இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்திய ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கு வெகு சிறப்பாக 22/01/2019 செவ்வாய்க்கிழமை காலை இனிதே நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தைக் கல்லூரி முதல்வர் திருமதி.கு.ஹேமலதா அவர்கள் தலைமையேற்று சிறப்பாகத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் தொடக்கமாக நான் இணையம் கடந்து வந்த வரலாற்றையும் அதில் தமிழ்மொழியின் செல்வாக்கையும் தமிழ் எழுத்துரு உருவாக்கி வளர்ந்த போக்கையும் இன்றைய ஒருங்குறியின் பயன்பாட்டையும் எடுத்து விளக்கினேன். பிறகு தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்றும் தமிழ் எழுத்துருவை எவ்வாறு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து காட்டினேன்.
அடுத்துத் தமிழில் வலைப்பதிவை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று செயல்முறையில் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தேன். பல மாணவர்கள் வலைப்பதிவைத் தமிழில் உருவாக்கிப் பயன்படுத்தினார்கள்.
அடுத்து முகநூலை எவ்வாறு கையாள்வது என்றும், சமூக ஊடகங்களின் இன்றைய நிலையையும் விளக்கினேன். இணையத்தில் எவ்வாறு நாம் வருமானம் பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தையும் மாணவர்களிடம் எடுத்துக்கூறினேன்.
கல்லூரி முதல்வர் கு, ஹேமலதா அவர்கள் சிறப்பு செய்தபோது.
நிகழ்வில் முனைவர் துரை.மணிகண்டன் சிறப்புரை.
சிறப்புரை முனைவர் துரை
நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிகள்
நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிக்குப் பரிசு வழங்கியபோது.
இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனியசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
0 comments:
Post a Comment