Team Link செயலி வழியில் உரை மற்றும் கலந்துரையாடல் இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 1
தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 1
04.05.2020 மாலை 5.00 மணிக்கு ஆந்திர மாநிலத்தின் தேசிய தகவலியல் மையத் துணைத் தலைமை இயக்குநர் முனைவர் இனிய நேரு அவர்கள் “இணையமும் மின்னாளுமையும்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
04.05.2020 மாலை 5.00 மணிக்கு ஆந்திர மாநிலத்தின் தேசிய தகவலியல் மையத் துணைத் தலைமை இயக்குநர் முனைவர் இனிய நேரு அவர்கள் “இணையமும் மின்னாளுமையும்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் முனைவர் இனிய நேரு அவர்களின் 30 நிமிட உரையும் பங்கேற்பாளர்களின் 30 நிமிடக் கலந்துரையாடலும் நடைபெற்றது.
கட்டற்ற மென்பொருள்கள் (Open Source Software) பயன்படுத்துவதால் அரசுக்கு நிதிச்சுமை குறைவு, அனைத்துத் துறைகளிலும் நடுவண் மற்றும் மாநில அரசுகள் வழங்கும் இ-சேவைகள், பொதுமக்கள் மற்றும் துறைசார் அலுவலர்களுக்கான 250-உக்கும் மேற்பட்ட செயலிகள், ஆரோக்ய சேது, டிஜி லாக்கர், வாகன்சாரதி, எம்-பரிவாகன் போன்றவை அன்றாடம் மக்களால் புழக்கத்திற்குப் பயன்படும் செயலிகள், அரசின் இணையவழிக் கிராம முன்னேற்றத் திட்டங்கள், கல்விச் சான்றிதழ்களை மின்னாக்கப்படுத்தும் போது போலிகளைக் கட்டுடைத்தல், இணையவழியாக மாணவர்கள் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளுதல் (NAD) போன்றவை குறித்தும் தமிழகத்தில் சற்றேறக்குறைய 70 விழுக்காடு அளவிற்கு மின்னாக்கப் பணிகள் நடைபெற்றது குறித்தும் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், தமிழகம், இந்தியா, இலண்டன், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment