யாழ்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை, தமிழறித நுட்பியல் உலகாயம் இலங்கை மற்றும் தமிழ் இணைய கழகம், இந்தியா இணைந்து நடத்திய இரண்டு நாள் பன்னாட்டு Artificial Intelligence in Tamil (செயற்கை நுண்ணறிவில் தமிழ்) என்னும் பயிற்சி (12 மற்றும் 13 செப்டம்பர் 2025 யாழ்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தில் உள்ள கணினி ஆய்வக கூடத்தில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில் இலங்கையில் பல்வேறு மாகாணங்களைச் சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 100 ஆசிரியர்கள். பயிற்சி பெற்றனர். இப்பயிலரங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினித் துறை பேராசிரியர் சர்வேஸ்வரா அவர்கள் துவக்கி வைத்தார்.
இப்பயிற்சியில் இணையத்தின் பயன்பாடு, தமிழ் மென்பொருள்கள், தமிழ் வலைப்பக்கங்களை உருவாக்குதல் , செயற்கை நுண்ணறிவு மூலமாக பாடங்களை உருவாக்கி மாணவர்களுக்குக் கற்பித்தல் போன்ற தலைப்புகளில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிழலாளர், தமிழக அரசின் கணித்தமிழ் விருதாளர் முனைவர் இரா. அகிலன் அவர்களும்,
இணையதமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்களும், தமிழறித நுட்பியல் அமைப்பின் இணைச் செயலாளர் திரு இலங்கேஸ்வரன் அவர்களும் தமிழறிதம் அமைப்பின் தலைவர் திரு விக்னேஸ்வரானந்தன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட கல்வி முதுமாணி பட்டதாரி மாணவர்கள் பயிற்சிகளைப் பெற்றனர்.
அடுத்த நிகழ்வாக மாலை 4 - மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கல்வியியல் கல்லூரி இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களுக்கு தமிழ் மென்பொருள் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி பீடாதிபதி , விரிவுரையாளர் அம்பிகை பாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், தமிழறிதம் அமைப்பின் தலைவர் திரு விக்னேஸ்வரானந்தன் நோக்கவுரை வழங்கினார்,
தமிழறித நுட்பியல் அமைப்பின் இணைச் செயலாளர் திரு இலங்கேஸ்வரன் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 29 - 7 - 2025 அன்று தமிழ் மொழியின் நவீன நடைமுறைகளை மாணவர்களுக்கு அறிவூட்டும் நோக்குடன் ’இணைய தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியின் நடைமுறை முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் நிரம்பிய இணைய தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் சிறப்புரையும் மற்றும் பயிற்சியையும் மாணவர்களுக்கு வழங்கினார். இதில் மாணவர்கள் பல்வேறு விதமான வினாக்களையும் அதற்கான பதில்களையும் பெற்றுக் கொண்டனர்.
குறிப்பாக மாணவர்கள் குழுவாக சேர்ந்து அடுத்த கட்டம் நம் தமிழ் மொழிக்கு என்னென்ன? தொழில்நுட்ப வசதிகளை செய்ய வேண்டும்? செய்ய முடியும்? செயற்கை நுண்ணறிவில் நாம் செய்ய வேண்டியவை எவை? எவை? என்பதெல்லாம் விவாதமாக முன் வைத்தார்கள். உண்மையில் இந்த இளைய சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக வளர்ந்து வருவது நம்பிக்கையாக உள்ளது.
இந்த நிகழ்வைத் திறம்பட நடத்திய SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் திருமதி விஜயலட்சுமி அவர்களைப் பாராட்டுகின்றேன்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான மொழியில் நுணுக்கப் பயிற்சி சென்னை மாநகராட்சியை சார்ந்த பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஒரு மாத கால - 27 நாட்கள் (15-07-2025 - 11-08-2025) பயிற்சியாக நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் 28 - 7 - 2025 அன்று இணையத்தமிழ் என்ற தலைப்பில் வருகை தந்திருந்த ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வை திறம்பட ஒருங்கிணைப்பு செய்த உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்களை பாராட்டுகின்றேன்.
அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை, கரூர் - புனித சிலுவைக் கல்லூரி திருச்சிராப்பள்ளி இணைந்து ஒரு வார காலம் இணைய வழியில் பேராசிரியர்களுக்கு நடத்திய நிகழ்வில் 22- 7 - 2025 அன்று செயற்கை நுண்ணறிவும் தமிழ் ஆய்வுகளும் என்ற தலைப்பில் உரை வழங்கி இருக்கின்றேன். இந்நிகழ்வில் கிட்டத்தட்ட 150 மேற்பட்ட பேராசிரியர்கள் இணையவழியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
12- 6- 2025 திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்க்குச் செயற்கை நுண்ணறிவும் தமிழ் ஆய்வுகளும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வழங்கிய தருணம். இந்தப் பயிற்சியில் ஜமால் முகமது கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் நாகூர்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வைச் சிறப்பான முறையில் ஒருங்கிணைப்புச் செய்த பேராசிரியர் செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தமிழ் ஆய்வுகளும் செயற்கை நுண்ணறிவு என்ற பொருண்மைக் கருத்துக்களை செவிமடுத்த பேராசிரியர்களுக்கு நன்றி.



தமிழ் இணையம்- 2024 திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினைத் தமிழ் இணைய கழகம் - இந்தியா, தமிழறித நுட்பியல் உலகாயம் - இலங்கை, தி தமிழ் சேனல் இணைய இதழ் - கனடா மூன்று அமைப்புகளும் இணைந்து நடத்தியது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தமிழ் துறை பேராசிரியர்கள் தமிழ் இணைய கழகத்தை சார்ந்த உறுப்பினர்கள் சார்ந்த மதிப்பு திரு சரவணபவானந்தன் அவர்கள் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த திரு மயூரன் மற்றும் தமிழகத்திலிருந்து இந்தியாவிலிருந்தும் உலக அளவிலிருந்தும் கட்டுரைகளை வழங்கி சிறப்பித்த ஒவ்வொரு ஆய்வாளர்கள் மென்பொருளாளர்கள் மொழியில் துறையை சார்ந்த பேராசிரியர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
24-01-2024 அன்று தமிழ் இணையம் 2024 திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் சீரும் சிறப்புமாக தமிழ் இணைய கழகம் மற்றும் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இலங்கை, தி தமிழ் சேனல் கனடா இணைந்து நடத்திய இந்த மாநாட்டில் தமிழ் இணையக் கழகம் சார்பாக மதுரை பல்கலைக்கழகத்தின் மொழியில் துறை தலைவர் பேராசிரியர் முனைவர்க.உமாராஜ் அவர்களுக்குக் கணினித்தமிழ் ஆய்வாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பஞ்சநதம் அவர்கள் வழங்க தமிழிணைய கழகத்தின் ஆலோசனை குழு உறுப்பினராக இருக்கின்ற முனைவர் இனிய நேரு, பேரா.சிதம்பரம், முனைவர் அனந்தகுமார் அவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார்கள்
16-12- 2024 மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடைபெற்ற இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை நிகழ்வில் கலந்து கொண்டு கணினி தமிழ் மற்றும் இணையத் தமிழ் குறித்து மாணவ மாணவிகளுக்குப் பயிற்சிகளை வழங்கினேன். குறிப்பாக இந்த இளம் தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறையில் தமிழ்நாட்டிலிருந்து முதன்மையான மூன்று மாணவர்கள் மாவட்டம் தோறும் வருகை தந்திருந்தார்கள். அவர்களுக்குத்தான் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது. நல்ல கேள்விகளை முன்வைத்தார்கள் கேள்விகளுக்கான பதில்களையும் பயிற்சி வழியே மாணவ மாணவியர்களுக்கு எடுத்து விளக்கினேன்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 02-02-2024 அன்று திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் கணித்தமிழ்ப் பேரவை நிகழ்வில் கலந்துகொண்டு உரை வழங்கும் வாய்ப்பை பேராசிரியர் சிதம்பரம் அவர்கள் வழங்கியிருந்தார்.
21-11-2023 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற மொழி நுணுக்கப் பயிற்சியில் சென்னை உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்களுக்குப் பலவேறு தலைப்புகளில் உரைகளும் பயிற்சியும் வழங்கினர். அதில் ஒரு பகுதியாக நான் இணையத்தமிழ் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினேன்.