/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, March 22, 2022

தமிழில் சொற்பெருக்கம் பயன்பாட்டிற்கான தரவு மேம்பாடும் - பன்னாட்டு ப் பயிலரங்கம்

 

                        கணினித்தமிழ் - இணையத்தமிழ்- சொற்பெருக்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியற்புலம், தமிழியல் துறை இணைந்து மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழில் சொற்பெருக்கம் பயன்பாட்டிற்கான தரவு மேம்பாடும் என்ற  பொருண்மையில் மார்ச் 21,22,23 -  ஆகிய நாட்களில் நடைபெற்றது. 

                 நிகழ்வில் பேரா.L.RAMAMOORTHI, DR.DURAI.MANIKANDAN

இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் கணினித்தமிழ் சொற்பெருக்கம் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.


ஒருங்கிணைப்பாளர் தமிழியல்துறைத் தலைவர்    முனைவர் போ.சத்தியமூர்த்தி

நிகழ்வின் தொடக்கமாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிழியல்துறைத் தலைவர்    முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

 இன்றைய வளர்ந்து வரும் துறையாக இருக்கின்ற கணினித்தமிழ், இணையத்தமிழ்க் குறித்த புதியச் சொற்களை நாம் எவ்வாறு தமிழில் உருவாக்குவது? அப்படி உருவாக்குகின்ற பொழுது எழும் சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்துத் தெளிவாக விளக்கம் தரப்பட்டது.

மேலும் சொற்பெருக்கம் என்பது புதியச் சொற்களை ஒரு மொழியில் உருவாக்குவது என்றும், சொற்பெருக்கம் இரண்டு வகையில் தமிழில் உருவாக்கலாம். ஒன்று கடனாக சொற்களைத் வாங்கி பயன்படுத்துவது. இரண்டு புதிய சொற்களை மொழியில் தோற்றுவிப்பது ஆகும்.

இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்

 மேலும் தமிழில் கலைச்சொற்களைச்  சொல்லாட்சி முறையிலும் நாம் உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்.  அதேபோன்று சொற்களை உருவாக்குகின்றபோது பழஞ்சொற்களை எடுத்தாள வேண்டும். சொல்லில் விரிவு வேண்டும், கிளை மொழி, இனமொழி வழக்கை எடுத்தாள வேண்டும். மரபுசார் தொழில் சொற்களை எடுத்தால்தான் அந்தச் சொற்கள் காலம் காலமாக நிலைத்து நிற்க வேண்டும்.

 பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்குதல் வேண்டும் ஆனால் பிறகு நம் மொழியில் சொற்கள் தோன்றியவுடன் நம் மொழியில் தொகுக்கப்பட்ட சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினேன் அடுத்து கணினிக்   கலைச் சொற்களையும் எவ்வாறு  தமிழில் உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இணையம், கணினி, கட்செவி, புலனம் எழுத்துணரி ,ஊடலை, மறைகாணி,  திறன்பேசி, மீத்திறன்பேசி என்று நாம் அழைக்கின்ற போது சொற்களுக்கான புதிய ஒரு சக்தி பிறப்பதாக இருக்கின்றது என்று குறிப்பிட்டார். நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் பல புதிய தமிழ்ச் சொற்களையும் உருவாக்கினார்கள்.

                                     பயிற்சியில்  பங்கேற்பாளர்கள்

        Ocr – எழுத்துணரி , Bluetooth           ஊடலை ,Cctv – மறைகானி , Scanner    - வருடி ,Sumartphone  -            திறன்பேசி, மீத்திறன்பேசி,Broadband          -   ஆலலை, Youtube      காணொலி, வலையோளி



 

 

 

0 comments: