/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, May 10, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் கணனித்தமிழ் உரை

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 6

09.05.2020 மாலை 5.00 மணிக்குக் கோயம்புத்தூர், PSG கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், முனைவர் இரா. குணசீலன் அவர்கள் “கல்விசார் காணொலி உருவாக்க வழிமுறைகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் NPTEL, udemy, YouTube, vimeo, TED, moodle, mahara, Blackboard, D2L போன்ற காணொளி வழங்கும் தளங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
பவர்பாயின்ட் (Power Point) மென்பொருளைப் பயன்படுத்திக் நல்ல காணொளிகளை உருக்குதல், திறன்பேசியில் (Smart Phone) காணொலித் திருத்தங்கள் (Video Editing) செய்வதற்குக் கிடைக்கும் செயலிகள், ஒலி மற்றும் ஒளி, ஒலி மற்றும் படம் (Image), நேரலை (Live), செயல்விளக்கத் திரைப் பதிவு (Screen Recording) என்னும் காணொலி வகைகள் குறித்தும் இலவச மற்றும் திறந்த காணொலித் திருத்த மென்பொருள் (Video Editing Software) குறித்தும் பொழிவாற்றினார்.

இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 55-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 comments: