இணையத்தமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டன்
புகழ்மிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின்
சார்பாக, திருவள்ளுவர் ஆண்டு 2053 (மார்ச்,
01, 02 – 2022) ஆகிய இரண்டு
நாட்கள் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
02-03 -2022 அன்று இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் (கணித்தமிழ், கணினித்தமிழ்) என்ற தலைப்பில் உரை
வழங்கினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், முனைவர் ப. நாகராஜன் அவர்கள் அறிமுகவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர்
துரை.மணிகண்டன் கணினி தமிழின் தோற்றம் குறித்தும், இணையத்தில் தமிழ்மொழி வளர்ச்சி குறித்தும்,
இணையத்தில் தமிழ்ப் பங்களிப்பு குறித்தும், இணையத்தில் எவ்வாறு தமிழில் தட்டச்சு செய்வது குறித்தும் பயிற்சி வழங்கினார். தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் குறித்து விரிவான பயிற்சி வழங்கினார்.
பயிற்சியில் அரசு அலுவலர்கள் எவ்வாறு ஒருங்குறி
எழுத்துருவைப் பயன்படுத்தி கோப்புகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்தும் ஒரு
மணி நேரம் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துரைத்
தலைவர் முனைவர் பொ,சத்தியமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு கலைச்சொல்லாக்கம் குறித்து
உரை வழங்கினார்.
முனைவர் பொ.சத்தியமூர்த்தி
நிகழ்வின் இறுதியாக புதுகோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிமா
ராமு அவர்கள் கலந்துகொண்டு பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு
0 comments:
Post a Comment