இந்திய அரசால் 59 செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அந்த 59 செயலிகளின் பெயர்கள் இந்தக் காணொலியில் வழங்கப்பட்டுள்ளது.
29/06/2020 அன்று சேலம் அரசு கலைக் கல்லூரி தமிழத்துறையின் சார்பாக நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற பொருண்மையில் ஒன்றுகூடல் செயலி தொடர்பாக இணைய வழியில் நான் உரை வழங்கினேன். இந்த உரையில் ZOOM மற்றும் TEAM LINK செயலி தொடர்பாகவும் விரிவான விளக்கத்தையும் பயிற்சியையும் வழங்கினேன் இப்பயிற்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். நிறைவாக பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டன. அந்த வினாக்களுக்குப் விடையையும் வழங்கினேன். இந்த நிகழ்வைத் திறம்பட ஒருங்கிணைத்து நடத்திய தமிழத்துறைப் பேராசிரியை முனைவர் பிரேமலதா அவர்களுக்கும் கல்லூரி முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், துறை தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.