/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, December 21, 2019

இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் “

|0 comments
04/12/2019 அன்று திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் “ இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் “ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினேன். நிகழ்வில் சங்கத்தின் அமைச்சர் திரு. உதயகுமார் அவர்களும் துணை அமைச்சர் மற்றும் பார்வையாளர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சோத்கங்கா, சோதசிந்து, மின்பாடசாலை, NDL, NAD, MOOC, SWAYAM போன்ற இணையவழி கல்வித்திட்டம் பற்றி உரை வழங்கினேன்.




Saturday, June 15, 2019

“சமூக ஊடகங்களின் இன்றைய நிலை”

|0 comments


திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க அரங்கில் 5/6/2019 அன்று மாலை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் “சமூக ஊடகங்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் சிறு உரை வழங்கினேன்.
சமூக ஊடகங்கம் என்பதின் பொருளை விளக்கக்கூறி இன்று சமூக ஊடகங்களாக முகநூல், டிவிட்டர், வாட்சப் ,கூகுள் + ,ஆர்குட் ,இனஸ்டாகிராம் , யூடியூப் போன்றவைகளின் தோற்றம் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்து வழங்கினேன். சமூக ஊடகங்களினால் ஏற்படும் நன்மைகளாக கருத்துக்களைப் பகிர்வது, புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது , குழு உரையாடல் , வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொள்ளல், உலக அளவில் நடப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல் போன்ற பயனுள்ள தகவல்களை வழங்கினேன். மேலும் சமூக ஊடகங்களினால் ஏற்படும் தீமைகளாக தவறானபுகைப்படங்களை பதிவேற்றம் செய்வது தேவையில்லாத விடயங்களில் சிக்கிக்கொள்வது போன்ற செய்திகளையும் எடுத்துக்கூறினேன்.
இறுதியாக சமூக ஊடகங்களை நாம் நல்வழியில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம்
அடையலாம் என்று கூறினேன்.

நிகழ்வில் புனித சிலுவைக் கல்லூரி மாணவிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் தமிழ்ச்சங்க அமைச்சர் திரு. சிவக்கொழுந்து அவர்கள் துணை அமைச்சர் திரு. உதயகுமார் அவர்களும் உடன் இருந்தனர்.





Saturday, April 6, 2019

பின்ன சின்ன ஒருங்குறியைத் தமிழ் எழுதிகளில் (Tamil Editors) வெளிவர இ-கலப்பை, என்.எச்.எம் உள்ளிட்ட எழுதி ஆக்குநர் விரைந்து முயற்சி எடுக்க வேண்டும்.

|3 comments


அறிஞர்குழுவில் இடம்பெற்ற ஆய்வாளர்கள்.


பின்ன சின்ன ஒருங்குறிப்பணி இனிதே நிறைவேறியது. ஒருங்குறியில் ஏறவிருந்த 55 குறியீடுகளில், குறைகள் உள்ளன என்று தெரிவித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல,
தமிழக அரசு தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி, ஏறத்தாழ ஓராண்டு ஆய்வுக்குப்பின், 33 குறியீடுகளில் திருத்தம் செய்து, ஒருங்குறிச்சேர்த்தியத்திற்கு பரிந்துரைத்தது. தற்போது, ஒருங்குறிச்சேர்த்தியம், யுனிக்கோடு 12.0 வேற்றத்தில் (version) 51 வரலாற்று தமிழ்க்குறியீடுகளை சேர்த்துள்ளது. பார்க்க: http://www.unicode.org/charts/PDF/U11FC0.pdf.
2014ல், ஒருங்குறியில் 55 வரலாற்றுக்குறியீடுகளை சேர்க்கும் ஒரு முன்னீட்டை ஆய்வு செய்து, திருத்தங்கள் தேவை என்று அடியேன் எழுதிய கட்டுரை/மடலில் தொடங்கிய இப்பணி, முனைவர் இராம.கி, முனைவர் இர.வாசுதேவன் (இரவா கபிலன்), திரு.இரா.சுகுமாரன், திரு.ஆல்பர்ட்டு பெர்னாண்டோ ஆகியோருடன் இணைந்து எங்களின் கடின உழைப்பில் அரசுக்கு முன்வைக்கப்பட்டது.
பல தொல்லியல் அறிஞர்களோடு பணிசெய்த அந்த நாள்கள் இனிமையானவை.
தொல்லியல் அறிஞர்களின் ஆய்வும் அறிவும் தொழப்பட வேண்டிய ஒன்று. (தமிழ்த்துறையும் தொல்லியல் துறையும் ஒற்றுமையாக பணியாற்றினால் தமிழுக்கு எத்தனையோ சாதனைகளை செய்ய முடியும்.)
இதற்காக உழைத்த தொல்லியல் துறையறிஞர்கள்(கீழே பட்டியல் காண்க), இதற்கு முழுமையான வழிகாட்டலையும் ஆதரவையும் நல்கிய அன்றைய தமிழிணைய கல்விக்கழகத்தின் இயக்குநரும் நிதித்துறைச்செயலருமான திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப, தகவல் நுட்பத்துறையின் செயலர் திரு.டி.கே.இராமச்சந்திரன் இ.ஆ.ப, அறிஞர் குழுவின் தலைவராக இருந்து இதற்கான கூட்டங்கள் அனைத்தையும் வழிநடத்திய பேராசிரியர் பொன்னவைக்கோ, இந்த முன்னீட்டை (proposal) சீர்செய்து அனுப்ப, பொறுப்பையும் ஒருங்கிணைப்பையும் எடுத்துக்கொண்ட சென்னைப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத்தலைவர் பாலாசி ஆகிய அனைவருடனும் பணியாற்றிய காலம் மிக அறிவார்ந்தது, இனிமையானது. த.இ.க சார்பாக முனைவர் சேம்சு அவர்கள் அருந்துணையாயிருந்தார்.
திரு.இரமணசர்மா முதலில் வைத்த முன்னீடு (proposal) அண்மைக்கால அதாவது 18,19,20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சிலர் எழுதியிருந்த நூல்களில் இருந்த சான்றுகளை அடிப்படையாகக்கொண்டது. ஆங்கிலேயர்கள் கல்வெட்டுகளை, ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்து எழுதிய நூல்கள் அல்ல அவை. அதனால்தான் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தன. திருத்தங்கள் தேவைப்பட்டன. இதை அறிஞர் மன்றங்களில் எடுத்து வைத்து, அரசிடமும் எடுத்து வைத்தபின்னர், தமிழக அரசின் அறிஞர்குழு பொ.பி 8-9 ஆம் நூற்றாண்டில் இருந்து கல்வெட்டுகளையும் சுவடிகளையும் ஆய்வு செய்து திருத்தங்களை தந்தது. அதன் அடிப்படைகளையும் காரணங்களையும் சரியான முறையில் ஏற்றுக்கொண்டு திரு.இரமணசர்மா இறுதி முன்னீட்டை செய்து வரலாற்றின் தமிழ்க்குறியீடுகள் நல்ல முறையில் ஒருங்குறியில் சேர துணையாயிருந்தார்.
தமிழக அறிஞர் குழுவில் (Subject Experts Panel) கீழ்க்கண்ட அறிஞர்கள்/வல்லுநர்கள் இருந்தனர். இவர்களின் அரும்பணியில் குறியீடுகள் தெள்ளியதாகி திருத்தப்பரிந்துரை உருவாகியது. அந்த ஆவணத்தை அறிஞர் குழுவின் சார்பாக எழுதும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. பார்க்க : https://www.unicode.org/…/L20…/16062-tamil-frac-sym-fdbk.pdf
அவ்வாவணத்தின் 68ஆம் பக்கத்தில் இதில் பங்குபெற்ற அறிஞர்/வல்லுநரின் பெயர்களைக்காணலாம்.
1) முனைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ
2)
முனைவர் பி.டி.பாலாசி
3)
முனைவர் சு.இராசவேலு
4)
முனைவர் நடனகாசிநாதன்
5)
நாக.இளங்கோவன் (அடியேன்)
6)
முனைவர் ஆ.பதுமாவதி
7)
முனைவர் இராசகோபால்
8)
முனைவர் இராம.கி
9)
முனைவர் விசய வேணுகோபால்
10)
முனைவர் இர.வாசுதேவன் (இரவா கபிலன்)
11)
முனைவர் சாந்தலிங்கம்
12)
முனைவர் கலா சிரீதர்
13)
முனைவர் தமிழப்பன்
14)
முனைவர் சிவப்பிரகாசம்
15)
முனைவர் குழந்தைவேல்
16)
முனைவர் மார்க்சிய காந்தி
17)
முனைவர் சேம்சு
18)
முனைவர் வெங்கடாசலம்
19)
முனைவர் வெங்கடேசன்
முனைவர் சு.இராசவேலு, முனைவர் காந்திராசன், முனைவர் வெங்கடேசன் ஆகியோரொடு இணைந்து அடியேனும் மைசூரில் நடுவணரசின் தொல்லியல் நிறுவனத்தில் (ASI) மூன்று நாள்கள் கல்வெட்டுகளில் பின்ன சின்ன வரலாற்றுக்குறியீடுகளுக்கான சான்றுகளை திரட்டினோம். அது எனக்கு மறக்க முடியாத இனிமையான அறிவார்ந்த கல்வி நாள்கள் என்றால் மிகையல்ல.
அதொடு, சரசுவதி மகாலில், த.இ.கவிற்காக தமிழ்க்கணிமை சார்புடைய ஓர் ஆய்விற்கு அடியேனை திரு.உதயச்சந்திரன் பணித்திருந்தார். அங்கு கிடைத்த ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுநூல்கள் ஆவணம் எழுதுவதற்கு மிகவும் துணையாயிருந்தன.
முனைவர் இராம.கி முனைவர் இராசவேலு ஆகியோருடன் ஆவணம் ஆக்கும்போது படித்த கல்வெட்டாவணங்கள் பெரிய படிப்பினை. முனைவர் இராம.கியின் நூலகத்தில் உள்ள அத்தனை கல்வெட்டு நூல்களிலும் சான்றுகள் தேடியது எனக்கு அரிய துய்ப்பறிவு.
ஒருங்குறிச்சேர்த்தியம் வெளியிட்டிருக்கும் இந்தக்குறியீடுகள் தமிழ் எழுதிகளில் (Tamil Editors) வெளிவர இ-கலப்பை, என்.எச்.எம் உள்ளிட்ட எழுதி ஆக்குநர் விரைந்து முயற்சிகள் எடுக்க வேண்டும்.

நன்றி : நாக இளங்கோவன் முகநூல் பக்கம்.


அனைவருக்கும் மிக்க நன்றி


Saturday, March 23, 2019

“இணையமும் தமிழும்” புதுக்கோட்டை

|2 comments

புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் (தன்னாட்சி) 22-3-2019 அன்று நடைபெற்ற “இணையமும் தமிழும்” எனும் தலைப்பிலான மாநில அளவிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கல்லூரி அரங்கத்தில் இனிதே காலை தொடங்கியது. நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி,.சேதுராமன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்து கல்லூரி முதல்வர்  முனைவர் ஜெ.சுகந்தி தலைமையுரை வழங்கினார்கள். வாழ்த்துரையாக பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றகுழு உறுப்பினர் முனைவர் அ.சி.நாகேஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.


தேனி சுப்பிரமணி, முனைவர் நாகேஸ்வரன், முதல்வர்  ஜெ.சுகந்தி, தமிழ்த்துறைத் தலைவர் சேதுராமன், உதவிப்பேராசிரியர் பாலமுருகன்.

நிகழ்வின் தொடக்கமாக தமிழ் மின்னிதழ்கள் என்னும் தலைப்பில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி.மு.சுப்பிரமணி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். இதழ்களின் தோற்றம் பிறகு இணைய இதழ்களின் வளர்ச்சி குறித்து விரிவாக விளக்கிக் கூறினார்.


அடுத்து இன்றையத் தேவையின் கருத்தை உணர்ந்து இணையவழியில் தேர்வு எழுதுவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்த தகவல்களுடன் இணையவழித் தேர்வுகள் என்ற தலைப்பில் முனைவர் துரை,மணிகண்டன் சிறப்புரை வழங்கினார்.  தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு படிக்கும் மாணவர்கள் இணையவழித் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு அடிப்படையான கணினி அறிவுத் தேவை என்பதை பயிற்சிமூலம் வழங்கினார். இந்திய தொடர்வண்டி பணிகளில் நாம் வெற்றிபெற என்ன என்ன வழிகளைப் பின்பற்றினால் வெற்றியடையலாம் என்ற கருத்தையும் விளக்கிக் கூறினார்.


முனைவார் சேதுராமன், முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் மாதவன், பேராசிரியர் பாலமுருகன்.

அதனைத்தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் நோக்கில் தமிழ் இணையதளங்கள் என்ற தலைப்பில் முனைவர் சி.சிதம்பரம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இதில் தமிழ் மின் வளமைக் குறித்த செய்திகளை தொகுத்துச் செறிவாக வழங்கினார்.
முனைவர் துரை.மணிகண்டன், சி.சிதம்பரம், தேனி மு.சுப்பிரமணியன்.

இந்த நிகழ்வில் திரளான பிற கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை இன்றையத் தமிழ்மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பொறுப்பு பல தமிழ்த்துறைக்கு உள்ளது. எனவே இதுபோன்ற பல இணையத்தமிழ் குறித்த பயிர்ச்சிகளை  பிற கல்லூரிகளில்  நடத்த அன்புடன் வேண்டுகின்றேன். 

தலைவர் சேதுராமன், உதவிப்பேராசிரியர் செல்வராஜ், துரை, சிதம்பரம், தேனி மு.சுப்பிரமணி.

https://www.facebook.com/madhavan.subramanian.98/videos/2311750539097020/

Friday, February 22, 2019

.உலகத் தாய்மொழிநாள் - தேசியப் பயிலரங்கம்

|0 comments



தேனித் தமிழ்ச் சங்கம், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் இணைந்து ‘இணையத்தில் தமிழ்’ எனும் தலைப்பிலான தேசியப் பயிலரங்கத்தைத் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தியது. உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு நடத்தப் பெற்ற இப்பயிலரங்க நிகழ்விற்குக் கல்லூரித் தலைவர் செ.ல. ஜவஹர்லால் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் ஜா.ஜ. கலைவாணி அவர்களும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி. பொன்முடி அவர்களும் முன்னிலை வகித்தனர். தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா, துணைச் செயலாளர் அ. முகமது பாட்சா, பெ. பிரேம்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உள்தர உத்தரவாத மையத்தின் இயக்குநர் முனைவர் க. பாலகிருஷ்ணன் அவர்கள் பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். திருச்சி, இணையத் தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள், ‘தமிழ் எழுத்துருக்கள்’ எனும் தலைப்பிலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள், ‘தமிழ் வலைப்பூக்கள்’ எனும் தலைப்பிலும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு. சுப்பிரமணி அவர்கள், ‘தமிழ் மின்னிதழ்கள்’ எனும் தலைப்பிலும், காந்திகிராமப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி. சிதம்பரம் அவர்கள், ‘தமிழ் மின்னூல்கள்’ எனும் தலைப்பிலும் பயிற்சியளித்தனர்.
பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். முன்னதாகக் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் நாகேந்திரன் வரவேற்றார். முடிவில் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் மு. ரேணுகாதேவி நன்றியுரையாற்றினார்.

Wednesday, January 23, 2019

முத்துப்பேட்டை கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்....

|0 comments

இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்திய ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கு வெகு சிறப்பாக 22/01/2019 செவ்வாய்க்கிழமை காலை இனிதே நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தைக்  கல்லூரி முதல்வர் திருமதி.கு.ஹேமலதா அவர்கள்  தலைமையேற்று சிறப்பாகத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார். 

நிகழ்வின் தொடக்கமாக  நான் இணையம் கடந்து வந்த வரலாற்றையும் அதில் தமிழ்மொழியின் செல்வாக்கையும் தமிழ் எழுத்துரு உருவாக்கி வளர்ந்த போக்கையும் இன்றைய ஒருங்குறியின் பயன்பாட்டையும் எடுத்து விளக்கினேன்.  பிறகு தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்றும் தமிழ்  எழுத்துருவை எவ்வாறு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து காட்டினேன்.
அடுத்துத் தமிழில் வலைப்பதிவை  எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று  செயல்முறையில்  மாணவர்களுக்கு விளக்கம் அளித்தேன். பல மாணவர்கள் வலைப்பதிவைத் தமிழில் உருவாக்கிப்  பயன்படுத்தினார்கள்.
 அடுத்து முகநூலை எவ்வாறு கையாள்வது என்றும், சமூக ஊடகங்களின் இன்றைய நிலையையும் விளக்கினேன். இணையத்தில் எவ்வாறு  நாம் வருமானம் பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தையும் மாணவர்களிடம் எடுத்துக்கூறினேன்.







கல்லூரி முதல்வர் கு, ஹேமலதா அவர்கள் சிறப்பு செய்தபோது.


நிகழ்வில் முனைவர் துரை.மணிகண்டன் சிறப்புரை.


சிறப்புரை முனைவர் துரை


நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிகள்











நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிக்குப் பரிசு வழங்கியபோது.


இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனியசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

Monday, December 24, 2018

பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள்.

|0 comments
தமிழ்ப்பல்கலைகழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையும்  கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியும் செந்தமிழ் அறக்கட்டளை திருவில்லிப்புத்தூர் இணைந்த நடத்தும் ஒருநாள் கருத்தரங்கம் பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் 29/12/2018 அன்று கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. .
29/12/2018 இந்த ஆண்டின் இறுதி நிகழ்வாக நான் கலந்துகொண்டு பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியில் சிறப்புரை வழங்கினேன் நிகழ்வைத் திறம்பட நடத்திய கல்லூரிக்கும், செந்தமிழ் அறக்கட்டளை நிறுவனத்தாருக்கும் , தமிழ்பபல்கலைக்கழக அறிவியில் துறைக்கும் நன்றிகள்.



நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு  கல்வியியல்  கல்லூரி மாணவர்கள்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி , முனைவர் ஆ.ராஜேஸ்வரி, முனைவர் க.சிவநேசன், ஆசி.முத்துசாமி, கவிஞர் சுரா, முனைவர் ப.ராஜேஸ், முனைவர் ச.கவிதா.





Sunday, December 16, 2018

USAGE OF INTERNET TAMIL

|0 comments
இணையத்தில் தமிழ் பயன்பாடுகள்
வருகிற 18-12-2018, செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) மற்றும் தமிழ் அநிதம் (அமெரிக்கா) இணைந்து நடத்தவிருக்கும் ‘இணையத் தமிழ்ப் பயன்பாடுகள்’.



நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாள திராவ்விடமணி தமிழ்த்துறைத் தலைவர் திடவிடராணி , பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழ் அநிதம் நிறுவனத்தில் தலைவர் சுகந்திநாடார். முனைவர் துரை,  மாணவன் பிரதாப்.






                                                           நிகழ்வில் தேனி எம்.சுபிரமணி.




                                                 நிகழ்வில் திருமதி சுகந்திநாடார் உரை.

Tuesday, November 20, 2018

Tamil Language and Computer Use.- இணையத்தமிழ் பயிலரங்கம்

|0 comments

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் 14-11-2018  காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பு சிறப்புடன் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். அடுத்து துறைத் தலைவர் ஹெப்சி அவர்கள் நோக்கவுரை வழங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் நயினார் அவர்கள்  ஆய்வு நோக்கியதாக இருந்தது. முகநூலில் தட்டச்சு செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள் அதை நாம் தவிற்க வேண்டிய வழிமுறைகளையும் நயமாக எடுத்து விளக்கினார்கள்.  பயிற்சியின் தொடக்கமாக செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் நிரலாளராகப் பணியாற்றி வரும் முனைவர் அகிலன் அவர்கள் தமிழ் மொழிக்கான  இயற்கை மொழி ஆய்வைப் பற்றி மிக விரிவாக எடுத்து விளக்கினார். மதியம் அமர்வில் பேராசிரியர் காமாட்சி  மொழித் தொழில்நுட்பவழி கணினித்தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

 இறுதியாக முனைவர் துரை.மணிகண்டன் வலைப்பக்கம் உருவாக்குவது எப்படி என்ற பொருண்மயில் மாணவர்களுக்குப் பயிற்சிமூலம் செய்துகாட்டி பல மாணவர்களுக்கு வலைப்பூவை  உருவாக்கிக் கொடுத்து பயிற்சி வழங்கினார். 

நிகழ்வில் பேராசிரியர் குமர செல்வா அவர்கள் தனது மாணவர்களுடன் பயிற்சிக்கு வந்திருந்தார்.

பயிற்சியில் கேரளாவில் பயிலும் தமிழ் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
  




இணையத்தமிழ் பயிற்சியில் பங்குபெற்ற முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வியல் மாணவிகள்.

தமிழ்த்துறைத் தலைவர் ஹெப்சி , முனைவர் துரை.மணிகண்டன்,  பேராசிரியர் குமரசெல்வா,  பேராசிரியர் நயினார், பேராசிரியர் ஜெயகிருஷ்ணன், முனைவர் அகிலன். 



கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவிலுள்ள Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பில் எனது மாணவர்கள் இருவருடன் கலந்துகொண்டேன். நீண்டகாலத்திற்குப்பின் சந்தித்த பேரா.காமாட்சி, பேராசிரிய நண்பர்கள் துரைமணிகண்டன், நயினார், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். தமிழ்த்துறைத்தலைவர் பேரா. ஹெப்சி நிகழ்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.

                                                                   பேராசிரியர் நண்பர்களுடன்








இயற்கைமொழி ஆய்வு குற்த்து உரை வழ்ங்கிய முனைவர் அகிலன்.



     வலைப்பூக்கள் உருவாக்கம் குறித்த உரை வழங்கிய முனைவர் துரை.மணிகண்டன்.



இணையத்தமிழ்ப் பயிற்சியில் சான்றிதழ் பெறும் மாணவி..



                                        பயிற்சியில் சான்றிதழ் பெறும் மாணவர்.




சான்றிதழ் பெறும் மாணவன்.

Sunday, November 11, 2018

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019

|1 comments



தகை சால் தமிழ் அறிஞர் பெருமக்களே,
வணக்கம்.
உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 3 முதல் 7-ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணையோடு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் (CTS) இணைந்து நடைத்த உள்ளது.
உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மையான நோக்கம்:
“பொதுவாகத் திராவிடம் பற்றியும் சிறப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகள் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்வதற்கான ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிற துறைகளில் ஆய்வுகள் செய்து வரும் அறிஞர் பெருமக்களோடும், உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்கு கொள்ளலும் ஆகும்.”
இம்மன்றத்தின் தலையாய நோக்கமே 10-ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது: “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம், தமிழ்க் கணிமை ஆகியன குறித்து புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.” இவை பற்றிய உண்மைகளை உலகம் அறிதல் வேண்டும் என்பது இம் மாநாட்டின் தலையாயக் குறிக்கோள். ஆய்வுக் கட்டுரையின் தலைப்புகளும் அதனின் கட்டுரைச் சுருக்கத்தையும் (Abstract), முழுக்கட்டுரையையும் (Full Research paper), அனுப்ப வேண்டிய முறைகளும், இம்மடலுடனும், மாநாடு பற்றிய கணினி அறிவிப்பிலும் கண்டுகொள்ள வேண்டுகிறோம். அறிஞர்கள் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்து முடிக்க விழைகின்றோம்.
நீங்கள் இந்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யவும், உங்களை மாநாட்டில் காணவும் அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்,
புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து
பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம்
ஒருங்கிணைப்பாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
இணைத்தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

ஆய்வுகள் அறிவுரைக்குழு

முனைவர் டான் மாரிமுத்து
தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் மு.பொன்னவைக்கோ
உதவித் தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் உலகநாயகி பழனி
செயலாளர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் ஆஷர்
எடின்பர்க் பல்கலைக் கழகம், இங்கிலாந்து
முனைவர் அலக்சாண்டர் டுபின்ஸ்கி
மாஸ்கோ பல்கலைக் கழகம், உருசியா
முனைவர் ஜார்ஜ் ஹார்ட்
பெர்க்லி பல்கலைக் கழகம், அமெரிக்கா
முனைவர் ஜி. ஜான் சாமுவேல்,
தலைவர், ஆசியவியல் கழகம், சென்னை, இந்தியா
முனைவர் சாச்சா எப்ளிங்
சிகாகோ பல்கலைக்கழகம், அமெரிக்கா
முனைவர் உல்ரிக் நிக்லஸ்
கலோன் பல்கலைக் கழகம், ஜெர்மனி
முனைவர் வாசு அரங்கநாதன்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.

தொடர்பிற்கு - https://www.icsts10.org/
நன்றி - சிகாகோ இணையம்.

Thursday, November 1, 2018

அன்னை (மதர்) தெரசா பல்கலைக்கழகம்- கொடைக்கானல்

|0 comments
 அன்னை (மதர்) தெரசா பல்கலைக்கழகம் கொடைக்கானலில் தமிழாய்வுத்துறையில் தமிழ் இணையப் பயிற்சி பணிமனைக்குச் 17/10/2018  புதன் கிழமைச் சென்றிருந்தேன். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் கமலி அவர்கள் இன்முகத்தோடு வரவேற்றார்.

                                     பேராசிரியர் கமலி அவர்கள்

ஐயா தாங்கள் இந்த பயிற்சி பணிமனைக்கு வந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஐயா என்றார்கள். ஐயா தாங்கள் 2012- ல் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து இணையத்தமிழ் பயிற்சியை மாணவிகளுக்கு வழங்கினீர்கள். அதனுடைய தொடர்ச்சியாக நாங்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆறுமாதம் மற்றும் ஒரு ஆண்டு பட்டயப் பயிற்சி வகுப்பாக தமிழ் இணையத்தில் தட்டச்சு மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்பைத் தொடங்கினோம். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நீங்கள்தான் ஐயா என்றார்கள். நான் வியந்தே போனேன். நான் நினைத்த இலக்கை வெகுவிரைவாக செய்துகாட்டிய தமிழ்த்துறைத் தலைவர் பேரா.கமலி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டேன்.

         நிகழ்வில் கல்ந்துகொண்ட முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்.

மேலும் தமிழாய்வுத்துறையில் பதினைந்து கணிப்பொறி உள்ளது. அவையாவும் இணைய இணைப்பைப் பெற்றுள்ளது என்பது தனிச் சிறப்பான ஒன்றாகும்.
இங்கு கல்வி பயிலும் முதுகலை மாணவிகள், ஆய்வியல் நிறைஞர் மாணவிகள், முனைவர்ப்பட்ட ஆய்வாளர்கள் என 50 மேற்பட்ட மாணவிகள் தமிழில் தமிழ் 99 விசைப்பலகைப் பயன்படுத்தி விரைவாக தட்டச்சு செய்தது என்னை வியக்க வைத்தது.  அதைபோன்று தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தி தனது திட்டக்கட்டுரையை உருவாக்கி இருந்த விதம் தமிழை அடுத்தக் கட்டத்திற்கு இணையத்தின் வழி ஆய்வு செய்ய இருந்த மாணவிகளை நான் வெகுவேகப் பாராட்டினேன்.
திட்டக்கட்டுரையை அனைவரும் சொந்தமாக தமிழ்99 விசைப்பலகைக் கொண்டு அவரவர் தட்டச்சு செய்து உருவாக்கியது என்பது இன்னும் என்னை திகைக்கவைத்தது. இதற்குப் பேராசிரியர் கமலிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மாணவிகள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்.
மதியம் தமிழ் இணையம் குறித்தும் அதில் எவ்வாறு தமிழ்ப்படித்தவர்கள் வேலைவாய்ப்பை பெறுவது என்பது குறித்தும் பேசினேன். மாணவிகள் ஆர்வமுடன் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.