/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, March 9, 2022

கோப்புகளைத் இனி ஒருங்குறியில்தான் பயன்படுத்த வேண்டும் -

 

                        தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் கா.பொ.இராசேந்திரன்

               திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில்    தமிழ்  வளர்ச்சித்துறை  சார்பில் திருவள்ளுவர் ஆண்டு 2053  இரண்டு நாள்கள் (03.03.2022,  04.03.2022) ஆட்சிமொழிப் பயிலரங்கம்கருத்தரங்கம்  நடைபெற்றது .  இதில்  2020 ஆம் ஆண்டுக்கான  அரசு  அலுவலகங்களில் தமிழில்  சிறந்த   வரைவுகள்  குறிப்புகள் எழுதிய  அரசுப்  பணியாளர்களுக்கு   பரிசும்   மற்றும்  சிறந்த   மாவட்ட  நிலை  அலுவலகத்திற்கு கேடயமும்    திருச்சிராப்பள்ளி   மாவட்ட    ஆட்சித்தலைவர்  திரு.சு.சிவராசு  அவர்கள்   வழங்கினார். 

பரிசு வழங்கும் நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு.சிவராசு,      கருத்துரையாளர்கள் பேரா.மாணிக்கம்,  திரு.நீமேகநாதன் மற்றும் இணையத்தமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டன்

                                                பரிசு பெற்றவர்களுடன்  

மாவட்ட  ஆட்சியர் பேசுகையில்  தமிழ்  ஆட்சிமொழி  என்பது  நிருவாக  மொழியாகும்.  நிருவாகத்தில்  மக்களுக்குத்  தெரிந்த மொழியாக  இருப்பதற்கு  வழிவகை செய்வதாகும்.  ஆட்சிமொழிச்  செயலாக்கம் என்பது  நிருவாகத்தில்  கையொப்பம், பதிவேடுகள், பயணநிரல்,  நாட்குறிப்பு, கடிதங்கள், முத்திரைகள், பட்டியல்கள், தட்டச்சுப்பொறிகள்,  கோப்புகள், கணினிகள்  போன்றவற்றில் தமழில் எழுதுவதும், பராமரிப்பதுமாகும்.

தமிழ் மொழிக்கு என்று  இயற்கையாகவே சில  சிறப்புகள் உண்டு.  தமிழ்  மொழி  மற்ற  எல்லா மொழிகளைக் காட்டிலும்  மிக எளிமையானது.  மிகச்  சிறந்த இலக்கணத்தைக்  கொண்டு   கட்டமைக்கப்பட்ட  மொழி  தமிழ்மொழி.  இன்றைக்கு  ஆங்கிலத்தை  பெருமையாக  நினைப்பவர்கள்  இதைக்  கண்டிப்பாக  உணர  வேண்டும்.  இணையத்தில் அடியேடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்  மொழியாகும்.

  இப்பயிலரங்கில்  ஆட்சிமொழிச்சட்டம்/ வரலாறு, மொழிப்பெயர்ப்பு,   கலைச்சொல்லாக்கம்   என்ற  தலைப்பில்    மேனாள்   தமிழ்   வளர்ச்சித்   துணை   இயக்குநர்  முனைவர் . சிவசாமி  அவர்களும்,     அலுவலகக் குறிப்புகள் ,  வரைவுகள்,  செயல்முறை   ஆணைகள்  தயாரித்தல் என்ற  தலைப்பில்  அலுவலக மேலாளர் (பொது)  . சிவசுப்ரமணியம் பிள்ளை  அவர்களும்,  மொழிப்பயிற்சி என்ற   தலைப்பில்    முனைவர்..வேங்கடேசன்  இணைப் பேராசிரியர் (தமிழ்த்துறை தந்தை  பெரியார்  கலை  மற்றும்  அறிவியல் கல்லூரி)  அவர்களும் ,  ஆட்சிமொழிச்  செயலாக்கம்,  அரசாணைகள்  என்ற தலைப்பில்   மேனாள் தமிழ் வளர்ச்சி   உதவி  இயக்குநர்   திரு.நீ. மேகநாதன்  அவர்களும்  இணையத் தமிழ்  என்னும்  தலைப்பில் இணையத்தமிழ் ஆய்வாளர்  துரை.மணிகண்டன்  அவர்களும்  (தமிழ்த்துறை அரசு  கலை  மற்றும்  அறிவியல் கல்லூரி,  திருவரங்கம்)      பயிற்சி   அளித்தார்கள்.  04.03.2022   அன்று  மாலை  மாவட்ட  ஆட்சித்தலைவர்  அவர்கள்  ஆட்சிமொழி  கருத்தரங்கத்தை   தலைமையுரை  ஆற்றி  தொடங்கிவைத்தார்.   அப்போது  பேசுகையில், அலுவலகக்  கோப்புகளை அனைவரும்  தமிழில்   எழுத  வேண்டும்.   தமிழ் ஆட்சிமொழிச் சட்டசத்தின்படி கோப்புகள், கடிதப்போக்குவரத்துகள்  பிற மொழிக்  கலப்பின்றி  முழுமையும் தமிழில்  மட்டுமே எழுதவேண்டும்  என்று  கூறினார்.


                                       இணையத்தமிழ் குறித்து உரை வழங்கியது

 செய்தி மக்கள் தொடர்பு  உதவி   இயக்குநர்      திரு..செந்தில்குமார்  அவர்கள்   நன்றியுரை  ஆற்றினார்.   தமிழ்    வளர்ச்சித்  துணை இயக்குநர்  திரு.கா.பொ. இராசேந்திரன்  அவர்கள்  வரேற்புரை ஆற்றினார். .மாணிக்கம்    இணைப்   பேராசிரியர்  தேசியக்   கல்லூரி,
திரு.சே. . பாண்டியன் (உதவி நிருவாக  அலுவலர்   தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்)  இருவரும் கருத்துரை  வழங்கினர். 

#இணையத்தமிழ்ஆய்வாளர்

#மணிவானதி



 

1 comments:

  • Dr Akilan Rajarethinam says:
    March 9, 2022 at 9:16 PM

    மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துகள்