அண்மையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணையமாநாடாக நடந்த தமிழ் இணைய மாநாட்டில் முத்துநெடுமாறன் தமிழின் வள்ர்ச்சியை மேலும் பலபடிகள் உயர்த்தும் வகையில் தம்முடைய அரிய கண்டுபிடிப்பு பற்றி பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.
மலேசியாவில் தமிழ் இணையம் வளர்ந்து வருவதற்கு முரசு தமிழ்ச்செயலியை உலகத்திற்கு அளித்த பெரும் மலேசியத் தமிழர் முத்துநெடுமாறனைச் சாரும். மலேசியப் பிரதமருடைய இணையத் தளமும் தமிழில் செயல்படுகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. .
காசி ஆறுமுகம்
தமிழ் இணையம் பயன்படுத்துபவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் 'தமிழ்மணம்'. இதனை உருவாக்கியவர் காசிலிங்கம் ஆறுமுகம். 'காசி' எனஅறியப்படுபவர். இவர் கோயமுத்தூருக்கு அருகில் உள்ள வடசித்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திரு. ஆறுமுகம், திருமதி. சரசுவதி. தந்தை சில வகுப்புகள் படித்தவர். தாய் எழுதப் படிக்கத் தெரியாதவர்.
காசி எட்டாம் வகுப்பு வரை வடசித்தூரில் படித்தார்; ஒன்பதும் பத்தும் பொள்ளாச்சியில் படித்தார். பல்தொழில் நுட்பப் படிப்பைப் பொள்ளாச்சி நாச்சிமுத்து பல்தொழிற் கல்லூரியில் படித்தார்(1978-81). கோவை எவெரெசுடு பொறியியல்நிறுவனத்தில் சிலகாலம் பணி. அத்துடனே மாலைநேரத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பகுதி நேரமாகப் பொறியியல் பட்டப்படிப்பு. இதன் பின்னர் திருவள்ளூரில் இந்துசுதான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொருள் வடிவமைப்பாளராகப் பணியில் இணைந்தார். மண்வாரி இயந்திரங்களின் பகுதிகளை வடிவமைக்கும் பணி. ஆறரை ஆண்டுகள் இப்பணியில் இருந்தார். இக்காலத்தில்சென்னை ஐ.ஐ.டியில் தொழில்நுட்பம் முதுகலை(எம்.டெக்) படித்தார்.
பின்னர் கோவை ரூட்சு நிறுவனத்தில் வடிவமைப்பு மேலாளராகப்பணிபுரிந்து அந்நிறுவன வளர்ச்சிக்குப் பல வகையில் உதவியாக இருந்தார்.2000 ஆண்டில் தொழில்நுட்ப இயக்குநர் பொறுப்புக்கு உயர்ந்தார். காசிஅவர்கள் கணினிவழி பொருள் வடிவமைக்கும் நுட்பத்தைச் செயல்படுத்தி தரையைத்தூய்மை செய்யும் பல கருவிகளை வடிவமைத்தார். உலக அளவில் ஏற்றுமதித் தரம்வாய்ந்த பொருள்களை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார் காசி. 2000 இல் அந் நிறுவனத்திலிருந்து வெளியேறி சென்னையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
ஒருவருடம் கணினி வழிவடிவமைப்புகளைப் பகுப்பாய்வு செய்யும் பணிபுரிந்த பிறகு இவரைஅமெரிக்காவிற்கு அனுப்பியது டாடா நிறுவனம். நியூயார்க் மாநிலத்தில் ரோச்சஸ்டர் நகரில் உள்ள, புத்துருவாக்கத்தில் உலகப் புகழ்பெற்றசிராக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரிந்தார்.
இருகுழந்தைகள், மனைவியுடன் நான்கு வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தார். முன்னதாகவே ஓய்வு நேரத்தில் முயன்று, 2000 இல் இல்லங்களில் 'சேவை'எனப்படும் இடியாப்பம் செய்வதற்காக புதிய சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து,2001 இல் காப்புரிமைக்கும் விண்ணப்பத்திருந்தார். இக்கருவி பற்றி தனியாகச் செய்தி உள்ளது.
அமெரிக்காவில் வசித்தபோது, காசிக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில்இணைய வசதிகளைப் பயன்படுத்த தொடங்கினார். யாகூ உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கியது. 2003 இல் வலைப்பதிவுகள் அறிமுகம்ஆனது. அயல்நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை,படைப்புகளை,செய்திகளை வலைப்பதிவில் பதியும் வழக்கத்தில் இருந்தனர்.இவ்வாறு உலகம் முழுவதும் பதியும் தமிழ் வலைப்பதிவர்கள் முகவரியை சில ஆர்வலர்கள் பட்டியலிட்டுத் தங்கள் கணிப்பொறியில் வைத்திருந்தனர்.இப்பட்டியல் வழியாக யார் யார் என்ன செய்திகளைப் பதிந்துள்ளனர் என வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கியது.
வலைப்பதிவு எழுதுபவர்கள் தொழில் நுட்பம்தெரிந்தவர்கள் என்பதால் இலக்கியப் படைப்புகளாக அல்லாமல் பெரும்பாலானவலைப்பதிவுகள் சிறு அனுபவங்கள், பயண அனுபவங்கள், சிறுபடைப்புகளைத் தங்கள் வலைப்பதிவுகளில்இட்டு வைத்தனர்.
இந்த சூழலில் புதுமையான வடிவமைப்பு, இயங்குமுறை கொண்டு காசியின்உழைப்பில் தமிழ்மணம்.காம் உருவாகி 2004ஆம் ஆண்டு ஆகசுடு மாதம் பயனுக்குவந்தது. ஓர் ஆண்டுக்குள் பல மாற்றங்களை, வளர்ச்சிகளைப் பெற்றுதமிழ் இணையத்தில் தனக்கென ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றது. உலகில்எழுதப்படும் அனைத்துத் தமிழ்ப் பதிவுகளையும் திரட்டித் தரும் தளமாகஅத்தளம் செயல்பட்டது.
இன்று தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகள் மட்டுமன்றித் தமிழின்கிளைமொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்படும் வலைப்பதிவுகளையும் திரட்டித் தரும் தளமாகத் தமிழ்மணம் உள்ளது. நாம்எழுதும் வலைப்பதிவுகளை உடனுக்குடன் திரட்டும் வண்ணம் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் உள்ளது. தமிழ்மணத்தின் கருவிப் பட்டையை நம் தளத்தில் பொருத்திவிட்டால் நாம் எழுதும் வலைப்பதிவை ஒரு நொடியில் தமிழ்மணம் வழியாகஉலகத்தின் பார்வைக்கு வைக்கமுடிம்.
தகடூர் கோபி
இயற்பெயர் த. கோபாலகிருட்டிணன். பிறந்த ஊர் தருமபுரி. இவர் இளநிலை மின் பொறியியல் பட்டமும், முதுநிலை தகவல் தொழில்நுட்பப் பட்டயமும் பெற்றுள்ளார்.. இவர் கடந்த 13 ஆண்டுகளாக ஐதராபாத்தில் ஒரு பன்னாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
கட்டற்ற தமிழ்க் கணிமைப் பணிகள்:
தகடூர் தமிழ் மாற்றி:
இணையத்தில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதை கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது.
உமர் பன்மொழி மாற்றி:
தகடூர் தமிழ் மாற்றியைப் போலவே இந்தியாவின் பிற மொழிகளுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஒரியா,பெங்காலி, பஞ்சாபி, குசராத்தி மற்றும் இந்தி ஆகியவற்றுக்கான தட்டச்சுக் கருவி (தேனீ இயங்கு எழுத்துரு அளித்த அமரர் திரு. உமர் அவர்களின் நினைவாக இந்தப் பன்மொழி மாற்றிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளார்.).
அதியமான் எழுத்துரு மாற்றி:
தமிழ் இணையப் பக்கங்களில் காணப்படும் பல்வேறு எழுத்துருக்கள்/குறியேற்றங்களால் ஆன பக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்க உதவும் ஒரு கருவி இதை கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது. தற்சமயம் TAB,TAM,TSCII குறியேற்றங்களால் ஆன வலைப் பக்கங்களையும் தினத்தந்தி போன்ற சில தமிழ் எழுத்துருக்களில் அமைந்த வலைப் பக்கங்களையும் ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்க இயலுமாறு செய்துள்ளார்.
அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி:
அதியமான் எழுத்துரு மாற்றியின் பயர்பாக்சு நீட்சி வடிவம். இதன் மூலம் உள்நுழைவு/கடவுச்சொல் தேவைப்படும் வலைப்பக்கங்களையும் ஒருங்குறிக்கு மாற்றி படிக்க இயலும்.
TABUni/TAMUni/Unicode எழுத்துருக்கள்:
பனாசியா நிறுவனம் வெளியிட்ட சில அழகிய எழுத்துருக்களை ஒருங்குகுறிக்கு மாற்றி அளித்துள்ளார். .இதைப் போல நீங்கள் விரும்பிய எழுத்துருக்களை உருவாக்குவதற்கான செயல் விளக்கத்தையும் தமிழில் அவரது வலைப்பதிவில் கொடுத்துள்ளார்.
தமிழ் விசை ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி:
பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. தமிழா! முகுந்த் அவர்களால் உருவாக்கப்பட்டு, வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. இந்த நீட்சியை தற்போது மேம்படுத்தி பராமரித்து வருகிறார்.
மேற்காணும் மென்பொருள்கள் தவிர ஔவை உரைபேசி செயலி மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி போன்ற இன்னும் சில மென்பொருள்கள் கோபியின் தயாரிப்பு பணியில் உள்ளன. அவரது மென்பொருள்கள் அனைத்துமே தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமைத் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாகவும் கட்டற்ற முறையிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இதர தமிழிணையப் பங்களிப்பு:
தமிழில் http://higopi.blogspot.com என்ற வலைப்பூ முகவரியில் அவர் வலைப்பதிவைத் துவங்கி அதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு தொழில்நுட்பம் குறித்த விவரங்களையும் பகிர்ந்து வருகிறார்.
சமூகத் திட்டங்களில் பங்களிப்பு:
மதுரை ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களின் எண்ணத்தில் உருவான "தொடுவானம்" இணையம் மூலம் கிராம மக்கள் குறைதீர்ப்பு திட்டத்தின் தொழில்நுட்பக் குழுவுக்கு தலைமையேற்று மென்பொருள் மற்றும் பயிற்சி செயல் வடிவத்தில் பங்களித்துள்ளேன்.
வலைத்தளம்: http://www.higopi.com/ ,வலைப்பதிவு: http://higopi.blogspot.com, மின்னஞ்சல்: gopi@higopi.com.
முகுந்தராஜ் சுப்ரமணியன் :
இவர் நாமக்கல் அருகிலுள்ள சேந்தமங்கலம்என்னும் சிற்றூரில் 1972-ல் பிறந்தவர். தந்தையார் சுப்பிரமணி, தாயார் அமராவதி ஆவர். சேந்தமங்கலத்தில் உள்ள சைனிக்குப் பள்ளியில் படித்தவர். சென்னை விவேகானந்தர் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். பின்னர் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட எம்.ஐ.டி கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பட்டம் பெற்றவர்(1994-97). தற்பொழுது ஆஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேனில் ஒரு தனியார் நிறுவணத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இணையத்தமிழுக்கு இவரின் பங்களிப்பு
கட்டற்ற தமிழ்க் கணிமைப் பணிகள்:
தமிழா! கணிமைத்திட்டம்:
தமிழ் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து தமிழருக்குப் பயன்படும் கட்டற்ற மென்பொருட்களை தயாரிக்கும் நோக்கத்துடன் தமிழா திட்டம் ஆரம்பிக்கபட்டது. இதில் ஓரளவிற்கு வெற்றியையும் அடைந்துள்ளார்கள். இதை மலேசியாவிலுள்ள இளஞ்செழியன் என்பவருடன் சேர்ந்து ஆரம்பித்து தற்போது ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறார்..
தமிழா திட்டத்தின் வலைத்தளம்: http://thamizha.com
தமிழா திட்டத்தின் மென்பொருட்களின் மூலநிரல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்: https://github.com/thamizha
எகலப்பை:
விண்டோஸ் கணினிகளில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதனை கொண்டு அனைத்து விண்டோஸ் செயலிகளிலும் நேரடியாக தமிழ் தட்டச்ச முடியும்.
இதன் வலைத்தளம்: http://thamizha.com/project/ekalappai
தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி:
பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. இதனை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். பிறகு வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. தற்போது இந்த நீட்சியினை கோபி அவர்கள் மேம்படுத்தி பராமரித்து வருகிறார்.
இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/
தமிழா! சொல்திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி;
பயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்த உதவும் தமிழ் சொல்திருத்தி. இதன் உருவாக்கத்தில் இதர பல தமிழார்வலர்களுடன் சேர்ந்து பங்களித்து வருகிறார்.
இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/thamizha-solthiruthi/
சமூகத் திட்டங்களில் பங்களிப்பு:
தற்போது பிரிஸ்பேனில் தாய்த் தமிழ்ப் பள்ளி குயீன்ஸ்லாந்து என்ற பெயரில் ஒரு வார இறுதி தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்து இங்குள்ள தமிழ் நண்பர்கள் உதவியுடன் நடத்தி வருகிறார்.http://www.facebook.com/thaai.tamil.school.qld
வலைப்பதிவு: http://mugunth.blogspot.com
மின்னஞ்சல்: mugunth@gmail.com
தகடூர் கோபி
இயற்பெயர் த. கோபாலகிருட்டிணன். பிறந்த ஊர் தருமபுரி. இவர் இளநிலை மின் பொறியியல் பட்டமும், முதுநிலை தகவல் தொழில்நுட்பப் பட்டயமும் பெற்றுள்ளார்.. இவர் கடந்த 13 ஆண்டுகளாக ஐதராபாத்தில் ஒரு பன்னாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
கட்டற்ற தமிழ்க் கணிமைப் பணிகள்:
தகடூர் தமிழ் மாற்றி:
இணையத்தில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதை கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது.
உமர் பன்மொழி மாற்றி:
தகடூர் தமிழ் மாற்றியைப் போலவே இந்தியாவின் பிற மொழிகளுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஒரியா,பெங்காலி, பஞ்சாபி, குசராத்தி மற்றும் இந்தி ஆகியவற்றுக்கான தட்டச்சுக் கருவி (தேனீ இயங்கு எழுத்துரு அளித்த அமரர் திரு. உமர் அவர்களின் நினைவாக இந்தப் பன்மொழி மாற்றிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளார்.).
அதியமான் எழுத்துரு மாற்றி:
தமிழ் இணையப் பக்கங்களில் காணப்படும் பல்வேறு எழுத்துருக்கள்/குறியேற்றங்களால் ஆன பக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்க உதவும் ஒரு கருவி இதை கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது. தற்சமயம் TAB,TAM,TSCII குறியேற்றங்களால் ஆன வலைப் பக்கங்களையும் தினத்தந்தி போன்ற சில தமிழ் எழுத்துருக்களில் அமைந்த வலைப் பக்கங்களையும் ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்க இயலுமாறு செய்துள்ளார்.
அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி:
அதியமான் எழுத்துரு மாற்றியின் பயர்பாக்சு நீட்சி வடிவம். இதன் மூலம் உள்நுழைவு/கடவுச்சொல் தேவைப்படும் வலைப்பக்கங்களையும் ஒருங்குறிக்கு மாற்றி படிக்க இயலும்.
TABUni/TAMUni/Unicode எழுத்துருக்கள்:
பனாசியா நிறுவனம் வெளியிட்ட சில அழகிய எழுத்துருக்களை ஒருங்குகுறிக்கு மாற்றி அளித்துள்ளார். .இதைப் போல நீங்கள் விரும்பிய எழுத்துருக்களை உருவாக்குவதற்கான செயல் விளக்கத்தையும் தமிழில் அவரது வலைப்பதிவில் கொடுத்துள்ளார்.
தமிழ் விசை ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி:
பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. தமிழா! முகுந்த் அவர்களால் உருவாக்கப்பட்டு, வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. இந்த நீட்சியை தற்போது மேம்படுத்தி பராமரித்து வருகிறார்.
மேற்காணும் மென்பொருள்கள் தவிர ஔவை உரைபேசி செயலி மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி போன்ற இன்னும் சில மென்பொருள்கள் கோபியின் தயாரிப்பு பணியில் உள்ளன. அவரது மென்பொருள்கள் அனைத்துமே தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமைத் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாகவும் கட்டற்ற முறையிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இதர தமிழிணையப் பங்களிப்பு:
தமிழில் http://higopi.blogspot.com என்ற வலைப்பூ முகவரியில் அவர் வலைப்பதிவைத் துவங்கி அதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு தொழில்நுட்பம் குறித்த விவரங்களையும் பகிர்ந்து வருகிறார்.
