/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, May 10, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Zoom செயலி ஊடான கணினித்தமிழ் உரை

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Zoom செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 4

07.05.2020 மாலை 5.00 மணிக்குச் சிங்கப்பூர், பள்ளி ஆசிரியர், முனைவர் ஜாஸ்லின் பிரிஸில்டா அவர்கள் “ஒருங்கிணைந்த இணையவழிச் செயல்பாட்டில் ஜி சூட் (G Suite) செயலிகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் முனைவர் ஜாஸ்லின் பிரிஸில்டா அவர்களின் உரையும் பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
கூகுள் நிறுவனம் வழங்குகின்ற ஜி-சூட் (G Suite) பல்வகைச் செயலிகள் குறித்தும் இவற்றின் வாயிலாகத் தகவல் தொடர்பு, கூடிக்கற்றல், கற்றல் மேலாண்மை, ஈடுபாட்டுடன் கற்றல், கற்பித்தல் போன்றவை சாத்தியம் என்பதையும் தெளிவாக்கினார்.

ஜி-சூட் செயலியை விலை மற்றும் விலையில்லாமல் பெறும்முறை, இலவசமாகப் பெறும் செயலியில் 30 ஜி.பி. சேமிப்பகம் என்பதும், 24 மணி நேரத்திற்கு 2000 மின்னஞ்சல்கள் அனுப்பமுடியும் என்பதையும் பதிவுபடுத்தினார்.
கூகுள் வகுப்பறை (Google Classroom), மின்னஞ்சல் (Mail), இயக்ககம் (Drive), நாட்காட்டி (Calendar), ஆவணங்கள் (Document), விரிதாள் (Excel), படவில்லைகள் (Slides), படிவம் (Form), ஊடாடும் வெள்ளைப் பலகை (Jam Bord), இணையக்கூடுகை (Meet) என்னும் செயலிகளின் பயனாக்கத்தை எடுத்துரைத்தார்.
கூகுள் வகுப்பறையில் புதிய வகுப்பறையைத் தொடங்கி மாணவர்களை இணைத்தல், துணை ஆசிரியரை ஏற்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களுக்குத் திட்டக்கட்டுரை (Assignment), தேர்வுகள் கொடுத்தல், விடை மதிப்பீடு என விரிவான தன்னுடைய சொற்பொழிவை ஆற்றினார். தொடர்ந்து கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள் என 63-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 comments: