/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, March 27, 2012

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் போட்டித்தேர்வுளுக்கான இணையதளங்கள் பயிலரங்கம்.

பல்கலைக்கலைக்கழக நிதிநல்கை குழுவுடம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி(முசிறி) விலங்கியல் துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் இன்று காலை 11 மணிக்குக் கல்லூரி முதல்வர், முனைவர் விஜயலெட்சுமி சீனிவாசன் தலைமையில் இனிதே தொடங்கியது.

கல்லூரி முதல்வர் திருமதி விஜயலெட்சுமி சீனிவாசன் அவர்கள்.


விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் கெ. சுந்தரராசு அவர்கள் வரவேற்புரை நல்கினார். அடுத்து கல்லூரி முதல்வர் தொடக்கவுரை நிகழ்த்தினார். இணையம் இன்றளவு மாணவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்தி வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு வழிவகுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.



அடுத்து நான் இணையமும் தமிழும், போட்டித்தேர்வுகளக்கான இணையதளங்கள் என்ற தலைப்புகளில் சிறப்புரையாற்றினேன்.
இணையத்தின் வளர்ச்சி தமிழ் வலைப்பூக்களின் பயன்பாடு, தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாடுகள் போன்றவைப் பற்றி பேசினேன்.
அடுத்து போட்டித்தேர்வுகளுக்கான இணையதளங்கள் சுமார் 50 மேற்ப்பட்டதை எடுத்து விளக்கினேன்.




மத்திய அரசின் போட்டித்தேர்வுகளான IAS, IPS, IRS, IFS, LIC, BANK, இந்திய பாதுகாப்புப் பணிகள் UNION PUBLIC SERVICE COMMISSION போன்ற இணையதளங்களின் பகுதிகள் மற்றும் அதில் உள்ள சேவைகளை எடுத்து விளக்கினேன். தமிழக அரசின் தேர்வுவாரியம், தமிழ்நாடு காவல்துறைச் சார்ந்த இணையதளங்கள் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.



மேலும் சில பயனுள்ள போட்டித்தேர்வுகளுக்கான இணையதளங்களும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டப்படது.
 தமிழில் வெளிவரும் போட்டித்தேர்வுகளுக்கான http://alaiyallasunami.blogspot.in/2011/11/blog-post.html அலையல்ல சுனாமி என்ற வலைப்பூவும், எழுத்தாளரும், பேராசிரியருமான பெருமாள்முருகன் அவர்களின் http://www.perumalmurugan.com/2011/02/5.html. இணையதளமும் மற்றும் http://www.tnpsctamil.in/ என்ற முகவரியும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.



 இந்த நிகழ்வில் விலங்கியல் துறையைச் சார்ந்த 12 மேற்பட்ட பேராசிரிய பெருமக்களும், முதுகலை விலங்கியல் மாணவர்கள், மற்றும் இளங்கலை மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.


 இந்நிகழ்ச்சியை முன் நின்று நடத்தியவர் விலங்கியல் துறைப்பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம் ஆவார்.


 பேராசிரியர் மருதநாயகம் இறுதியாக நன்றியுரை வழங்கியனார்.

நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள்.



1 comments:

  • விச்சு says:
    April 19, 2012 at 7:37 AM

    வாழ்த்துக்கள். என்னுடைய தளம் மற்றவர்களுக்குப் பயன்படுவதில் மகிழ்ச்சி.ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பும் தற்போது உள்ளது. படித்து பயன் பெறவும்.
    http://alaiyallasunami.blogspot.com/2012/04/blog-post_09.html