இன்று (10.05.2020)ஞாயிறு , தமிழ் இணையக் கழகமும் தமிழ்பண்பலையும் இணைத்து நடத்திவரும் சிறப்புச் சொற்பொழிவில் கலந்து “ தமிழ் வகுப்பறையும் கற்றல் கபித்தலில் எண்ணிம அலையும்- தமிழாசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினேன்.
மலேசிய நேரம் : இரவு 7.30 - 8.45 வரை.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்களுக்கு அவர்தம் குழுவினர்க்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எமது இயங்கலை உரைக்குப் பின்
தமிழ் இணையக் கழகம் அனுப்பிய அறிக்கை பின்வருமாறு:-
தமிழ் இணையக் கழகம் அனுப்பிய அறிக்கை பின்வருமாறு:-
தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 7
10.05.2020 மாலை 5.00 மணிக்கு மலேசியப் பள்ளி ஆசிரியர் திரு. வாசுதேவன் இலக்குமணன் அவர்கள் “தமிழ் வகுப்பறையும் கற்றல் கற்பித்தலில் எண்ணிம அலையும் - தமிழாசிரியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் இருபத்தியோராம் நூற்றாண்டு அதிவேக மாற்றங்களுக்கு உள்ளாகி வருதல், கற்றலுக்கான கருவிகள், குறுஞ்செயலிகளின் பெருக்கம், கற்றல் கற்பித்தலில் ஏற்பட்டுள்ள நுண்திறன்கள், புதிய கற்றல் துணைக்கருவிகளின் சாத்தியப் போக்கு, புதிய கற்றல் சூழலுக்கேற்ப ஆசிரியர்கள் தயாராதல் குறித்து விளக்கினார்.
ஹுஸ்டன் பல்கலைக்கழகம் வகைப்படுத்தியுள்ள புதிய கற்றல் துணைக்கருவிகளான ஒத்துழைப்பு, பேச்சுக்கலை, ஆக்கச்சிந்தனை, திறனாய்வுச் சிந்தனை, மறுமொழி (Feedback), புத்தாக்கம், படைப்பு, சிக்கல் கலைதல், உற்பத்தி, மீட்டுணர்தல், சமூக வலைதளங்கள் என ஆசிரியர்-மாணவர் கற்பித்தல் அமைய வலியுறுத்தினார்.
ஹுஸ்டன் பல்கலைக்கழகம் வகைப்படுத்தியுள்ள புதிய கற்றல் துணைக்கருவிகளான ஒத்துழைப்பு, பேச்சுக்கலை, ஆக்கச்சிந்தனை, திறனாய்வுச் சிந்தனை, மறுமொழி (Feedback), புத்தாக்கம், படைப்பு, சிக்கல் கலைதல், உற்பத்தி, மீட்டுணர்தல், சமூக வலைதளங்கள் என ஆசிரியர்-மாணவர் கற்பித்தல் அமைய வலியுறுத்தினார்.
மாணவர்களின் கற்றல் தேவை அதிகரித்துக் காணப்படுவதால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கற்பிப்பவரின் பயனாக்க அறிவு மேம்பட வேண்டும் என்றும், புத்தாக்கச் சிந்தை புதியபுதிய மாற்றங்களைக் கற்றலில் தோற்றுவிக்கும் என்றும், மின்நூல்கள் மாணவர்களிடையே விளைபயன்மிக்க மாற்றங்களைத் தோற்றுவிக்கும் என்றும் மாணவர்களுக்கு அவை தகவல் கருவூலமாய்ச் செயல்பட வழிவகுத்து உருவாக்கித் தரவேண்டும் என்றும் ஆசிரியர்கள் சவால்களை எதிர்கொள்ளவும் நிலையான மாற்றங்களை ஏற்படுத்தும் வழிமுறைகளையும் வழங்கிப் பொழிவாற்றினார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 50-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment