/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, March 25, 2022

தமிழக அரசின் ஆட்சிமொழிப் பயிலரங்கில் இணையத்தமிழ் | இராமநாதபுரத்தில் கணினித்தமிழ்ப் பயிற்சி

                    நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர்  துரை மணிகண்டன்

இராமநாதபுரம்  மாவட்டத்தில்,  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, திருவள்ளுவர் ஆண்டு 2053  (மார்ச், 17,18 – 2022) ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்  இராமநாதபுரம்   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

18-03 -2022 அன்று இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் (கணித்தமிழ்கணினித்தமிழ்)  என்ற தலைப்பில்  உரை வழங்கினார்

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்முனைவர் பநாகராஜன் அவர்கள் அறிமுகவுரை  வழங்கினார்.


                            இயக்குநர் முனைவர் பநாகராஜன்

  அதனைத் தொடர்ந்து இணையத் தமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டன்  அரசு அலுவளர்கள் கோப்புகளை ஒருங்குறியில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு தட்டச்சு செய்ய ஏதாவது ஒரு தமிழ் ஒருங்குறியை அவரவர் மடிக்கணினி மற்றும் மேசைக்கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார். பிறகு எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்ற செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசினாலே தட்டச்சு செய்யும் இணையப்பக்கத்தைக் காட்டி தட்டுச்சு செய்யலாம் என்பதை விரிவாக விளக்கினார். பயிற்சியில் தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் குறித்தும் விளக்கமளித்தார்.

                        இணையத்தமிழ் ஆய்வாளர்  துரை மணிகண்டன்

பயிற்சியில் கலந்துகொண்ட இராமநாதபுரம் மாவட்ட அரசு பணியாளர்கள்

 பயிற்சியில்  அரசு அலுவலர்கள் எவ்வாறு ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி கோப்புகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்தும் ஒரு மணி நேரம் பயிற்சி வழங்கப்பட்டது.  

நிகழ்வின் இறுதியாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் அவர்கள் கலந்துகொண்டு பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி தலைமையுறை வழங்கிச் சிறப்பித்தார்.

                    மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் 

0 comments: