/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, June 11, 2020

தமிழ்விக்கிப்பீடியாவின் தந்தை இ.மயூரநாதன்



தமிழ் விக்கிப்பீடியா தந்த இ.மயூரநாதன்
இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணார்பண்ணை என்னும் ஊரில் பிறந்தவர்தந்தை இரத்தினவேலு பிள்ளை, தாயார் தங்கலட்சுமி

தொடக்க கல்வியை வண்ணார்பண்ணையில் உள்ள  இராமகிருஷ்ணா மடத்தால் நடத்தப்பட்ட வைத்தீஸ்வர வித்தியாலயா பள்ளியிலும்
கட்டிடக் கலையில் இளநிலை, முதுநிலை பட்டங்களை  கொழும்பு மொரட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் முடித்தவர்.

16 ஆண்டுகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிவர்
1993 க்குப் பின்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஆண்டுகள் கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றிவர்.

   2001 ல் விக்கிப்பீடியாவை ஜிம்மி வேல்ஸ், லேரி சாங்கரும் இணைந்து பல மொழிகளில் பயன்படுமாறு  உருவாக்கினார்கள்.    தமிழ் விக்கிப்பீடியாவிற்கு 2003 ல் தனது பங்களிப்பை வழங்கத் தொடக்கியுள்ளார்

4,300 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பிற பயனர்கள் எழுதிய நூற்றுக்கும் மேறப்பட்ட கட்டுரைகளை திருத்தம் செய்துள்ளார். பல்வேறு ஒளிப்படங்களையும் விக்கியில் பதிவேற்றமும் செய்துள்ளார்.

மயூரநாதன் வடிவமைத்த முதல் இடைமுகம்- நவம்பர்,25, 2003. பயனர்பக்க முதல் தொகுப்பு- 25,மே,2003.

 தமிழ் விக்கிப்பீடியா உருவாக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தமைக்காக இவருக்குக் கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டமும் டொறொன்டோ பல்கலைக்கழகத் தென்னாசியக் கழகமும் இணைந்து 2015 ஆம் ஆண்டுக்குரிய இயல் விருதினை பெற்றவர்.  தமிழ் மக்களில் சிறந்த மனிதர்களுக்கும், நம்பிக்கைகள் அளிக்கும் மனிதர்களுக்கும் இந்த விருதை ஆண்டுதோறும் பத்து ஆளுமைகளுக்கு ஆனந்தவிகடன் வழங்குகிறது.
கலைக்களஞ்சியமும், தமிழ் மக்களின் அறிவுத்திரட்டுமான தமிழ் விக்கிபீடியாவின்  முன்னோடியான மயூரநாதன்





0 comments: