தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை - செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் சென்னை, மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியியல் துறை
இணைந்து நடத்திய சொற்குவை
மாணவத் தூதுவர் பயிற்சித் திட்டம் - 2022
நிகழ்வு 22 - 2 – 2020
காலை 10
மணிக்குப் பல்கலைக்கழக தமிழியல் துறை, சேதுபதி
அரங்கத்தில் இனிதே தொடங்கியது.
இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் ந.விஐயசுந்தரி, முனைவர் சி.சிதம்பரம்
தொடக்க நிகழ்வில் செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனர் முனைவர் கோ.
விஜயராகவன் அவர்கள் பயிற்சியின் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து பல்கலைக்கழக
பதிவாளர் அவர்கள் தலைமை உரை வழங்கி சிறப்பித்தார்.
முனைவர் கோ. விஜயராகவன் அவர்கள்
பயிற்சியின் தொடக்கமாக திருவாடனை அரசு கலைக்கல்லூரி தமிழியல் துறைத் தலைவர் முனைவர் மு. பழனியப்பன் அவர்கள் அகராதியியலின் நோக்கும்
போக்கும் என்ற தலைப்பில் தமிழ் மொழிக்கு அகராதியின் பங்களிப்பு குறித்துத் தெளிவாக விளக்கிக் கூறினார்.
முனைவர் பொ.சத்தியமூர்த்தி, முனைவர் சிதம்பரம், முனைவர் மு.பழனியப்பன்
அதனைத் தொடர்ந்து இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் கணினித் தமிழ் வளர்ச்சியின்
சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். உரையில் தமிழ்க் கணிமைக்கு ஏற்பட்ட
எழுத்துரு சிக்கல்களும் அது கடந்து வந்த பாதையையும் பயிற்சியின் மூலம் தெளிவாக
வழங்கினார். தொடர்ந்து இணையத்தில் சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை
திருத்தி மற்றும் இயந்திர மொழிபெயர்ப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் அதை தீர்த்து
தமிழ்மொழி நுட்பத்தில் முன்னேறிய முயற்சியையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
மதிய அமர்வில் முனைவர் நா. விஜயசுந்தரி
அவர்கள் தமிழ் இலக்கியம் குறித்து தம் கருத்துரையில் வழங்கினார்
நிறைவாக முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் மொழியில் சொற்பிறப்பு
கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பில் கலைச் சொல்லாக்கத்தை எவ்வாறு நாம் புதுமையான
முறையில் உருவாக்குவது? அப்படி உருவாக்கிய சொற்களை எவ்வாறு
நாம் பயன்படுத்துவது? என்று மாணவர்களுக்கு விளக்கம் தந்து பேசினார்.
இயக்குநர் கோ,விஐயராகவன் -முனைவர் துரை.மணிகண்டன்
நிகழ்வின் இறுதியாக முனைவர் கோ விஜயராகவன் அவர்கள் உலக அளவில் தமிழ் மொழியை புதுமாயான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்றும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மொழியைப் பயன்படுத்துவதே மிகக் குறைவாக இருக்கின்றது என்றும் அதனை நாம் சீர்செய்து மேலே செல்ல வேண்டும் அதுதான் இந்த சொற்கள் மாணவர் தூதுவர் பயிற்சித் திட்டத்தின் இலக்காக இருக்கும் என்று விளக்கினார். மேலும் நிகழ்வில் மதுரையிலிருந்து பாத்திமா கல்லூரி, செந்தமிழ்க்கல்லூரி, திண்டுக்கல் காந்திகிராமியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் பெருமைப்படுத்தினார்.
இறுதியாக இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்
மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் புலத்துறை தலைவர் முனைவர்பொ. சத்தியமூர்த்தி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்வின் ஒருங்கினைப்பாளர் முனைவர் பொ.சத்தியமூர்த்தி
0 comments:
Post a Comment