/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, August 19, 2025

’இணைய தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியின் நடைமுறை முன்னேற்றங்கள்’ - SRM VALLIYAMMAI ENGINEERIN COLLEGE

 SRM  வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 29 - 7 - 2025 அன்று தமிழ் மொழியின் நவீன நடைமுறைகளை மாணவர்களுக்கு அறிவூட்டும் நோக்குடன் ’இணைய தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியின் நடைமுறை முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் நிரம்பிய இணைய தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் சிறப்புரையும் மற்றும் பயிற்சியையும் மாணவர்களுக்கு வழங்கினார். இதில் மாணவர்கள் பல்வேறு விதமான வினாக்களையும் அதற்கான பதில்களையும் பெற்றுக் கொண்டனர். 

குறிப்பாக மாணவர்கள் குழுவாக சேர்ந்து அடுத்த கட்டம் நம் தமிழ் மொழிக்கு என்னென்ன? தொழில்நுட்ப வசதிகளை செய்ய வேண்டும்? செய்ய முடியும்? செயற்கை நுண்ணறிவில் நாம் செய்ய வேண்டியவை எவை? எவை? என்பதெல்லாம் விவாதமாக முன் வைத்தார்கள். உண்மையில் இந்த இளைய சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக வளர்ந்து வருவது நம்பிக்கையாக உள்ளது. 

இந்த நிகழ்வைத் திறம்பட நடத்திய SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் திருமதி விஜயலட்சுமி அவர்களைப் பாராட்டுகின்றேன்.





0 comments: