/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, May 9, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான கணினித்தமிழ் உரை


தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 3
07.05.2020 மாலை 5.00 மணிக்குக் கேரளா, மத்தியப் பல்கலைக்கழக மொழியியல் துறைப்பேராசிரியர் முனைவர் கோ. பழனிராஜன் அவர்கள் “தரவகம் (Corpus)” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.

இந்நிகழ்வில் முனைவர் கோ. பழனிராஜன் அவர்களின் உரையும் பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
தரவகம் (Corpus) என்பதன் பொருள் என்ன, தரவகத்தின் வரலாறு, தரவகத்தின் வகை, தரவகத்தின் தேவைப்பாடு என்ன, ஆங்கில மொழியின் முதன்மைத் தரவகங்கள், எழுத்துத் தரவகம், பேச்சுத் தரவகம், சைகைமொழித் தரவகம் (sign language Corpus), தமிழ்த் தரவகங்கள், இந்திய மொழிகளுக்கான தரவுத் தொகுப்பியம் (LDC-IIL), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழித் தரவகம் என்னும் படிநிலைகளில் தனது சொற்பொழிவை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள் என 55-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 comments: