பாரம்பரியமிக்கத் திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லுரித் தமிழாய்வுத்துறையில், இன்று காலை பதினொரு மணிக்கு இணையப்பயிலரங்கம் துறைத்தலைவர் முனைவர் கு.இராசரத்தினம் அவர்களின் தலைமையில் இனிதே தொடங்கியது.
விழாவின் தொடக்கமாக மாணவர் க.ஜெயசீலன் வரவேற்புரை நல்கினார். துறைத்தலைவர் அவர்கள் தலைமையுரையாக இன்றைய தமிழ் மாணவர்களுக்குக் கணினியின் அவசியமும், இணையத்தின் பயன்பாடும் மிகமுக்கியமானது என்றும் அதனால்தான் முதல் மற்றும் மூன்றாம் பருவங்களில் கணிப்பொறிப் பாடத்தை இக்கல்லூரி நடைமுறைப் படுத்தியுள்ளது என்று கூறி தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.
துறைத்தலைவர் முனைவர் கு.இராசரத்தினம்
அடுத்து சிறப்புரையாக தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில் கணினியின் தோற்ற, அதன் வளர்ச்சி, பயன்பாடுகள் பற்றி எடுத்துக்கூறினேன்.
இணையம், இணையத்தின் வளர்ச்சி, இணையத்தில் இலக்கியங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்துள்ளனர் என்பதும் பற்றியும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இணையம் ஆற்றிவரும் பங்களிப்பையும் எடுத்து விளக்கினேன்.
தமிழ் இணையப்பல்கலைக்கழகம், அகராதி.காம், தமிழ் விக்கிபீடியா,மதுரைத்திட்டம்,போன்ற இணையதளங்கள், வேர்களைத்தேடி,சேக்கிழார்கல்பனா போன்ற வலைப்பூக்களையும் எடுத்துக்காட்டி அதில் இடம்பெற்றுள்ள தமிழ் இலக்கிய வளங்களின் செழுமைகளைச் சுட்டிக்காட்டினேன். மாணவர்களும் பேராசிரியர்களும் வினாக்கள் கேட்டனர்.
கலந்துகொண்ட மாணவர்கள்
மாணவ, மாணவிகள் பிற இந்திய மொழிகளில் ஒன்றை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினேன்.
கலந்துகொண்ட மாணவிகள்.
விழா முடிவாக முதுகலை மாணவி இ.கவுதமி நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment