தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் திருமதி வே.ஜோதி அவர்கள்
கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக திருவள்ளுவர் ஆண்டு 2053 (மார்ச் 1,2– 2022) ஆகிய இரண்டு நாட்கள் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.1-03 -2022 முதல்
நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் (கணித்தமிழ், கணினித்தமிழ்) என்ற தலைப்பில் உரை
வழங்கினார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் திருமதி வே.ஜோதி அவர்கள்
அறிமுகவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் கணினி தமிழின் தோற்றம் குறித்தும்,
இணையத்தில் தமிழ்மொழி வளர்ச்சி குறித்தும், இணையத்தில் தமிழ்ப்
பங்களிப்பு குறித்தும், இணையத்தில் எவ்வாறு தமிழில் தட்டச்சு
செய்வது குறித்தும் பயிற்சி வழங்கினார். மேலும் தமிழில் தொழில்நுட்பம் வளர்ந்த
வரலாறும் எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தமிழ்
வலைப்பூக்கள் எவ்வாறு பயன்பட்டது என்றும் அதனை எவ்வாறு இணையத்தில் உருவாக்கம் செய்வது என்பது குறித்து விரிவான பயிற்சி
வழங்கப்பட்டது. மேலும் தமிழ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சியும்
அதில் பங்களிப்பு செய்துவரும் பங்களிப்பாளர்களையும் அறிமுகம் செய்து பேசினார்.
இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்
பயிற்சியில் அரசு அலுவலர்கள் எவ்வாறு
ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி கோப்புகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது
குறித்தும் ஒரு மணி நேரம் பயிற்சி வழங்கப்பட்டது.
திருமதி க.பவானி, புலவர் ப. ஆறுமுகம், திருமதி வே.ஜோதி துரை.மணிகண்டன்
இந்நிகழ்வில் மண்டல தமிழ்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் திருமதி க.பவானி அவர்களும் சேலம் மேனாள் தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்
புலவர் ப. ஆறுமுகம் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயிற்சிப் பெற்ற அரசு அலுவலர்கள்
நிகழ்வின் இறுதியாக நிகழ்வில் கலந்துகொண்டு பங்கேற்ற அரசு அலுவலர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
0 comments:
Post a Comment