இரண்டு நாட்களாக 9,10 .9.2015 - திருச்செங்கோடு அருகே அமைந்துள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியில் மேகக் கணிமை வழி குறுஞ்செயலி உருவாக்க பயிலரங்கம் சிறப்பாக நடந்தேறியது.
மகேந்திரா பொறியியல் கல்லூரி, மகேந்திரா பெண்கள் பொறியியல் கல்லூரி மற்றும் தொட்டியம் அருகேயுள்ள பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி உள்பட 8க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து 162 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முதல்நாள் நிகழ்வில் மேகக் கணிமை நுட்பம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அசூர் , கூகிள் நிறுவனத்தின் கிளவுட் என்ஜின் மற்றும் சாப்ட்லேயர், அமேசான் ஆகியவற்றில் எப்படி விர்ச்சுவல் சர்வரை நிறுவவது என்பது பற்றியும், அலைபேசிகளில் என்ன இயங்குதளங்கள் உள்ளன. அவற்றிற்கான குறுஞ்செயலிகள் உருவாக்குவதற்கான மென்பொருள்கள் பற்றியும் வகுப்புகள் எடுக்கப்பட்டன. மேலும் என்னுடன் இணைந்து மொசில்லா இயங்குதளத்திற்காக பல்வேறு பணிகளை செய்துவரும் நண்பர் கலீ்ல் என்னுடன் இணைந்து ஜாவா வழியாக எப்படி ஆன்டிராய்டு இயங்குதளத்திற்கு குறுஞ்செயலிகளை உருவாக்குவது என்று வகுப்பெடுத்தார். (கலீலை நமக்கு அறிமுகப்படுத்திய நம்முடைய உறுப்பினர்கள் திரு.தங்கமணி அருண்(மலேசியா), திரு.சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி )
அனைத்து மாணவ/மாணவிகளும் தங்களுடன் மடிக்கணினியை கொண்டு வந்ததால் அவர்களுக்கு தேவையான மென்பொருள்களை ஒரு குறுந்தட்டு வழியாக வழங்கபட்டு மென்பொருள்கள் அங்கேயே நிறுவப்பட்டு, செயல்படுத்தி காட்டப்பட்டது. அதில் சில மாணவர்கள் எப்படி இந்த மென்பொருள்களை நிறுவவது என்று தாங்களாகவே ஒரு மாதிரியினை அடுத்த நாள் காலையில் கொண்டு வந்து அவர்கள் மற்ற மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
இரண்டாவது நாள் நண்பர் கலீல், எக்லிப்ஸ் வழியாகவும், ஆன்டிராய்டு ஸ்டூடியோ வழியாகவும் குறுஞ்செயலிகளை உருவாக்குவது பற்றி சொல்லிக்கொடுத்தார்.
நிறைவாக மாணவர்களுக்கென ஒரு போட்டி
ஆன்டிராய்டு இயங்குதங்களில் என்ன மாதிரியான மென்பொருளை உருவாக்கலாம் என்ற தலைப்பில் பல்வேறு மாணவர்கள் 30க்கும் மேற்பட்ட மென்பொருள் தலைப்புகளை கூறினார்கள். நிச்சயமாக அனைத்தும் பயனுள்ளவையாக இருந்தது.
ஏன் ரேசன் கடைக்கு செல்லவேண்டும்? ஆன்லைனிலயே ஆர்டர் போட்டுவிடலாமே? அதற்கென சிறப்பு மென்பொருளை எப்படி உருவாக்கலாம்
ஆக்சிடென்ட் ஆகிவிட்டால் எப்படி நம்முடைய செயல்பாடு இல்லாமலேயே தானாக தம் வீட்டுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிப்பது அதற்கு என்ன வழிமுறைகள் தேவை
கூகிள் மேப் நுட்பத்தினை பயன்படுத்தி நமக்கு அருகில் உள்ள குருதி கொடையாளரை கண்டுபிடிப்பது எப்படி ?
என்பது வரை நிறைய தலைப்புகள் வழங்கப்பட்டன. அவைகள் முறையாக தொகுக்கப்பட்டன. மேலும் அந்த மென்பொருள்கள் எப்படியெல்லாம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு நாங்கள் சில குறிப்புகளும் வழங்கினோம்.
நிறையவாக பேசிய மாணவர்கள் தமிழில் இதுபோன்ற வகுப்புகள் எங்களுக்கு மிகவும் தேவை என்று குறிப்பிட்டனர்.
ஒரு மாணவருக்கு ஆன்டிராய்டு படித்தால் வாய்ப்பே கிடைக்காது என்று யாரோ தவறாக சொல்ல அவர் அவர் மடிக்கணினியில் உள்ள ஆன்டிராய்டு சார்ந்த மென்பொருளைகளை நீக்கிவிட்டதாகவும் கூறினார்.
ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதல் திறமையான மாணவர்களை கூட தவறாக வழி நடத்துகிறது என்றாலும் என்ன படித்தாலும் வேலை கிடைக்கும் , ஆனால் அவர்கள் ஏட்டறிவு மட்டும் பத்தாது. செயலறிவு தேவை என்று புரியவைத்தோம்.
மகேந்திரா பொறியியல் கல்லூரி தன் மாணவர்களை மட்டுமல்லாமல் தங்களை சுற்றியுள்ள எல்லா கல்லூரிகளும் கலந்துகொள்ள வைத்து சிறப்பானதொரு ஏற்பாட்டினை செய்திருந்தது. அவர்களுக்கு உத்தமத்தின் சார்பில் நன்றிகள்
தகவல் தொழில்நுட்பத்துறையின் 12 பேராசிரியர்களும் ஒவ்வொரு பணியினை எடுத்துக்கொண்டு சான்றிதழ் வழங்குவது, சிடிக்களை உருவாக்குவது , என்று குழுவாக முயற்சி செய்து எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த இரண்டு நாள் நிகழ்வினை சிறப்பானதொரு நிகழ்வாக மாற்றியுள்ளனர். அவர்களுக்கும் நமது நன்றிகள்
இந்த பயிலரங்கம் சிறப்பாக செயல்பட இணைந்து பணியாற்றிய உத்தமம் இந்தியக்கிளை உறுப்பினர்களுக்கும் என நன்றிகள்
வாழ்த்துக்கள் நண்பரே....
அருமையான பதிவு
மிக்க நன்றிங்க ஆசிரியர் கவி.செங்குட்டவன் ஐயா,
மிக்க நன்றிங்க திரு.செந்தில்குமார்.