சமூகத் திட்டங்களில் பங்களிப்பு:
மதுரை ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களின் எண்ணத்தில் உருவான "தொடுவானம்" இணையம் மூலம் கிராம மக்கள் குறைதீர்ப்பு திட்டத்தின் தொழில்நுட்பக் குழுவுக்கு தலைமையேற்று மென்பொருள் மற்றும் பயிற்சி செயல் வடிவத்தில் பங்களித்துள்ளேன்.
வலைத்தளம்: http://www.higopi.com/ ,வலைப்பதிவு: http://higopi.blogspot.com, மின்னஞ்சல்: gopi@higopi.com.
முகுந்தராஜ் சுப்ரமணியன் :
இவர் நாமக்கல் அருகிலுள்ள சேந்தமங்கலம்என்னும் சிற்றூரில் 1972-ல் பிறந்தவர். தந்தையார் சுப்பிரமணி, தாயார் அமராவதி ஆவர். சேந்தமங்கலத்தில் உள்ள சைனிக்குப் பள்ளியில் படித்தவர். சென்னை விவேகானந்தர் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். பின்னர் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட எம்.ஐ.டி கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பட்டம் பெற்றவர்(1994-97). தற்பொழுது ஆஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேனில் ஒரு தனியார் நிறுவணத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இணையத்தமிழுக்கு இவரின் பங்களிப்பு
கட்டற்ற தமிழ்க் கணிமைப் பணிகள்:
தமிழா! கணிமைத்திட்டம்:
தமிழ் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து தமிழருக்குப் பயன்படும் கட்டற்ற மென்பொருட்களை தயாரிக்கும் நோக்கத்துடன் தமிழா திட்டம் ஆரம்பிக்கபட்டது. இதில் ஓரளவிற்கு வெற்றியையும் அடைந்துள்ளார்கள். இதை மலேசியாவிலுள்ள இளஞ்செழியன் என்பவருடன் சேர்ந்து ஆரம்பித்து தற்போது ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறார்..
தமிழா திட்டத்தின் வலைத்தளம்: http://thamizha.com
தமிழா திட்டத்தின் மென்பொருட்களின் மூலநிரல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்: https://github.com/thamizha
எகலப்பை:
விண்டோஸ் கணினிகளில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதனை கொண்டு அனைத்து விண்டோஸ் செயலிகளிலும் நேரடியாக தமிழ் தட்டச்ச முடியும்.
இதன் வலைத்தளம்: http://thamizha.com/project/ekalappai
தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி:
பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. இதனை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். பிறகு வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. தற்போது இந்த நீட்சியினை கோபி அவர்கள் மேம்படுத்தி பராமரித்து வருகிறார்.
இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/
தமிழா! சொல்திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி;
பயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்த உதவும் தமிழ் சொல்திருத்தி. இதன் உருவாக்கத்தில் இதர பல தமிழார்வலர்களுடன் சேர்ந்து பங்களித்து வருகிறார்.
இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/thamizha-solthiruthi/
சமூகத் திட்டங்களில் பங்களிப்பு:
தற்போது பிரிஸ்பேனில் தாய்த் தமிழ்ப் பள்ளி குயீன்ஸ்லாந்து என்ற பெயரில் ஒரு வார இறுதி தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்து இங்குள்ள தமிழ் நண்பர்கள் உதவியுடன் நடத்தி வருகிறார்.http://www.facebook.com/thaai.tamil.school.qld
வலைப்பதிவு: http://mugunth.blogspot.com
மின்னஞ்சல்: mugunth@gmail.com
திரு.மா.ஆண்டோபீட்டர்.
கணிப்பொறியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பயிற்சி அளிப்பது,தமிழ்மென்பொருள்களை வடிவமைப்பது, கணிப்பொறி சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிப்பது எனப் பல்வேறு பணிகளைச் சத்தமில்லாமல் தன்னுடைய சாஃப்ட்வியூ நிறுவனத்தின் மூலம் செய்து வருபவர் மா.ஆண்டோ பீட்டர். கணிப்பொறியியல், இணையத்தில் தமிழ் மொழியை முன்னிறுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
முனைவர் மு. பொன்னவைக்கோ
இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிறை பொன்னிக்கண்ணு அம்மையாருக்கும் இளைய மகனாய்ப் பிறந்தவர். சொந்த ஊரில் அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், வழுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும், மீனம்பாக்கம் அ.மா.ஜெயின் கல்லூரியில் புகுமுக வகுப்பும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இளநிலை (B.E.), முதுநிலை(M.Sc. (Eng) மின்பொறியீயல் கல்வியும், தில்லி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் ஆய்வுப் படிப்பையும்( Ph.D) பயின்று பொறியாளர் ஆனவர்.
நாற்பது ஆண்டுகளாக இந்திய, வெளிநாட்டு நிறூவனங்கள் பலவற்றில் திட்டப் பொறியாளராக, திறமையான அதிகாரியாக, அறிவுரைஞராக, ஆய்வுநெறிகாட்டியாக , இயக்குநராக, துணைவேந்தராகப் பணியாற்றிய பெருமை பெற்றவர். சிறந்த ஆய்வாளர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியவர். நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டவர். மின்னமைப்பு வடிவமைப்பில் பல புதிய கண்டுபிடுப்புகளைக் கண்டுபித்தவர். அவர் கண்டுபிடிப்புகள் அவரது பெயரால் ”கோ மாதிரிகள்” என வழங்கப்படுகின்றன. உயர்கல்வி மேம்பாட்டிற்குப் பல திட்டங்களை வழங்கியவர். தமிழ்கப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் படிப்போர்க்கு ஆற்றல் கல்வி வழங்கி, பட்டம் பெற்றவுடன் பணியில் சேர வழி வகுத்தவர். பட்டப்படிப்பில் பயில்வோர் எம்மொழியினராயினும் தமிழைக் கட்டாயம் பயிலப் பாடத்திட்டம் வழங்கியவர்.
தனியாத தமிழ்ப் பற்றால் கணித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் முதல் இயக்குநர். இணையவழிக் கலிவிக்கு முதன் முதலாக வித்திட்டவர். புதிது புதிதாகப் புதுமைகளைப் படைப்பவர். உத்தமம் அமைப்பிற்குப் பெயர் சூட்டியவர். உலகத் தமிழ் தகவல் தொழிநுட்ப மன்றம்( உத்தமம்) International Fourm for Information technology in Tamil( INFITT)
ஆசிரியரின் கணிப்பொறி சார்ந்த நூல்கள்
1. கணிப்பொறியியல்
2. கணிப்பொறியும் தகவல் தொடர்பியலும்
3. HTML- ஓர் அறிமுகம்
4. C மொழி
5. ஸ்டார் ஆபிஸ்
6. விஷீவல் பேசிக்
7. ஜாவா
8. அறிவியல் தமிழ்க் கலைச்சொற்கள்
9. தமிழ்க் கணிப்பொறி மொழிகள்
10. இணையத் தமிழ் வரலாறு.
பிற நூலகள்
1 பொன்னவைக்கோ கவிதைகள்
2. மெல்லத் தமிழ் இனி வெல்லும்
3. அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்.
முனைவர் இராதசெல்லப்பன்.
பாரதிதாசன் பல்கலைக்கழக்த்தில் தமிழாய்வுத்துறையின் தலைவராகப் பணியாற்றவர். சிறந்த தமிழ்க் கணினிப் பற்றாளர். பல ஆய்வு மாணவர்களுக்குக் கணிப்பொறி அறிவின் தாக்கத்தை ஏற்படுத்தியவர். உத்தமம் குழுவில் உருப்பினராக பல ஆண்டு காலம் பணியாற்றியவர். இவர் கணிக் கலைச்சொல் அகராதி என்ற நூலையும் கணிப்பொறியும் தமிழும் என்ற இரு நூல்கலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் அருமுயற்சியால் பாரதிதாசன் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் தமிழ் ஓலைச்சுவடிகளைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார்.
முனைவர் துரை.மணிகண்டன்.
தஞ்சை மாவட்டம் கச்சமங்கலம் என்னும் சிற்றூரில் துரைக்கண்ணு முத்துராஜா, சவுந்தரவள்ளி பாண்டுரார் அம்மையாருக்கு 1973 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை கச்சமங்கலம் அரசுபள்ளியில் பயின்று மேலநிலைக் கல்வியைத் திருக்காட்டுப்பள்ளி சர். சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தவர். தனது இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைத் (1994 முதல் 2001 முடிய) திருச்சிராப்பள்ளித் தூயவளனார் கல்லூரில் பெற்றார். முனைவர்ப் பட்டத்தைத் தேசியக்கல்லூரியில் 2007 முடித்துள்ளார். இவர் தமிழ் இணையத்தின் மீது அளவுகடந்த பற்றுக்கொண்டவர். தமிழ் இணையம் என்ற தலைப்பில் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்.
இவைமட்டுமன்றி தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் சார்ந்த வல்லுனர்கள் பயன் பெறும் வகையில் தமிழுலகத்திற்கு நான்கு நூல்களையும் எழுதியுள்ளார்.அவைகளில் இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள், கணிப்பொறியும் இணையத்தமிழ வரலாறும். என்பதாகும்.
இணையமும் தமிழும் என்ற நூல் திருச்சிராப்பள்ளி ஈ. வெ. ராமசாமி அரசு கலைக் கல்லூரியில் பாடமாக வைக்கப்படுள்ளது. “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்” என்ற நூலுக்குத் திருச்சிராப்பள்ளி , முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையம் வழங்கும் படைப்பியல் பட்டயம்-2010 சான்றிதழ் மற்றும் ரூ 5000/- ரொக்கப் பரிசும் பெற்றிருக்கிறது.
முனைவர் மு.இளங்கோவன்
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் 20-06-1967 இல் உழவர்குடியில் பிறந்தவர். பெற்றோர் சி. முருகேசனார், திருவாட்டி மு. அசோதை அம்மாள். தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் உள்கோட்டை அரசினர் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில்முடித்தவர் (1972-1982). மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தவர் (1982-1984). மூன்றாண்டுகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்து, புலவர் ந. சுந்தரேசனார் எனும் தமிழாசிரியரின் நெறிப்படுத்தலில் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைமுதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர் (1987-1992). பின்பு புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல்துறையில் "மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் பட்டம் பெற்றவர்(1992-1993). பின்பு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் முனைவர்பட்ட ஆய்வினை (1993 -1996) நிறைவு செய்தார். முனைவர் பட்டத்திற்கு இவர் "பாரதிதாசன் பரம்பரை' என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமிழ்க்கவிதை வரலாற்றில் பல கவிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் பதிவு செய்தார்.
“தமிழின் ஆழ்ந்த அறிவும் தொழில்நுட்பத்தின் விரிவும் இணைந்து இருநூற்றாண்டுகளைப் பாலம் கட்டி இணைக்கத் தெரிந்த முனைவர் மு.இளங்கோவனைப் போன்ற இணையத் தமிழர்கள்தாம் தமிழ் உலகத்தைத் தாங்கிப் பிடிக்கும் தங்கத் தூண்களாகத் திகழப்போகிறார்கள்உ இவரைப் போன்ற இளைஞர்களைத்தான் என் கவிதை கனவு கண்டு வருகின்றது” என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் பாராட்டப்பெற்றவர் முனைவர் மு.இளங்கோவன். இயல், இசை, நாடகம் என்று பகுக்கப்படும் தமிழில் இணையத்தமிழ் என்று இன்னொரு வகையை இணைத்துத் தமிழ் இணையத்தைத் தமிழகம் முழுவதும் பரப்பி வருபவர். நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று தமிழ் இணையத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து தமிழகத்தில் அறிவுப்புரட்சி செய்து வருவதையும் தமிழ் அறிஞர்களின் வாழ்க்கையைப் பல்லாயிரம் பக்கம் இணையத்தில் எழுதி இணைத்துள்ளதையும் அறிந்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (பெட்னா) அமெரிக்காவிற்கு அழைத்து இவரைச் சிறப்புச் செய்து பாராட்டி அனுப்பியுள்ளது.
இணையத்தமிழ் பங்களிப்பு மற்றும் விருதுகள்
கணினிப் பயன்பாடு நோக்கித் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் தேவையில்லை என்று உரைத்தவர். கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில் இணைக்கும் ஒருங்குகுறி சேர்த்தியம் முயற்சியில் உலக அளவில் நடந்த உரையாடல்களில் கலந்துகொண்டு தமிழுக்கு ஆக்கமான கருத்துகளை
தமிழறிஞர்களின் வாழ்வியலை இணையத்தில் பதிவு செய்யும் முயற்சியில் நூற்றுக்கணக்கான அறிஞர்களின் வாழ்வியல் இவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ் இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி பெறத் தமிழகத்தின் பல கல்லூரிகளில் தமிழ் இணையப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார். இவர் உத்தமம் (INFITT) பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர்தம் இணையத் தமிழ்ப் பணியைப் பாராட்டித் தருமபுரித் தமிழ்ச்சங்கம் இணையத் தமிழறிஞர் என்னும் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது (2008). தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த வலைபதிவருக்கான விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழி இளம் அறிஞர் விருதினை (2006- - 2007) மாண்புயர் இந்தியக் குடியரசுத்தலைவர் அவர்களின் கையால் இவருக்கு வழங்கியுள்ளது. தமிழக மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் கையால் ஒரு இலட்சம் உருவா விருதுத்தொகையைப் பெற்றவர்.
தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர்கள் வளர்ச்சிக்கும் அறிவியல் சிந்தனையோடு பணியாற்றியும், பயிற்றுவித்தும் வருவதோடு மிகச்சிறந்த ஆய்வுப்பணிகளைச் செய்துள்ளமையைப் பாராட்டி இந்த ஆண்டு(2012) தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் இவருக்குப் பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.
ஆசிரியரின் பிறநூல்கள்.
மாணவப் பருவத்தில் மாணவராற்றுப்படை (1990), பனசைக்குயில் கூவுகிறது (1991), அச்சக ஆற்றுப்படை (1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப்போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள் நூல்களுள் மணல்மேட்டு மழலைகள், இலக்கியம் அன்றும் இன்றும், வாய்மொழிப்பாடல்கள், பழையன புகுதலும், அரங்கேறும் சிலம்புகள், பாரதிதாசன் பரம்பரை, பொன்னி பாரதிதாசன் பரம்பரை, பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.), நாட்டுப்புறவியல், அயலகத் தமிழறிஞர்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
வலைப்பதிவு: http://muelangovan.blogspot.com/
மின்னஞ்சல்: muelangovan@gmail.com
முனைவர் தி.நெடுஞ்செழியன்.
திருச்சிராப்பள்ளி தூயவளனார் கல்லூரியில் தமிழாய்வுத்துறைப் பேராசிரியாராகப் பணியாற்றிவருகிறார். இவர் பல கல்லூரிகளில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியுள்ளார். தமிழ்த்திணை என்ற இணைய இதழையும் நடத்திவருகின்றார். இவரது தமிழ்க் கணினியியல் என்ற நூல் பாரதிதாசன் பல்கலைக்கழக அஞ்சல் வழியில் முதுகலைக்குப் பாடமாக வைத்துள்ளார்கள்.
முனைவர் மு.பழினியப்பன்
புதுக்கோட்டை மாமன்னர் அரசுக்கல்லூரியில் தமிழ்த்துறைப்பேராசிரியாரகப் பணியாற்றி வருகின்றார். தமிழ் இணைய வளர்ச்சிக்கு இவரது பங்கும் குறிப்பிடத்தக்கது. பல கல்லூரிகளில் கணிப்பொறிசார்ந்த தலைப்புகளில் உரை நிகழ்த்தியுள்ளார். கணினியும் தமிழும் என்ற நூல் புதுச்சேரி பாரதிதாசன் கல்ல்லூரியிலும், புதுகோட்டை மாமன்னர் கல்லூரியிலும் இளங்கலை பாடத்திற்குப் பாடமாக வைத்துள்ளனர்.
தேவையான பகிர்வு அன்பரே நன்று
நன்றி குணா. எமக்குத்தெரிந்த நண்பர்களைத்தான் பதிவேற்றம் செதுள்ளேன்.
இவ்வரிசையில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் சி.சிதம்பரம் அவர்களையும் சேர்க்கலாம்