/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, May 11, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கிய கணினித்தமிழ் உரை


தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 8
11.05.2020 மாலை 5.00 மணிக்குத் திருவாடனை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்துறைத் தலைவர், பேராசிரியர், முனைவர் மு. பழனியப்பன் அவர்கள் “இணையமும் இடைவெளியும்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், பல கண்டங்களால் தடைபட்டுக்கிடந்த தமிழ்மொழியை இணையம் இணைத்து வைத்துள்ளதை வெளிப்படுத்தினார்.

இருப்பினும், இணையத்தில் ஏற்படுகின்ற இடர்பாடுகள் தமிழ்மொழிப் பயன்பாட்டில் இடைவெளியை உண்டாக்குக்கின்றன என்றும் அதனால் தமிழ்மொழி வளர்ச்சி தடைபடுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஒருங்குறி (Unicode) எழுத்துகள் ஒருமுக வடிவம் கொண்டவை. இவற்றைக் கணினியில் எளிதாகப் பார்க்கப் பயன்படுத்திட முடியும். ஆனால் தட்டச்சுச் செய்திட மென்பொருளைத் தரவிறக்கம் செய்யவேண்டும் என்னும் எழுத்தாக்க இடர்பாட்டைக் குறித்தார்.
மதுரைத் திட்டம், சென்னை நூலகம்.காம், தமிழிணையக் கல்விக்கழகம் வழங்கும் தமிழ் மின்நூலகம் ஆகிய நூலகங்களில் காணப்படும் வகைப்பாட்டுத் தெளிவின்மையால் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எதிர்நோக்குகின்ற இன்னல்கள் என்பனவற்றை இணைய நூலக இடர்பாடுகளாக வெளிப்படுத்தினார்.
இணைய நூலகங்கள் மற்றும் இணைய இதழ்களைச் செம்மைப்படுத்துவதன் இன்றியமையாமை, இணையம் மற்றும் தமிழ்ச் செய்யுள் பகுதிகளைப் படமாக்கி (Image) இன்றைய இளந்தலைமுறைகளிடையே கொண்டு சேர்க்கும்பொழுது இடைவெளிகள் ஏற்படுவதைக் காட்டினார்.

இத்தகைய இணைய இடர்பாட்டு இடைவெளியைக் களைய புதிய ஒருங்கிணைந்த வரைவுத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
அதை அரசுக்குக் கோரிக்கையாகத் தமிழ் இணையக் கழகம் முன்வைக்க வேண்டும் என்னும் கருத்தாக்கங்களை முன்மொழிந்தார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 45-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
காணொலி

0 comments: