தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 14
17.05.2020 மாலை 5.00 மணிக்குக் கோயம்புத்தூர், ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த. சத்தியராஜ் அவர்கள் “தமிழில் மின்னூல் உருவாக்கம்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், தமிழ் மின்னூல்கள் உருவாக்கம், அதற்கான தேவை, பயன்பாடு, கையாவணம் (PDF) கோப்பு வடிவத்தில் சேமிக்கும் வழிமுறைகள், அமேசான் நிறுவனத்தின் கிண்டில் மென்பொருள் எளிமையான இடைமுகம் கொண்டுள்ளது என்றும் மின்னூல் வெளியிடுவதற்கான இணையதளங்கள், நூல் காப்புரிமை (ராயல்டி) குறித்த தெளிவுகள் குறித்தும் பொழிவாற்றினார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 40-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment