/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, September 11, 2015

Dr. DURAIMANIKANDAN (முனைவர் துரை.மணிகண்டன்) தன்விவரக் குறிப்பு

|3 comments
                    தன்விவரக் குறிப்பு

பெயர்               : முனைவர் துரை.மணிகண்டன்

பெற்றோர் பெயர்     : மு.துரைக்கண்ணு

பிறந்த தேதி         :  04-05-1973

வயது                : 42

திருமணம்            ; திருமணமானவர்

நிரந்தரமுகவரி       ; நடுத்தெரு, கச்சமங்கலம் அஞ்சல், தோகூர் வழி,     தஞ்சாவூர் மாவட்டம், 613102.

வசிக்கும் முகவரி     ; ஆசிரியர் குடியிருப்பு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
                           மாயனூர், கரூர் மாவட்டம்.
         
கல்வித்தகுதி
பட்டம்
கல்லூரி/பல்கலைக்கழகம்
ஆண்டு
விழுக்காடு
இளங்கலை தமிழ் (BA)
தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) திருச்சிராப்பள்ளி
1997
56.12
முதுகலைத் தமிழ் (M.A)
தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) திருச்சிராப்பள்ளி
1999
62.97
ஆய்வியல் நிறைஞர்(M.Phil)
தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) திருச்சிராப்பள்ளி
2001
65.04
முனைவர் பட்டம்
(P.hd)
தேசியக் கல்லூரி(பாரதிதாசன் பல்கலைக்கழகம்),திருச்சிராப்பள்ளி.
(இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள்)
மார்ச்-2007


பிற தகுதிகள்
1.       DOA கணினிப்பிரிவு, செப்டம்பர் 2007


பணி  அனுபவ விவரங்கள்
        பத்து ஆண்டுகளாகக் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.
·         ஆகஸ்ட் 2009 முதல் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (திருவரங்கம்-ஸ்ரீரங்கம்) தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.


நூல்கள் வெளியீடு
1.         இணையமும் தமிழும்  நல்நிலம் பதிப்பகம், சென்னை, 2009.

2.         இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்  கவுதம் பதிப்பகம்,சென்னை,ஜூன் 2010.

3.        இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் கவுதம் பதிப்பகம்,சென்னை 2011.

4.        தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் கமலினி பதிப்பகம், தஞ்சாவூர், 2012.

5.        இலக்கிய இன்பம் நல்நிலம் பதிப்பகம், சென்னை, ஜனவரி 2008.
               
6.        மனித உரிமைச் சிந்தனைகள்  நல்நிலம் பதிப்பகம், சென்னை, ஜனவரி 2008.

கருத்தரங்கம் நடத்தியது
1.       பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்க்குட்டப்பட்டு, (திருச்சிராப்பள்ளி) தமிழ்த்துறையின் சார்பாக “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம். நாள்; மார்ச் 27,28-2014.
2.      செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்க்குட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி) தமிழ்த்துறையும் இணைந்து “மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகள்” என்ற பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. நாள்: சனவரி 8,9,10-2015.
அயல்நாடு பயணம்
1.      உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்(உத்தமம்) சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு  “தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்களின் பங்களிப்பு” என்ற தலைப்பிலும் தமிழ் வலைப்பூக்கள் உருவாக்குதல் என்ற பொருண்மையிலும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் வழங்கப்பட்டது. நாள்:29,30-05-2015, 1-6-2015. இடம் சிங்கப்பூர்.


பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்புரை ஆற்றியது.
நாற்பது (40) கல்வி நிறுவனங்களில் இணையத்தில் செம்மொழித் தமிழ்,  தமிழ்க் கணிப்பொறி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் வலைதளங்கள், மின் ஊடகங்களில் தமிழ் எனும் தலைப்புகளில் சிறப்புரை ஆற்றியுள்ளேன்.
விருதுகள்
திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு மற்றும் முத்தமிழ் கலைப்பண்பாட்டு மையம்  சார்பாக 2010 ஆண்டிற்கானப் படைப்பியல் பட்டயம் (சிறந்த அறிவியல் நூலுக்கான முதல் பரிசை) இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற நூலுக்கு 17-01-2011.

இணைய இதழ்களில் கட்டுரைகள் வெளியீடு.
பத்துக் கட்டுரைகள், (www.pathivukal.com, www.thinnai.com, www. Muthukamalam.com, www.vaarppu.com)

இதழ்களில் கட்டுரை வெளியீடு
இருபத்தைந்து (25) கட்டுரைகள் (அரிமா நோக்கு, செந்தமிழ்ச் செல்வி, கலைக்கதிர்,   தமிழ் மாருதம், தமிழ்  இந்து பத்திரக்கை)

தேசியக் கருத்தரங்கில் வழங்கிய ஆய்வுக் கட்டுரைகள்:
30 தேசியக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பல்வேறு இலக்கியத் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கலந்துகொண்ட கருத்தரங்கம்
1.       பதினைந்து (15) கருத்தரங்கம்
2.      புத்தாக்கப் பயிற்சி (Orientation Course)- 10-05-2006 to 06-06-2006.
3.      புத்தாக்கப் பயிற்சி (Orientation Course) - 02-05-2007 to 29-05-2007.
ஆராய்ச்சி அனுபவம்
பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்ட நெறியாளராக இருந்து பதினைந்து (15) மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர்.




















மேகக் கணிமை வழி குறுஞ்செயலி உருவாக்க பயிலரங்கம்

|4 comments


 இரண்டு நாட்களாக 9,10 .9.2015 - திருச்செங்கோடு அருகே அமைந்துள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியில் மேகக் கணிமை வழி குறுஞ்செயலி உருவாக்க பயிலரங்கம் சிறப்பாக நடந்தேறியது.

மகேந்திரா பொறியியல் கல்லூரி, மகேந்திரா பெண்கள் பொறியியல் கல்லூரி மற்றும் தொட்டியம் அருகேயுள்ள பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி உள்பட 8க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து 162 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

முதல்நாள் நிகழ்வில் மேகக் கணிமை நுட்பம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அசூர் , கூகிள் நிறுவனத்தின் கிளவுட் என்ஜின் மற்றும் சாப்ட்லேயர், அமேசான் ஆகியவற்றில் எப்படி விர்ச்சுவல் சர்வரை நிறுவவது என்பது பற்றியும், அலைபேசிகளில் என்ன இயங்குதளங்கள் உள்ளன. அவற்றிற்கான குறுஞ்செயலிகள் உருவாக்குவதற்கான மென்பொருள்கள் பற்றியும் வகுப்புகள் எடுக்கப்பட்டன. மேலும் என்னுடன் இணைந்து மொசில்லா இயங்குதளத்திற்காக  பல்வேறு பணிகளை செய்துவரும் நண்பர் கலீ்ல் என்னுடன் இணைந்து ஜாவா வழியாக எப்படி ஆன்டிராய்டு இயங்குதளத்திற்கு குறுஞ்செயலிகளை உருவாக்குவது என்று வகுப்பெடுத்தார். (கலீலை நமக்கு அறிமுகப்படுத்திய நம்முடைய உறுப்பினர்கள் திரு.தங்கமணி அருண்(மலேசியா), திரு.சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி )


அனைத்து மாணவ/மாணவிகளும் தங்களுடன் மடிக்கணினியை கொண்டு வந்ததால் அவர்களுக்கு தேவையான மென்பொருள்களை ஒரு குறுந்தட்டு வழியாக வழங்கபட்டு மென்பொருள்கள் அங்கேயே நிறுவப்பட்டு, செயல்படுத்தி காட்டப்பட்டது. அதில் சில மாணவர்கள் எப்படி இந்த மென்பொருள்களை நிறுவவது என்று தாங்களாகவே ஒரு மாதிரியினை அடுத்த நாள் காலையில் கொண்டு வந்து அவர்கள் மற்ற மாணவர்களுக்கு வழங்கினார்கள்.


இரண்டாவது நாள் நண்பர் கலீல்,  எக்லிப்ஸ் வழியாகவும், ஆன்டிராய்டு ஸ்டூடியோ வழியாகவும் குறுஞ்செயலிகளை உருவாக்குவது பற்றி சொல்லிக்கொடுத்தார்.

நிறைவாக மாணவர்களுக்கென ஒரு போட்டி
 ஆன்டிராய்டு இயங்குதங்களில் என்ன மாதிரியான மென்பொருளை உருவாக்கலாம் என்ற தலைப்பில் பல்வேறு மாணவர்கள் 30க்கும் மேற்பட்ட மென்பொருள் தலைப்புகளை கூறினார்கள். நிச்சயமாக அனைத்தும் பயனுள்ளவையாக இருந்தது.

ஏன் ரேசன் கடைக்கு செல்லவேண்டும்? ஆன்லைனிலயே ஆர்டர் போட்டுவிடலாமே?  அதற்கென சிறப்பு மென்பொருளை எப்படி உருவாக்கலாம்

ஆக்சிடென்ட் ஆகிவிட்டால் எப்படி நம்முடைய செயல்பாடு இல்லாமலேயே தானாக தம் வீட்டுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிப்பது அதற்கு என்ன வழிமுறைகள் தேவை 

கூகிள் மேப் நுட்பத்தினை பயன்படுத்தி நமக்கு அருகில் உள்ள குருதி கொடையாளரை கண்டுபிடிப்பது எப்படி ?

என்பது வரை நிறைய தலைப்புகள் வழங்கப்பட்டன. அவைகள் முறையாக தொகுக்கப்பட்டன. மேலும் அந்த மென்பொருள்கள் எப்படியெல்லாம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு நாங்கள் சில குறிப்புகளும் வழங்கினோம்.

நிறையவாக பேசிய மாணவர்கள் தமிழில் இதுபோன்ற வகுப்புகள் எங்களுக்கு மிகவும் தேவை என்று குறிப்பிட்டனர்.

ஒரு மாணவருக்கு ஆன்டிராய்டு படித்தால் வாய்ப்பே கிடைக்காது என்று யாரோ தவறாக சொல்ல அவர் அவர் மடிக்கணினியில் உள்ள ஆன்டிராய்டு சார்ந்த மென்பொருளைகளை நீக்கிவிட்டதாகவும் கூறினார். 


ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதல் திறமையான மாணவர்களை கூட தவறாக வழி நடத்துகிறது என்றாலும் என்ன படித்தாலும் வேலை கிடைக்கும் , ஆனால் அவர்கள் ஏட்டறிவு மட்டும் பத்தாது. செயலறிவு  தேவை என்று புரியவைத்தோம்.

மகேந்திரா பொறியியல் கல்லூரி தன் மாணவர்களை மட்டுமல்லாமல் தங்களை சுற்றியுள்ள எல்லா கல்லூரிகளும் கலந்துகொள்ள வைத்து சிறப்பானதொரு ஏற்பாட்டினை செய்திருந்தது. அவர்களுக்கு உத்தமத்தின் சார்பில் நன்றிகள்

தகவல் தொழில்நுட்பத்துறையின் 12 பேராசிரியர்களும் ஒவ்வொரு பணியினை எடுத்துக்கொண்டு சான்றிதழ் வழங்குவது, சிடிக்களை உருவாக்குவது , என்று குழுவாக முயற்சி செய்து எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த இரண்டு நாள் நிகழ்வினை சிறப்பானதொரு நிகழ்வாக மாற்றியுள்ளனர். அவர்களுக்கும் நமது நன்றிகள்

இந்த பயிலரங்கம் சிறப்பாக செயல்பட இணைந்து பணியாற்றிய உத்தமம் இந்தியக்கிளை உறுப்பினர்களுக்கும் என நன்றிகள் 

Thursday, September 10, 2015

உத்தமம் - அருளானந்தர் கல்லூரியில் நுட்பவியல் பயிலரங்கம்.

|5 comments

மதுரைக்கு அருகில் உள்ள கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் உத்தமம் சார்பாக ஒரு நாள் நுட்பவியல் பயிலரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அவர்கள் தொடங்கி வைக்க பேராசிரியர் சி.சிதம்பரம் அவர்கள் முதல் அமர்வில் அலைபேசியில் குறுஞ்செயழில்கள் என்ற பொருண்மையில் மாணவர்களுக்குச் சிறப்புரை வழங்கினார். அடுத்த அமர்வில் நான்(Dr. DURAI.MANIKANSAN) தமிழ் இணைய அறிமுகம் செய்த பின்னர் மாணவிகளுக்குத் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து தமிழில் அடிக்க கற்றுக்கொடுத்தேன்.


அடுத்த அமர்வில் அக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியை திருமதி ஜாஸ்லின் பிரில்ஸ்டா கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றி குறிப்பிட்டார். அடுத்து நான் தமிழ் வலைப்பதிவை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் அதனால் தமிழ் சமுதாயத்திற்கு என்ன பயன் என்பதைப் பற்றியும் எடுத்து விளக்கினேன். இப்பயிற்சியில் ஐந்து மாணவர்கள் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்வதைக் கற்றுக்கொண்டனர். ஐந்து மாணவிகள் தமிழில் வலைப்பதிவை உருவாக்கக் கற்றுக்கொண்டனர். ஒருசிலர் தமிழ் விக்கிப்பீடியா பற்றி பேசி அதில் எழுத கற்றுக்கொண்டனர்.


இப்பயிலரங்கம் பல வழிகளில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பின் குறிப்புரையில் குறிப்பிட்டனர்.

Monday, September 7, 2015

மேகக் கணிமை நுட்பம் வழி அலைபேசி உருவாக்கம்

|4 comments

உத்தமம் இந்தியக்கிளை மற்றும் மகேந்திரா பொறியியல் கல்லூரி இணைந்து மேகக் கணிமை நுட்பம் வழி அலைபேசி உருவாக்கம் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் தேசிய பயிலரங்கத்தினை நடத்துக்கின்றன.

வளர்ந்துவரும் செல்பேசி தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுப்பதற்காக மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழில் குறுஞ்செயலிகளை உருவாக்கவும் பயிற்சியை உத்தமம் இந்தியக்கிளை இந்த பயிலரங்கிற்கு மகேந்திரா பொறியியல் கல்லூரியுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. முழுமையாக தமிழ் வழியாகவே இந்த பயிலரங்கு நடத்தப்பட உள்ளது.

மேலும் மேகக் கணிமை எனப்படும் கிளவுட் கம்ப்யூட்டிங்ம் சேர்ந்தே வளர்ந்து வருவதால் இந்த இரண்டு பிரிவுகளையும் பயன்படுத்துவது என்ற தலைப்பில் இந்த பயிலரங்கு நடத்தப்பட உள்ளது. மேகக் கணிமை நுட்பம்

எனவே வாய்ப்பிருக்கும் நபர்கள் கண்டிப்பாக இந்த பயிலரங்கில் கலந்துகொள்ள உத்தமம் இந்தியக்கிளை வரவேற்கிறது



நுட்பவழி தமிழ்ப் பயன்பாடு கருத்துரை

|2 comments

அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர் மற்றும் உத்தமம் இணைந்து நடத்தும் "நுட்பவழி தமிழ்ப் பயன்பாடு" நிகழ்வு 08-09-2015 அன்று காலை 10 மணிக்கு  கல்லூரியில் உள்ள அன்னைத்தெராசா அரங்கில் இனிதே தொடங்க இருக்கிறது. அனைத்து அன்பர்களும் கலந்துகொள்ள அழைக்கின்றோன்.





Saturday, August 29, 2015

கணினித் தமிழ் வளர்ச்சி - இன்றைய தேவையும் பயன்பாடும்

|5 comments
27,28.08.2015 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்  தமிழியல் துறை, உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் -உத்தமம் இந்தியக்கிளை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரி ஆகியவை இணைந்து 
கணினித் தமிழ்  வளர்ச்சி - இன்றைய தேவையும் பயன்பாடும் என்ற பொருண்மையில் தேசியப் பயிலரங்கம் தமிழில் புலத்தில் நடைபெற்றது.
                                                                     Dr.Durai manikandan

முதல்நாள் 27.08.2015 விழாவிற்கு தமிழியல் புலத்தலைவர் பேராசிரியர் சே.சாரதாம்பாள் அவர்கள் தலைமை ஏற்றார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் இக்கால இலக்கிய துறைத்தலைவர் முனைவர் வை.ராசராசபாண்டியன் வரவேற்றார். பயிலரங்கம் குறித்து கல்வி பணியாளர் மேம்பாட்டு கல்லூரி இயக்குநர் முனைவர் .எஸ்.கண்ணன்  அறிமுக உரையை  நிகழ்த்தினார். பயிலரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக  கல்லூரி வளர்ச்சிக்குழு தலைவர் முனைவர். மு.ராஜியகொடி பயிலரங்கினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பயிலரங்கில் உத்தமம் இந்தியக்கிளை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வமுரளி வாழ்த்துரை வழங்கினார்.

பயிலரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்.அ.முனியன் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர்.துரைமணிகண்டன் இணையத்தமிழ் அறிமுகமும், தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கமும் என்ற தலைப்பிலும்

 மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்.ந.இரகுதேவன் அவர்கள் தலைமையில்  உத்தமம் இந்தியக்கிளை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வமுரளி அவர்கள் கணினியில் தமிழ் கடந்துவந்த பாதை என்ற தலைப்பிலும் , 
பேராசிரியர் மு.பழனியப்பன், Dr.durai.manikandan, பேராசிரியர் பொ.சத்தியமூர்த்தி, திரு.செல்வமுரளி

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒப்பிலக்கியத்துறை உதவி பேராசிரியர் செ.ரவிசங்கர் அவர்கள் தலைமையில் திருவாடணை அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர்.மு.பழனியப்பன் அவர்கள் தமிழ் ஆய்வுகளில் இணையத்தளங்களின் பங்கு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். 

இந்நிகழ்வில் தமிழியல் புல மாணவர்கள் , மொழியியல் புல மாணவர்கள் , நாட்டுப்புறவியல் துறை மாணவர்கள் , தகவல் அறிவியல் துறை மாணவர்கள் மற்றும் பிறதுறை ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

நிறைவாக மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியரும், பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.போ.சத்தியமூர்த்தி நன்றி கூறினார். 

நிறைவு நாள் அன்று  28.02.2015 மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்.இரா.குமாரசாமி அவர்கள் தலைமையில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் சி.சிதம்பரம் அவர்கள் தமிழ் மென்பொருட்களும் , பயன்பாடுகளும் என்ற தலைப்பிலும் , 

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒப்பிலக்கிய துறை பேராசிரியர் முனைவர். பெ.சுமதி அவர்கள் தலைமையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகர் முனைவர்.பா.சுரேஷ் அவர்கள் நூலகமும், இணையப்பயன்பாடும் என்ற தலைப்பிலும் , 

மதுரை காமராசர் பல்கலைக்கழக  தமிழியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்.பா.சங்கரேஸ்வரி அவர்கள் தலைமையில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கணி்னித்தமிழ்  கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இல.சுந்திரம் அவர்கள் மின்நூல்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்

நிறைவுவிழாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வி பணியாளர் மேம்பாட்டுக் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.கண்ணன் அவர்கள் தலைமையில் தலைமையேற்கவும், விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியருமான முனைவர் போ.சத்தியமூர்த்தி வரவேற்புரை நல்கவும், 

தமிழியற் புலத்தலைவர் பேராசிரியர் செ.சாரதாம்பாள் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தவும், மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்.என்.இராசசேகர் அவர்கள் பயிரலங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கவும், 

இந்திய அரசின் மத்திய இளைஞர் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் நாட்டுநலப்பணித்திட்ட சென்னை மண்டல உதவி திட்ட ஆலோசகர்  திரு.ஜான்.சாமுவேல் செல்லையா அவர்கள் பயிலரங்க நிறை விழாப் பேருரை நிகழ்த்தவும் , மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியற்புல தகைசால் பேராசிரியரும் , தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் மு.மணிவேல் அவர்கள்,

 உத்தமத்தின் இந்தியக்கிளை செயலரும் , தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் உதவி இயக்குநருமான முனைவர் க.உமாராஜ் அவர்கள் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கணி்னித்தமிழ்  கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இல.சுந்தரம்  அவர்களும் வாழ்த்துரை வழங்கவும் , 

மதுரை காமராசர் பல்கலைக்கழக இடைக்கால வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் அ.மகாலிங்கம் அவர்களும் , மதுரை காமராசர் பல்கலைக்கழக  இதழியல் மற்றும் அறிவியல் தகவல் தொடர்பியல்துறை உதவி பேராசிரியர் முனைவர்.ஜெ.பாலசுப்பிரமணியம் ஆகியோர்கள் பயிலரங்க மதிப்புரை வழங்கவும், 

மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வி பணியாளர் மேம்பாட்டுக்கல்லூரி  உதவி பேராசிரியர் முனைவர்.இரா.விஜயா அவர்கள் நன்றி கூறவும் விழா இனிதே நிறைவுற்றது.

இப்பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை மதுரை பல்கலைக்கழக தமிழ் புல பேராசிரியர்கள்  மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரி  அதிகாரிகளுக்கும் உத்தமம்-இந்தியக்கிளையின் சார்பில் நன்றிகள்!!

அன்புள்ள  அன்பர்களுக்கு அலைபேசிகளில் ஒரு சோதனை முயற்சியாக எனக்கான குறுஞ்செயலியை விசுவல் மீடியா டெக்னாலஜி இயக்குநர் திரு.செல்வமுரளி அவர்கள் உருவாக்கியுள்ளார். அதன் தொடுப்பை இணைத்துள்ளேன். பயன்படுத்திவிட்டு கருத்தைப் பகிரவும் https://play.google.com/store/apps/details?id=com.Aapp.DuraiManikandan

Tuesday, August 25, 2015

“கணினித் தமிழ் வளர்ச்சியின் - இன்றைய தேவையும் பயன்பாடும்”

|2 comments
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறையும், உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) இணைந்து நடத்தும் “கணினித் தமிழ் வளர்ச்சியின் - இன்றைய தேவையும் பயன்பாடும்” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் நடைபெற உள்ளது நாள்: 27,28-08-2015.



Sunday, July 26, 2015

“இலக்கிய ஆய்வுகளில் கணினியின் பயன்பாடு”

|0 comments
அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இந்திய  மொழிகளின் நடுவண் நிறுவனம்  இணைந்து நடத்தும்  “இலக்கிய ஆய்வுகளில் கணினியின் பயன்பாடு” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிலரங்கம் நடைபெறுகிறது.

இவ்விழாவில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத் தலைவர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்களும் துணைவேந்தர் மூ.பொன்னவைக்கோ அவர்களும் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இவ்விழா அண்ணாமலைப்  பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் அரங்க.பாரி அவர்களின் ஆலோசனையின்கீழ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜா.ராஜா அவர்களின் துணையோடு 28,29,30 ஜீலையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றேன்.







முனைவர் எஸ். அருள்மொழி - Dr.s.Arlmozhi

|1 comments
முனைவர் எஸ். அருள்மொழி ( 1968) … தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில் நுட்பத்துறையில் பல அரிய பணிகளை மேற்கொண்டுவரும் இன்றைய இளைய தலைமுறை ஆய்வாளர். வேதியியலில் இளங்கலைப் பட்டமும் (1988), மொழியியலில் முதுகலைப் பட்டமும் (1990) கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின்னர் ஹைதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் செயற்படுத்தமொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் ( Centre for Applied Linguistics and Translation Studies – Centre for ALTS) எம் ஃபில் பட்டமும் (1992) , செயற்படுத்த மொழியியலில் ( Applied Linguistics) முனைவர் பட்டமும் (1999) பெற்றார். அறிவியல் தொழில்நுட்பத்துறைக் கலைச்சொற்களின் மொழிபெயர்ப்புபற்றி ( Dynamics of Translation in Reconstructing Sc-Tec Terminilogies) எம் ஃபில் படிப்பில் ஆய்வு மேற்கொண்டார். இலக்கண உருபன்-ஒலியன் பற்றிக் ( Aspects of Inflectional Morpho-Phonology: A Computational Approach) கணினிமொழியியல் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சில ஆண்டுகள் பணியாற்றியபிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தின் AU-KBC மையத்தில் தமிழ்க் கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிற ஆய்வுக்குழுவில் ஒருவராக ஐந்து ஆண்டுகள் (2000-15) செயல்பட்டார். பின்னர் ஆந்திரா குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் கணினிமொழியியல், திராவிடமொழிகள் ஆய்வுத் துறையில் எட்டு ஆண்டுகள் (2005-13) பணியாற்றினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ( 2013 –இலிருந்து) ஹைதராபாத் நடுவண் பல்லைக்கழகத்தின் செயற்படுத்த மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய முக்கியமான ஆய்வுத்தளமான கணினிமொழியியல் துறையில் தரவுமொழியியல் ( Corpus Linguistics) , சொல்வலை ( WordNet) , இயந்திரமொழிபெயர்ப்பு ( Machine Translation - MT) ஆகிய பிரிவுகளில் முக்கியமான ஆய்வுத்திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளார். சொல்வலைத் திட்டத்திற்கான ( WordNet) உலக அளவிலான முறையான பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ் , தெலுங்கு , ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்குமான ஆய்வுத் திட்டங்களை இந்திய நடுவண் அரசின் தகவல்தொழில்நுட்பத்துறையின் நிதி உதவியுடன் பல இலட்சம் மதிப்புள்ள திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளார். கணினிமொழியியல், குறிப்பாக இயந்திர மொழிபெயர்ப்புக்கான சொற்களஞ்சியத்தை ( Lexical Resources) உருவாக்குவதில் முக்கியப் பங்கு ஆற்றிவருகிறார். தமிழ்ச்சொல்வலை ( Tamil WordNet) , தமிழுக்கான வினைச்சொல்வலை ( VerbNet for Tamil) , தெலுங்கு-தமிழ் இயந்திர மொழிபெயர்ப்பு ( Telugu – Tamil MT), இந்திய மொழிகளுக்கான தரவுத்தளம் உருவாக்கம் ( Indian Languages Corpora Initiative ) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழுக்கான பலவகை மென்பொருள் உருவாக்கங்களுக்கு இவரது பணிகள் பெரிதும் பயன்படும். தேசிய அளவிலான கணினிமொழியியல், மொழித்தொழில் நுட்பக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் பலவற்றில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் அளித்துள்ளார். 2012 –ஆம் ஆண்டு என்னுடன் இணைந்து மலேசியாவில் கோலாலாம்பூர் பல்கலைக்கழகத்தில் மலேசியா ஆசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்குமான கணினிமொழியியல் பயிலரங்கம் ஒன்றில் பயிற்சியாளராகப் பணி மேற்கொண்டார். தமிழகத்தில் கணினிமொழியியலில் முறையான பயிற்சிகளைப் பெற்ற விரல்விட்டு எண்ணக்கூடிய இளம் ஆய்வாளர்களில் ஒருவரான இவரைத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் , தமிழ்க் கணினிமொழியியல் ஆய்வு மையங்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. மின்னஞ்சல் முகவரி - arulmozi@gmail.com, arulmozi@uohyd.ac.in

நன்றி பேரா.தெய்வசுந்தரம்.

Wednesday, July 22, 2015

பேராசிரியர் வாசு ரங்கநாதன்- Dr.VASU RENGANATHAN

|1 comments
       
   

       பேராசிரியர் வாசு ரங்கநாதன் … தமிழகத்தின் உருவாக்கம். இன்று அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணி. தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் துறையிலும் கணினித்தமிழ் ஆய்விலும் உலகறிந்த ஒரு ஆய்வாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் மொழியியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் (1988) பெற்றவர். அவரது ஆய்வேட்டின் சிறப்பு அடிப்படையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கும் பணிக்கு (1989-1994) அழைக்கப்பட்டார். பின்னர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியில் (1994-96) இணைந்தார். 1997 –இலிருந்து இன்றுவரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பென் மொழி மையத்தில் ( Penn Language Centre - 50 மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன) பணியாற்றிவருகிறார். 

              அமெரிக்காவிலேயே ஆசிய மொழியியலில் மற்றொரு முதுகலைப் பட்டமும் , பின்னர் இடைக்காலத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் கணினி நிரலாக்கத்தில் பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழ்மொழியைப் பல நிலைகளில் கற்றுக் கொடுத்து வருகிறார். இன்று தமிழ்மொழியைக் கணினிவழியே கற்றுக் கொடுப்பதற்கான பலவகை மென்பொருள்களையும் கணினிமொழியியல் துறை அறிவுகொண்டு தமிழுக்கான பல மொழிக்கருவிகளையும் உருவாக்கிவருகிறார். Web Assisted Learning and Teaching of Tamil (WALTT) என்ற ஒரு மிக முக்கியமான பணியை மேற்கொண்டு வருகிறார் http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/index.html. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கணினிவழி மொழிபெயர்ப்புத் திட்டம் ஒன்றையும் மேற்கொண்டு வருகிறார். தமிழ், இந்தி இரண்டு மொழிகளுக்கும் சொல்களை உருபனாகப் பகுத்து, அவற்றின் இலக்கணக் குறிப்புகளைத் தானே தரும் சொல் பகுப்பிகளை ( Morphologicall Parser and POS Tagger) உருவாக்கியுள்ளார். ரோமன் எழுத்துகளில் எழுதப்படுகிற தமிழ் உரைகளைத் தமிழ் வரிவடிவில் – எழுத்துகளில் மாற்றித் தரும் ஒரு மென்பொருளையும் உருவாக்கியுள்ளார். Tamil A to Z instructional Tamil Software for Macintosh என்ற பெயரில் தமிழை மாணவர்கள் தாமே கற்றுக்கொள்ளhttp://ccat.sas.upenn.edu/p…/tamilweb/software/tamila2z.html ஒரு சிறந்த மென்பொருளையும் உருவாக்கியுள்ளார்.

               உலகத் தமிழ்த் தொழில் நுட்பக் கழகத்தின் ( உத்தமம் – INFITT) தலைவராகவும் பணியாற்றிவருகிறார். அமெரிக்கா, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உத்தமம் மாநாடுகளை நடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளார். இவருடைய Tamil Langauge in Context என்ற நூல் இவருடைய 25 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள ஒரு மிகச் சிறந்த நூல். இந்நூல் தமிழ்மொழியை விரைவாகவும் மிகச் சிறப்பாகவும் கற்றுக்கொள்ள உதவும். இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். தமிழை இரண்டாம் மொழியாகவும் அந்நிய மொழியாகவும் கற்றுக்கொடுப்பதிலும் தமிழ்க் கணினிமொழியியலிலும் உலக அளவில் அரும்பணிகளைப் பேராசிரியர் செய்துவருகிறார். மேலும் விவரங்களுக்கு -http://www.sas.upenn.edu/~vasur/

நன்றி பேராசிரியர் தெய்வசுந்தரம்

Monday, July 20, 2015

முனைவர் மு. இளங்கோவன்

|2 comments
முனைவர் மு. இளங்கோவன் … தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி என்று கணினித்தமிழ் உலகில் அனைவராலும் பாராட்டப்படுகிற ஒரு இளம் தமிழாய்வாளர். மாணவப் பருவத்திலேயே மாணவராற்றுப்படை என்ற இலக்கியத்தைப் படைத்தவர். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். திருப்பனந்தாள் காசி மடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் தமிழில் பி.லிட்.,(1987-90) முதுகலை (1990-92) பட்டங்களையும் பாண்டிச்சேரி நடுவண் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் (1992-93) , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் (1993-96) பெற்றார். ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ என்ற தலைப்பிலும், முனைவர் பட்டத்திற்கும் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பிலும் ஆய்வை மேற்கொண்டார். பின்னர் ஓராண்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தமிழியல் ஆவணம்’ என்னும் ஆய்வுத்திட்டத்தில் பணியாற்றினார். 1998-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் ‘தமிழிசைக் கலைக்களஞ்சியம்’ என்னும் திட்டத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் கலவை ஆதிபராசக்தி கலைக்கல்லூரியில் 1999 முதல் 2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2005-இல் நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுவை அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட தமிழாய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். ‘அயலகத் தமிழறிஞர்கள் ‘ ‘ இணையம் கற்போம்’, ‘ நாட்டுப்புறவியல்’ ‘செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்’ போன்ற பல சிறப்பான நூல்கள் இவற்றில் அடங்கும். நாட்டுப்புறவியல் ஆய்வுத்துறையில் சிறப்பாகப் பங்களித்துள்ள இவர், நாட்டுப்புறக் கலைஞராகவும் செயல்பட்டுவருகிறார். கேரள, ஈழத்து நாட்டுப்புறப் பாடல்கள்பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழாய்வு நிறுவன ‘ இளம் தமிழ் அறிஞர்’ விருதை (2006-2007 ஆண்டுக்குரியது) 2010 ஆம் ஆண்டு பெற்றார். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும்போதே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். ‘தமிழ்த் தகவல் கருவூலம்’ என்ற ஒரு இணையதளத்தையும், வேர்ட்பிரஸ்.காம் என்ற இணையதளத்தையும், மு. இளங்கோவன் என்ற பெயரிலான வலைப்பூ ஒன்றையும் உருவாக்கித் தொடர்ந்து, தமிழ், தமிழர் பற்றிய அரிய பல செய்திகளைத் தமிழுலகத்திற்கு அளித்துவருகிறார். உலக, தேசிய, தமிழக அளவிலான தமிழ் அறிஞர்கள் பலர்பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் அளித்துவருகிறார். திருச்சி வானொலிநிலையத்தின் வழியே தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்பற்றிய இவரது சிறப்பு இலக்கியப் பேருரைகள் பல ஒலிபரப்பப்பட்டுள்ளன. தனது பிறந்த ஊரில் வயல்வெளிப் பதிப்பகம் , பாரதிதாசன் உயராய்வு மையம், புலவர் ந. சுந்தரேசனார் நூலகம் ஆகியவற்றை நிறுவி நடத்திவருகிறார். சிங்கப்பூர், மலேசியா, இலண்டன் போன்ற பல அயல்நாடுகளுக்குக் கல்விப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கணினியில் வலைப்பூ உருவாக்கம்பற்றிப் பயிலரங்குகள் பலவற்றைத் தொடர்ந்து நடத்திவருகிறார். மேலதிக விவரங்களுக்கு - http://muelangovan.blogspot.in/
https://ta.wikipedia.org/s/662 http://www.muelangovan.com/https://muelangovan.wordpress.com/ . மின்னஞ்சல் முகவரி muelangovan@gmail.com
தொலைபேசி - 9442029053

நன்றி பேராசிரியர் தெய்வசுந்தரம்.

Saturday, July 18, 2015

பேரா. மு.ஆனந்தகிருஷ்ணன்

|0 comments
பேரா. மு.ஆனந்தகிருஷ்ணன்
(12-07-2015 திரு.மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் 87வது பிறந்தநாள்)
நம்மில் வாழும் மிக உயர்ந்த கல்வியாளர். பண்பாளர். அவர்களின் 87வது பிறந்ததினமான இன்று வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துவோம்.
முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன், வயது 87, தமிழகத்தின் மிகச்சிறந்த
கல்வியாளர்களில் ஒருவர். கிண்டி பொறியியற் கல்லூரி மாணவர், தேசிய நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர், கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர், அமெரிக்க இந்தியத் தூதரகத்தின் அறிவியல் ஆலோசகர், ஐ.நா. மூலம் பல நாடுகளில் கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகளில் பங்காற்றியவர், 62 வயதில் மீண்டும் தமிழகம் வந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப்
பொறுப்பேற்பு, தமிழ்நாடு உயர்கல்வித்துறையில் துணைத்தலைவர் பதவி, தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலமைச்சரின் ஆலோசகர், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் உயர்கல்விக்குழு தொடர்பான அரசுக்குழுக்களுக்கு வழிகாட்டி, மத்திய அரசின் பல்வேறு உயர்கல்விக் கொள்கைகள் வகுப்பதில் பெரும்பங்களிப்பு,
தமிழ்க்கணினியை உலக அளவில் வளர்த்தெடுக்கும் 20 ஆண்டுகால தொடர் பணிகள், கணித்தமிழ்ச் சங்கம், உத்தமம் அமைப்புகளின் புரவலர், தற்போது மூன்றாம் முறையாக தொடர்ந்து பதவி வகிக்கும் ஐ.ஐ.டி. கான்பூர் நிறுவனத்தின் தலைவர் ‘பத்மஸ்ரீ’ பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் 60 ஆண்டுகளுக்கும்
மேலான கல்விப்பணியால் இந்தியாவின் உயர்கல்வித்துறை மிகப்பெரிய அளவில் பயன்பெற்றுள்ளது.
நினைவூட்டி, குறிப்புகளை வழங்கியுள்ளவர் - சொ.ஆனந்தன்
சென்னை

பேராசிரியர் இரா. சீனிவாசன்

|0 comments

பேரா. இரா. சீனிவாசன் … எனது தொடரில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த இளம் ஆய்வாளர் . ஆனால் ஆய்வில் மிகுந்த முதிர்ச்சி உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழிலக்கியத் துறையின் உருவாக்கம். தமிழில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். எழுத்தாளர் ரகுநாதன் நடத்திவந்த ‘சாந்தி’ இதழில் வெளிவந்த சிறுகதைகள்பற்றிய ஆய்வை ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக மேற்கொண்டார். தனது முனைவர் பட்டத்திற்கு ‘ தமிழ் இலக்கண மரபுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார். நாட்டார் வழக்காற்றியல் பட்டயப் படிப்புக்காக ‘ மண்சிற்பங்கள்’ என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஆய்வேடு ஒன்றையும் அளித்துள்ளார். பின்னர் திருத்தணி அரசுக் கல்லூரியிலும் தற்போது சென்னை மாநிலக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். நாட்டார் வழக்காற்றியல், இலக்கணம், இலக்கியம், தெருக்கூத்து போன்ற பல துறைகளில் தனது பங்களிப்புகளை அளித்துவருகிறார். தமிழ் இலக்கண மரபுகள்பற்றிப் பல சிறப்பான ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் பயிற்சிபெற்றுள்ளார். ‘பன்முக நோக்கில் திரௌபதி’ என்னும் ஆய்வைப் பல்கலைக்கழக மானியக் குழுவின் பேராய்வுக்கான நிதியுதவியைப் பெற்று, முழுமையாக முடித்துள்ளார். இந்த ஆய்வுக்காக இவர் வடநாடுகளில் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களிலும் ஆந்திராவிலும் பரந்த அளவில் கள ஆய்வை மேற்கொண்டுள்ளார். பழங்குடி மக்களின் வாழ்வைப்பற்றிய ஆய்விலும் பேராசிரியருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இருளர் பழங்குடி மக்கள், ஏலகிரியில் உள்ள மலையாளப் பழங்குடி மக்கள், தேக்கடி மலையடிவாரத்தில் உள்ள பழியர் பழங்குடி மக்கள் ஆகியோரைப்பற்றிக் கள ஆய்வு அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாரதம், இராமாயணம் ஆகியவற்றில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றும் சொற்பொழிவாளர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து விழாக்கள் எடுத்துவருகிறார். அவர்களுக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கி ஊக்குவிக்கிறார். இவருடைய மிகப் பெரிய சாதனை, ‘ நல்லாப்பிள்ளை பாரதத்தைப்’ பதிப்பித்துள்ளதாகும். இந்நூல் தமிழிலேயே அளவில் மிகப் பெரியதாகும். பதினெட்டு பருவங்களைக்கொண்ட இந்நூலைச் சந்தி பிரித்தும், பொருளடைவு கொடுத்தும் இவர் பதிப்பித்துள்ளது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய அரும்பணியாகும். இரண்டு பாகங்களாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்தப் பெரும்பணிக்காக இவருக்குக் கும்மிடிப்பூண்டி தமிழ்ச்சோலை என்ற இலக்கிய அமைப்பு ‘பாரதச் சுடர்’ என்ற விருதை அளித்துள்ளது. மேலும் ‘ தமிழ் இலக்கண மரபுகள்’, ‘ ஐந்திலக்கணம்’, ‘தமிழகத்தில் பாரதம் – வரலாறும் கதையாடலும்’, ‘மணிமேகலையில் சமயமும் மெய்யியலும்’, ‘தொல்காப்பியச் செய்யுளியல் – புலநெறி இலக்கிய வழக்கு’, ‘சுப்பிரமணிய ஐயரின் பாரத நாடகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘புதிய பனுவல்’ என்ற ஒரு மிகச் சிறந்த ஆய்வு இதழைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார். சிங்கப்பூர், மலேசிய ஆகிய நாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ள கருத்தரங்குகள், பயிரலங்குகள் ஆகியவற்றில் பங்கேற்று ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். தற்போது பாரதக் கதைகள் முழுவதையும் இசைப்பாடல்களாகப் பாடியுள்ள ‘மகாபாரதம் நாடகம்’, வசன வடிவத்தில் 19- ஆம் நூற்றாண்டில் த. சண்முகக்கவிராயர் இயற்றிய ‘ பாரத வசன காவியம் ‘ ஆகிய நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். நான் பேரா. இரா. சீனிவாசனிடம் நேரடியாகத் தொடர்பு உடையவன். அவருடைய ஆய்வுத் திறனையும் அயராத உழைப்பையும் நேரில் பார்த்து வருபவன். தமிழாய்வில் நம்பிக்கை நட்சத்திரங்களாகப் பல இளம் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்குப் பேரா. இரா. சீனிவாசன் ஒரு எடுத்துக்காட்டு. அவர் இதுவரை செய்துள்ள பணிகளுக்குப் பாராட்டுதல்களும் மேலும் அவர் ஆய்வுப்பணி சிறக்க வாழ்த்துகளும்.இவருடைய மின்னஞ்சல் முகவரி - panuval@gmail.com

நன்றி முனைவர் தெய்வசுந்தரம்.

Thursday, July 16, 2015

பேராசிரியர் ப. பாண்டியராஜா

|0 comments
தமிழறிஞர்கள்பற்றி (73) …
பேராசிரியர் ப. பாண்டியராஜா ( 1943) … மிகவும் வியப்புக்குரிய ஒரு தமிழறிஞர். பட்டங்கள் பெற்றது கணிதத்துறையில் … பணியாற்றியது கணிதத்துறையிலும் கணினித்துறையிலும் …. ஆனால் தமிழறிஞர்கள் பலரும் இணைந்து செய்யவேண்டிய பணிகளை – ஒரு மிகப்பெரிய தமிழாய்வு நிறுவனம் செய்யவேண்டிய பணிகளை - தனி ஒரு ஆய்வாளராக இருந்து சாதித்துள்ளார். கணிதத்தில் இளங்கலைப் பட்டம் (1962), முதுகலைப் பட்டம் (1964), எம் ஃபில் பட்டம் ( 1972) பெற்றுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் (1980), மொழியியலில் சான்றிதழும் பெற்றுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, 2001-ஆம் ஆண்டு பட்டம் பெற்றுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வானது தொல்காப்பியத்திலிருந்து இன்றுவரை எழுத்துத்தமிழின் பண்புக்கூறுகளைப்பற்றிய ஒரு புள்ளியல்துறை நோக்கிலான ஆய்வாகும் ( A Statistical Analysis of Linguistic Features in Written Tamil – a Diachronic and Synchronic Study of linguistic features starting from Tolkappiyam and upto modern times). மொழியியல், புள்ளியல், கணினியியல் ஆகிய மூன்று துறைகளையும் இணைத்து 20-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவருடைய அரும்பெரும் சாதனையானது, பண்டைத் தமிழ் இலக்கியங்களுக்கும் தொல்காப்பிய இலக்கணத்திற்கும் இலக்கணக் குறிப்புகளோடும் ( Word class category) புள்ளியியல் விவரங்களோடும் தொடரடைவுகளைத் தருகிற மென்பொருள் உருவாக்கியுள்ளதாகும். இவ்விதத் தொடரடைவுகள் உதவிகொண்டு, தமிழ் இலக்கியங்களின் மொழிநடையைப் பல்வேறு கோணங்களில் ஆராயலாம். பல்வேறு மொழிவழிக் கருவிகளை – ஒலியனியல், உருபனியல் ஆகியவற்றை ஆராய்வதற்கான மொழிக்கருவிகளை – உருவாக்கலாம். தமிழ் லெக்சிகன் போன்ற பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். தமிழுக்கான வரலாற்று இலக்கணத்தை எழுதலாம். இவர் அளித்துள்ள தமிழ் இலக்கியப் பனுவல்களைக்கொண்டு, தமிழுக்கான தரவுத்தளங்களை உருவாக்கலாம். தமிழ் இலக்கியங்களைச் சொல்பிரித்து இவர் அளித்துள்ளது கணினித்தமிழ் ஆய்விற்கு மிகவும் பயன்படும். ஒவ்வொரு இலக்கியத்திலும் பயின்றுவந்துள்ள அடிச்சொல்கள் எவ்வளவு, இலக்கண விகுதிகள் எவ்வளவு, , விகுதி ஏற்ற சொல்கள் எவ்வளவு போன்ற விவரங்களையெல்லாம் இவர் அளித்துள்ளார். தமிழ் இலக்கியங்களின் யாப்பு கட்டமைப்பு, தொல்காப்பியத்தின் அமைப்பு ஆகியவைபற்றியும் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்மொழி ஆய்வாளர் என்ற முறையிலும் கணினித்தமிழுக்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிற ஆய்வாளர் முறையிலும் எனக்கு அவரது இப்பணிகள் மிகுந்த உதவியாகயிருக்கிறது என்று கூறுவதில் மிகவும் மகிழ்வடைகிறேன். ஒரு கணிதத்துறை , கணினித்துறை சார்ந்த ஒரு பேராசிரியர் தமிழ்மொழிக்குச் செய்துள்ள இந்த அரிய பணிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவரது இணையதளத்தின் முகவரி - http://sangamconcordance.in/
நன்றி முனைவர் தெய்வசுந்தரம், தலைவர், தமிழ்த்துறை.