/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, May 8, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான கணினி உரை


தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 2
05.05.2020 மாலை 5.00 மணிக்கு விருதுநகர், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் ப. கருணைதாசன் அவர்கள் “மைக்ரோசாப்ட் மொழிமாற்றிக் கருவிகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஆசிரியர் ப. கருணைதாசன் அவர்களின் உரையும் பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
ஆசிரியர்கள் புதிதாகக் கற்றல், கற்பித்தல் என்னும் முறையில் புத்தாக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் இன்றியமையாமை, கூகுள் பிளே ஸ்டோர் வழங்கும் எண்ணற்ற கற்றல் கற்பித்தல் செயலிகள், மொழிபெயர்ப்பின் தேவை, மைக்ரோசாப்ட் மொழிமாற்றிக் கருவியின் (MicroSoft Translator) தனித்தன்மை, 60-உக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்புச் சேவை, உரை (Text), குரல் (Voice), உரையாடல்கள் (Chat), நிழற்படம், ஸ்கிரீன் சாட் (Camera Images, screen shot), குறுந்தொடர் மொழிபெயர்ப்பு என்பதில் இருந்து மொழிபெயர்த்துக் கொள்ளுதல், குழு அரட்டையில் பல மொழியினர் இருந்தாலும் அவர்கள் உரை, ஒலி வடிவத்தில் கருத்துகளை உள்ளிட்டாலும் நாம் தேர்ந்தெடுக்கும் மொழியின் ஒலி வடிவத்திலேயே கேட்கலாம் என்பன போன்ற தகவல்களை இச்செயலி வழங்கும் வசதிகளாக எடுத்துக்காட்டினார்.

இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள் என 53-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 comments: