/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, March 15, 2018

GOOGLE FOR தமிழ்- நிகழ்வு

|0 comments

13-03-2018 செவ்வாய்க் கிழமை சென்னையில் ஹயாட்டா நடசத்திர அறையில் நடைபெற்ற கூகுள் தமிழ் விளமபரங்கள் GOOGLE TAMIL ADS  நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 200 மேற்பட்ட தமிழ்க் கணினி ஆர்வளர்கள் கலந்துகொண்டு கூகுள் தமிழ் பற்றிய செய்தியைத் தெரிந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி காலை10.30 இனிதே தொடங்கியது. முதலில் உரை வழங்கிய கூகுள் குழுமத்தில் பணிபுரியும் அன்பர் கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டை எடுத்து விளக்கிப் பேசினார். NMT பணியில் பதினோரு மொழிகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் தமிழொழியும் ஒன்று என்றார். அடுத்து கூகுள் வரைபடத்தில் இந்திய மொழிகளில் ஏழு செயல்பாட்டில் உள்ளன அவற்றில் ஒன்று தமிழ் என்றார். அடுத்து கூகுள் விளப்பரம் தொடர்பாக இந்தியாவில் மூன்று மொழிகள் இடம்பெற்றுள்ளன அவற்றில் ஒன்று தமிழ்மொழியென்று விளக்கம் தந்தார். எனவே தாங்கள் தமிழ்மொழியில் இருக்கும் வலைப்பக்கங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் இனி தமிழில் விளபரங்களைப் பெற்று வருவாய் ஈட்டலாம் என்று குறிப்பிட்டார்.
 கூகுள் தமிழ் நிகழ்வில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட கூகுள் ஊழியர்கள்.

அடுத்து KIILOW என்றவர் உரை வழங்கினார். கில்லாவ் தனது உரையில் உலக மொழிகளில் 800 மேல் உள்ளன. அவற்றில் ஒருசில நூறு மொழிகள் வளர்ந்த வளர்கின்ற மொழிகளாக உள்ளன. அதில் தமிழ்மொழியின் வளர்ச்சி மிகவும் அதிகாமாக உள்ளன. எனவே இனி வரும் காலங்களில் திறன்பேசியின் பயன்பாடுகள் அதிகரிக்க உள்ளன. எனவே இனி அனைத்துப் பயன்பாட்டாளர்களும் திறன்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதற்குத் தகுந்தார்போல இனி வருங்காலங்களில் சிறுகதைகள் அனைத்தும் அலைபேசியில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். அதற்கு AMP என்ற வழிமுறையைப் பின்பற்றி நாமும் முன்னேற வேண்டும் என்றார். மேலும் அதிகமான குறுஞ்செயலிகளை (application) உருவாக்கி வெளியிடவேண்டும் என்றார். இந்தியில் இதுபோன்று செயல்பட்ட கோபால் மிஸ்ரா 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த வலைப்பதிவு நபராகத் தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்ற தகவலையும் தெரிவித்தார்.


google tamil india head Ajay Luther

கூகுள் தமிழ் விளமபரப் பிரிவு இந்தியத் தலைவர் அஜெய் லுத்தா அவர்கள் சிறப்பானத் தமிழில் கூகுள் விளம்பரத்தின் நன்மைகளை எடுத்து விளக்கினார். இவர் தமிழ் வலைப்பதிவு மற்றும் தமிழ் வலைப்பக்கங்களில் எவ்வாறு கூகுள் வழங்கும் விளம்பரங்களை நம் இணையப்பக்கத்தில் இணைப்பது என்று விளக்கம் தந்தார். அஜெய் கூறும்போது கூகுளின் விளம்பரம் இரண்டு வகையாகச் செயல்படுகிறது. அவற்றில் 1. Native ads 2. Auto ads என்பவையாகும் அதில் in- fued native, in artical native, metched content மிகமுக்கியமானவை ஆகும் என்று உரைத்தார். அடுத்து மிக விரைவில் அறிமுகம் செய்த  auto ads யை உடனடியாக சென்று தங்கள் வலைப்பக்கத்தில் இணைத்துவிடுங்கள் என்று கூறினார். 

அடுத்து சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த கூகுள் நிறுவன ஊழியர் வீனாராய் என்பர்  AMP மூலம் திறன்பேசியில் ஸ்க்ரோலிங் முறை தவிற்கப்பட்டு ஐக்கான் முறையில் செயல்படும் புதிய முறையை எடுத்து விளக்கினார்.

அடுத்து சுருதி அட்லகா என்ற கூகுள் நிறுவன பெண் ஊழியரும் கூகுள் விளம்பரத்தினால் நாம் அடையும் நன்மைகளை எடுத்துக் கூறினார்.



சையித் மாலிக்

சையத் மாலிக் என்பவர் கூகுள் தேடுபொறியில் தேடும்போது முதலில் வந்து காட்டும் பக்கங்கள் எந்த அடிப்பதையில் தோன்றுகின்றன என்பதை விளக்கினார். முதலில் நாம் உருவாக்கும் இணையப்பக்கத்தின் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்க வேண்டும். சின்ன தலைப்பாக இருந்தால் நலம். எ,கா தமிழில் ஐந்து எழுத்திலிருந்து எட்டு எழுத்திற்குள் இருக்க வேண்டும் என்றார்.  அடுத்து நாம் எழுதும் கட்டுரை எத்தனை வார்த்தைகளைக் கொண்டும் படைக்கலாம். அதைபோல keyword  எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் என்றார். இதுபோன்று 200 மாடல்கள் உள்ளன என்றார்.
                              ரிச்சா அவர்கள்                            
அடுத்து கூகுளில் பணியாற்றும் ரிச்சா என்ற பெண் கூகுள் பாலிசை பற்றி எடுத்துக்கூறினார். கூகுள் நிறுவனத்திற்கென்று ஒருசில சட்ட வரமுறைகள் உள்ளன. அதன்படித்தான் விளபரங்கள் வழங்கப்பட்டுத் தங்கள் இணையப் பக்கங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில் விதிமீறல் இருந்தால் உடனடியாக கூகுள் விளம்பரங்கள் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிடும் என்றார். 

1. கூகுளின் இந்த நிகழ்வு தமிழ் இணையதளப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.
2. இத்தனை ஆண்டுகள் நாம் எந்தவித பண வருமானம் இல்லாமல் இணையத்தில் தமிழில் எழுதிகொண்டிருந்தோம். 2018 லிருந்து நாம் நம்மொழியின் வாயிலாக பணம் ஈட்டத் தொடங்குவோம்.

3. எது எப்படியோ கூகுளில் தமிழ் விளம்பரங்களைக் கொண்டுவந்த இலங்கையைச் சேர்ந்த திரு விக்டர் அவர்களுக்கும் கூகுள் இயக்குநர் திரு சுந்தர்பிச்சை அவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் நன்றி சொல்லவேண்டும்.

4. இந்த கூகுள் தமிழ் விளமபரம் நமக்கு காலதாமதமாகக் கிடைத்தாலும் இனியும் நாம் ஏமாறமல் விழிப்புடன் இதில் நாம் இறங்கி பணிபுரியும் காலம் வந்துவிட்டது. அனைவரும் விழிப்புடன் இருந்து கூகுள் தரும் விளம்பரத்தினைப் பெற்று நாமும் வாழ்வோம் நம் தமிழ்மொழியும் வாழ்வேண்டும் கூகுள் நிறுவனமும் வாழவேண்டும்.

 நிகழ்ச்சியில் கூகுள் தமிழ் விளம்பரப்பிரிவு தலைவர்  Ajay Luther & Dr.Durai.Manikandan


நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதிப்பிற்குரிய மணி மணிவண்ணன் மற்றும் திரு. இளங்கோவன்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராளர்கள்.






Thursday, March 8, 2018

தமிழ்க் கணனி இணையப்பயன்பாடுகள்

|0 comments
 28/02/2018 திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீ்பர் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் தமிழ்த்துறை இணைந்த நடத்திய ஒரு நாள் தமிழ் இணையப்பயன்பாடுகள் பயிலரங்கம் நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்.


 28/02/2018 திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீ்பர் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சத்தியசீலன் அவர்களுக்கு நான் எழுதிய தமிழ்க் கணனி இணையப்பயன்பாடுகள் நூலை வழங்கினேன் அருகில் தலைவர் விஜயராணி நண்பர் செல்வமுரளி உள்ளனர்






கணினித்தமிழ் ஆய்வில் அடுத்தக்கட்ட முன்னேற்றம் குறித்து விவாதித்தபோது-

மாணவிகளுக்கு விளக்கம் தரும்நிகழ்வு.

Sunday, March 4, 2018

தமிழ்மொழி இனவளர்ச்சிக்கு சமூக ஊடகங்களின் பங்களிப்பு

|0 comments


06/03/2018 செவ்வாய் அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் "தமிழ்மொழி இன வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு" என்ற கருத்தரங்கில் தமிழ்மொழி இனவளர்ச்சிக்கு சமூக ஊடகங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கும் காட்சி

 அகில இந்திய வானொலியின் உதவி இயக்குநர் திருமதி ஜோதிமணி இளங்கோ அவர்கள் வானொலியின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியபோது





 நிகழ்ச்சியில் கவிஞர் ஆண்டாள் பிரிதர்ஷினியுடன்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டியுடன்



ஆண்டாள் பிரியதர்ஷினி உரை.

Friday, February 23, 2018

வெள்ளச்சாமி நாடார் கல்லூரி, மதுரை

|0 comments


வெள்ளச்சாமி நாடார்  கல்லூரியில்  (மதுரை) ஒருநாள்   “தமிழ்க் கணினி” பன்னாட்டுப் பயிலரங்கம்  27-02-2018  செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளனர்.









Tuesday, February 13, 2018

கணினித் தமிழ் பயன்பாடுகள் - பயிலரங்கம்-சென்னை

|0 comments



வணக்கம்.
சென்னை, மேடவாக்கத்தில் செயல்படும் எங்கள் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை அறிவியல் கல்லூரி கணித்தமிழ்ப் பேரவையின் சார்பில் 19-2-2018, திங்கள் கிழமை அன்று கணினித் தமிழ்ப் பயன்பாடுகள் - பயிலரங்கு (Workshop on Applications in Tamil Computing) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கணிப்பொறித் துறை மாணவர்களுக்கும், தமிழ் மொழித் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பிற துறை மாணவர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகுந்த பயனளிக்கத்தக்க வகையில் இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிலரங்குக் கட்டணம் மற்றும் விவரங்கள் அடங்கிய அறிவிப்பு மடல் - அழைப்புமடல் மற்றும் பதிவுப் படிவம் (Registration Form) இணைக்கப்பட்டுள்ளது. பதிவுப் படிவத்தை நகல் எடுத்தோ அல்லது தங்கள் கல்லூரியின் மடல் தாளில் (Letter Head) பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பெயர்களைப் பட்டியலிட்டோ அனுப்பி வைக்கலாம்.
முதலில் பதிவு செய்பவருக்கே வாய்ப்பு (Fisrt Come First Serve) என்கிற அடிப்படையில் மாணவர்களின் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும். மாணவர் பதிவு ஏற்றுக்கொள்ளப் படுவதில் நிருவாகத்தின் முடிவே இறுதியானது.
தங்கள் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றுப் பயனடைந்திட அனுப்பிவைத்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பங்கேற்பாளர் அனைவருக்கும் WorkShop Kit, தேநீர், பகல் உணவு, மற்றும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

Sunday, October 29, 2017

உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா

|4 comments
உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா சார்பில் கனடாவின் டோரண்டோ நகரில் ‘இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலின் இன்றைய நிலை’ எனும் தலைப்பிலான ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா) தொடங்கி 29-10-2017 வரை மூன்று நாட்கள் நடைபெறவிருக்கிறது.


இதில் 50க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், இணையவழி கற்றல் கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்டுரை வழங்கவிருந்தனர். அவர்களுக்குக் கனடா நாடு விசா தராமல் காலம் தாழ்த்தியதால், அங்கு செல்லவிருந்த தமிழ் அறிஞர்கள் / ஆர்வலர்கள் கனடா செல்ல இயலாமல் போனது. எனவே, அதே நாளில் அதே வேளையில் இந்தியாவிலும் இந்தக் கருத்தரங்கத்தினை நடத்துவது எனத் தீர்மானித்த இம்மாநாட்டுக் குழுவினர், திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா - அதிகாலை 4 மணி) இணையவழிக் காணொலிக் காட்சிகள் வழியாக இரண்டு கருத்தரங்கங்களும் இணைக்கப்பட்டு நடத்தப் பெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக உத்தமத்தின் துணைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன்  (Durai.Manikandan) நிகழ்வை வரவேற்றுப் பேசினார்.

இணையவழிக் கருத்தரங்கில் மாநாட்டுக் கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது. அதில் பேரா.க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன், பேரா.பத்மநாபபிள்ளை, கருத்தரங்க ஆய்வுக்குழுத் தலைவர் பேரா.க.காமாட்சி, பேராசிரியர் விஜயராணி, பேரா.சி.சிதம்பரம், பேரா.பிரகதி.
வாழ்த்துரை வழங்கிய பேரா.விஜயராணி
நன்றியுரை வழங்கிய பேரா.சிதம்பரம்.
இணையவழ்க் கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராளர்கள் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்.
கருத்தரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜேந்திரன் எழுதிய ஊடகங்களில் தமிழ் என்ற நூலை முத்துக்கமலம் இணைய இதழ ஆசிரியர் தேனி சுப்பிரமணி பெற்றுக்கொண்டபோது...
மாநாட்டில் வழங்கப்பட்ட பேக் மற்றும் நினைவுப்பரிசு.(முனைவர் துரை.மணிகண்டன், பேரா.காமாட்சி, தகவல் தொடர்பு வினோத்,)
மாநாட்டில் இணையத்தோழி மின்னிதழின் ஆசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் தேனி சுப்பிரமணி.

Friday, September 29, 2017

இணையத்தில் தமிழ்ப் பயன்பாடுகள்- Tamil Usages In Internet

|1 comments
சிவன்காசி S.F.R. மகளிர் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 27/09/2017 அன்று நடைபெற்ற ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கில் “ இணையத்தில் தமிழ் இணையப் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினேன்.
நிகழ்வின் தொடக்கமாக தலைமையுரை துறைத்தலைவர் முனைவர் பா.பொன்னி வழங்கினார். அடுத்து வரவேற்புரையாக தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி பத்மபிரியா வழங்கினார்.
அடுத்து நான் 10 45 லிருந்து 1 மணி வரை இணைய அறிமுகத்தையும், தமிழ்மொழியில் இணையம் பயன்படுத்தப்படும் போக்கும் குறித்து விரிவாக விளக்கினேன். ( இணையம் அறிமுகம், இணையமாநாடுகளின் பங்களிப்பு, எழுத்துரு தோற்றம் இன்றைய நிலை, தமிழ் இணைய இதழ்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தோற்றம் வளர்ச்சி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் மென்பொருள்கள், அதிலும் குறிப்பாக எழுத்துப்பிழைத் திருத்திகள், முகநூலின் பயன்பாடுகள் அதனை எவ்வாறு எவற்றைப் பயன்படுத்த வேண்டும், போன்ற ....)


(பேராசிரியர் பத்மபிரியா, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.பொன்னி இடையில் Dr.durai.manikandan பேராசிரியர் ச.தனலெட்சுமி மற்றும் வளர்மதி)

மதியம் 2 மணியிலிருந்து 3.30 வரை கணினி ஆய்வகக் கூடத்தில் பயிற்சியை வழங்கினேன். மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
மதியம் 2 மணியிலிருந்து 3.30 வரை கணினி ஆய்வகக் கூடத்தில் பயிற்சியை வழங்கினேன். மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

                                           (ஆய்வகக் கூடத்தில் பயிற்சியில்)
இறுதியாக செல்வி ச.பாலமுருகேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.
குறிப்பு:
1. நான் இதுவரை 70 மேற்பட்ட கல்லூரிகளுக்குப் பயிற்சி வழங்க சென்றுள்ளேன். ஆனால் இக்கல்லூரியில்தான் 60 % மாணவிகளுக்குத் தட்டச்சு தெரிந்து இருந்தது. இதற்குக் காரணம் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் ஊக்கம்.
2. அங்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கணினியை இயக்கி தட்டச்சை மிக இலகுவாக பாவித்ததைக் கண்டு மகிழ்ச்சியுற்றேன். எனக்கு வியப்பாகவும் இருந்தது.
3.இதற்கெல்லாம் காரணம் துறைத் தலைவர் முனைவர் பா. பொன்னி அவர்கள்தான்.
வாழ்க வளமுடன்.....
பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற்ற கல்லூரி மாணவிகள்.

கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் இணையத்தமிழ்

|0 comments
கும்பகோனம் அரசினர் மகளிர் கல்லூரியில் ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பயிற்றுனராக நான் கலந்துகொண்டு விளக்கம் அளித்தேன். 






கல்லூரி முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்- பேராசிரியர்கள் உடன்




பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள் ஒரு பகுதியினர்.

Monday, August 28, 2017

கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்

|0 comments


29, 30 /08/2017 அன்று பெண்கள் அரசினர் கலைக்கல்லூரி (கும்பகோணம்) தமிழ்த்துறையில் "கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்"  என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.



29-08-2017 அன்று கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”கணிப்பொறியின் பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பா.ஹேமலதா அவர்களின் தலைமையில் சிறபாகத் தமிழ்த்துறை ஏற்பாடு செய்து இருந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ப.செந்தில்குமாரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சத்தியா அவர்களும் இணைந்து செயல் பட்டனர்.
நிகழ்வில் இணையத்தமிழ் குறித்த செய்திகளை விரிவாக எடுத்து விளக்கினேன்.
அடுத்து தமிழ்த்தட்டச்சு பயிற்சி, வலைப்பூ உருவாக்கம், செயற்கை அறிவின் இன்றைய நிலை, காணொளி காட்சியைப் பயன்படுத்தும் திறன், முகநூலின் நன்மைகள், பல்வேறு இலக்கியப் பதிவுகள் போன்றவற்றையும் விளக்கினேன்.
தமிழின் பயன்பாட்டு மென்பொருள்களாக பேரா.தெய்வசுந்தரம் அவர்களின் மெந்தமிழ் சொல்லாளர், பேரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மென்பொருள்களும் பயன்படுத்திக் காட்டினேன்.
இறுதியாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.அகிலா நன்றியுரை வழங்கினார்..

Sunday, July 23, 2017

“ பயன்பாட்டில் நோக்கில் இணையத்தமிழ்”

|2 comments
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் சூலை 26, 2017 அன்று மாலை 6.30 மணிக்கு “ பயன்பாட்டில் நோக்கில் இணையத்தமிழ்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளேன். அன்பர்கள், கணினித் தமிழ் ஆர்வலர்கள்  கலந்துகொண்டு பயன்பெற அன்போடு அழைக்கின்றேன்.

நன்றி: புகைப்படம் --https://alchetron.com/Tiruchirappalli-10406-W

Wednesday, July 5, 2017

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் - நூல்/ UGC தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்படுகிறது

|1 comments






பொருளடக்கம்
அலகு – I
கணிப்பொறி அறிமுகம் ( பக். 1-27)
1.1  கணிப்பொறியின் வரலாறு - History of Computer
1.2  கணிப்பொறியின் வளர்ச்சி – Growth of Computer
1.3  கணிப்பொறியின் குணங்கள் – Characteristics of  Computer
1.4  கணிப்பொறியின் தலைமுறைகள் – Generation of  Computer
முதல் தலைமுறை (Generation of Computer) – இரண்டாம் தலைமுறை (Second Generation) – மூன்றாம் தலைமுறை (Third Generation) – நான்காம் தலைமுறை (Fourth Gerneration) – ஐந்தாம் தலைமுறை (Fifth Generation) – மேகக் கணிமை  (Cloud Computing)
1.5  கணிப்பொறிகளின் அமைப்பு வகைகள் – Types of Computer
இலக்க வகைக் கணிப்பொறி (Digital Computer) – ஒப்புமை வகைக் கணிப்பொறி (Analog Computer) – கலப்பின வகைக் கணிப்பொறி (Hybrid Computer) – மீக்கணிப்பொறி (Super Computer) முதல் நிலைக் கணிப்பொறி (Mainframe Computer) – சிறுகணிபொறி (Mini Computer)
1.6  நுண் கணிப்பொறி – Micro computer
பணி நிலையம் – தன்னுடைமை கணினி (Personal Computer) – மடிக்கணினி (Laptop) – கையடக்க கணினி (Personal Digital Computer)
1.7  கணிப்பொறியின் அமைப்புகள் – Structure of Computer
உள்ளீட்டுப் பகுதி (Input unit) – வெளியீட்டுப் பகுதி (Ouput Unit) – சேமிப்புப் பகுதி (Storage Unit) – கட்டுப்பாட்டுப் பகுதி (Control Unit) – எண்கணித தர்க்கப் பகுதி (Arithmetic Logic Unit) – மத்திய செயல்பாட்டுப் பகுதி – (Central Processing Unit)
1.8  கணிப்பொறி – வன்பொருள், மென்பொருள்
மென்பொருள் (Software) – வன்பொருள் (Hardware)
1.9. உள்ளீட்டுக் கருவிகள் (Input Devices)
விசைப்பலகை (Keyboard) – ஒளிப்பேணா (Light Pen) – சுட்டி Mouse – பந்துருளை (Tracker Ball) – தொடு சுட்டி (Touch Pad) – ஒலி உள்ளீடு கருவி – வருடி (Scanner)
1.10. வெளியீட்டுக் கருவிகள் – (Output Devices)
திரை (Monitor) – அச்சுப்பொறி (Printer) – அச்சுப்பொறி வகைகள் (Types of Printers) – ஒலிபெருக்கி (Speaker) – ஒளிபெருக்கி (Projector)
1.11. சேமிப்புக் கருவிகள் – (Memory Devices)
   நேரடி அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM) – படிப்பதற்கான நினைவகம் (Read only Memory - ROM) – இரண்டாம் நிலை சேமிப்புக் கருவி (Secondary Memory  Devise) – நெகிழ் வட்டு (Floppy Disk Drive) – குறுவட்டு  (Compact Disk Drive)
1.12. இயங்குதளம் – (Operating System - OS)
      கணினி சாளரம் (Windows) – சன்னல் 1.0 (Windows) – விண்டோஸ் – 1.0 – விண்டோஸ் – 2.0 – விண்டோஸ் 3.0 – விண்டோஸ் என்.டி 3.1 – விண்டோஸ் 95 – விண்டோஸ் வொர்க் ஸ்டேசன் 4.0 – விண்டோஸ் 98 – விண்டோஸ் எக்ஸ்.பி –விண்டோஸ் 2003 – விண்டோஸ் சர்வர் 2008- விண்டோஸ் 8
அலகு – 2
தமிழில் அச்சுப்பதிப்பும் அஞ்சல் பரிமாற்றமும் (பக். 28-42)
2.1 மைக்கேரா சாப்\டு வேர்டு – (MS - Word)
      தொடக்கம் (Home) – தலைப்புப் பட்டை (Title Bar) – பட்டியல் பட்டை (Menu Bar) – கருவிப் பட்டை (Tool Bar) – கோடிட்ட உதவும் சாதனம் (Ruler) – இடையில் சேர்க்கப்படும் புள்ளி (Instruction Point) – இடைப்பட்ட வேலையைச் செய்யும் கண்ணாடி (Task Pane) – சுருள் பட்டை (Scroll Bar) – (Status Bar)
2.2 மைக்ரோ சாப்\டு எக்ஸல் – (MS-Excel)
      அட்டவணைச் செயலி (Spread Sheet) – பரப்புத்தாள் – மெனு பெட்டி – வாய்ப்பாடு பெட்டி – தரவு பெட்டி.
2.3 பவர்பாய்ண்ட் – (Power Point)
      பெருந்திரையை உருவாக்குதல் – தலைப்புப்பட்டை  (Title Bar) – பட்டியல் பட்டை (Menu Bar) – முகப்பு (Home) – உட்புகுத்துப்பெட்டி (Insert) – வடிவமைப்பு (Design) – அசைவூட்டப் படம் (Animation) – காட்சி (Show) – கருவிப்பட்டை (Tool Bar)  - (Status Bar)
2.4. மைக்ரோசாப்\ட் அக்சஸ் – (MS - Access)
      வினா எழுப்புதல் (Queries) – வடிவம் (Forms) – அறிக்கை (Reports) – பக்கங்கள் (Pages) – சரிப்படுத்துதல் (Modulation)
அலகு – 3
கணினியில் தமிழும் தமிழ்  மென்பொருள்களும் (பக்.43-81)
3.1. அறிமுகம் (Introduction)
      கணினியில் தமிழ் – விசைப்பலகை சிக்கல் – பொதுதரம் இல்லா எழுத்துருக்கள் – வலைக் கணினியில் தமிழில் மின்னஞ்சல் – தமிழில்  மின்னஞ்சல் இடர்பாடுகள் – தமிழில் மின்னஞசல் தீர்வுகள் - தனித் தீர்வை நோக்கி முரசு.
3.2 தமிழ் எழுத்துருக்கள் - (Tamil Fonts)
மயிலை (Mayilai) தமிழ் லேசர் – (Tamil Laser) – இஸ்கி (ISCII) – தாரகை – இ கலப்பை – அஸ்க்கி (ASCI) – தகுதரம் (TSCII) – ஒருங்குறி (Unicode)  அகபே தமிழ் எழுதி – அழகி (Azhagi) – என்.எச்.எம் (New Horizon Media) – செல்லினம் (Sellinam)
3.3 தமிழ்  சொற்ப்பிழைத்திருத்தி (Spell Checker)
      சர்மா சொற்பிழைச் சுட்டி (Sarma Checker) – மென்தமிழ்ச் சொல்லாளர் (Mentamizh) – பொன் மொழி (Ponmozhi) – பொன்சொல் (Ponsoll) – வாணி எழுத்து  பிழைத்திருத்தி (Vaani)
3.4 சந்திப்பிழைத் திருத்தி (Sandhi Checker)
      நாவி சந்திப்பிடைத் திருத்தி (Naavi) – மென் தமிழ்  சந்திப் பிழைத்திருத்தி (Mentamizh) – பொன்மொழி (Ponmozhi)
3.5 தமிழ் மின் அகராதி  மென்பொருள் (Tamil Dictionary)
      குறள் தமிழ்ச் செயலி  (Kural)
3.6. சொற்செலிகள்
      எழுத்துணரி (Text to Speech) – திருக்குரல் எழுத்துப் பேச்சு மாற்றி (Thirukural  - TTS) – எழுத்துப் பேச்சு மாற்றி (Listen tome) – தமிழ்  பிரெய்லி  எழுத்துப் பேச்சு மாற்றி (Tamil Braily)
3.7. பேச்சுணரி (Speech Recognizer)
3.8. ஒலி எழுத்துணரி (Optical Character Recognition - OCR)
      பொன்விழி (Ponvizhi)
3.9. கையெழுத்துணரி (Handwritten Recognition)
       பொன்மடல் (Ponmadal) – கூகுள் உள்ளீட்டு கருவி  (Google Input tool)
3.10. யாப்பு உணரி (Tamil Prosody Analyzer)
      அவலோகிதம்  (Avaologitham)
3.11. ஒலிபெயர்ப்பு உணரி (Transliteration/Transcription/Romaniation)
      அனுநாதம் (Annunatham)
3.12. எழுத்துமுறை  மாற்றி (Language  Script Converter)
      அஷரமுகா எழுத்துமுறை மாற்றி (Aksharamukha) – கூகுள் தமிழ்  ஒலி  மாற்றி – தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பு  மென்பொருள்கள்
3.13. கணினித் தமிழ்  வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருள் (Freeware)
      கட்டற்ற  மென்பொருள் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள்கட்டற்ற மென்பொருளாளர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மென்பொருள்கள் – எழுத்துணரி – சொல் திருத்தி – இலக்கண  பிழைத் திருத்தி – அகராதி – உரை ஒலி மாற்றி – நிரலாக்கம் – உதவி நிரல்கள் – அரட்டை – இலக்கியத் தேடல்- அவலோகிதம் – மின்னூலாக்கம் – தமிழாக்கம் – ஆவணமாக்கல் – அறிவுப் பகிர்வு – கணினித் தமிழ் இணைய இதழ்
அலகு – 4
தமிழ் இணையம்  (பக். 82-145)
4.1 இணையம் அறிமுகம் (Introduction of Internet)
      வலைப்பின்னல் (Network) இணையத்தின் பயன்பாடுகள் (Use of Internet) – நிறுவன உள் இணைம் (Local Area network- LAN) – இணையத்தின் வரலாறு (History of Internet) – அமெரிக்காவும் இணையமும்
4.2 கணினி இணைத்தில் தமிழ்  
      இணையத்தில் தமிழ் முன்னோடி – இயங்கு எழுத்துரு – தமிழ். நெட் – தகுதர நியமம் – ஒருங்குறி நியமும் – அரசின் ஏற்பு -கீமான்- நிலைபெற்ற ஒருங்குறி –
4.3. தமிழ் இணைய மாநாடுகள் (Tamil Internet Conferences)
      முதல்மாநாடு - இரண்டுமாநாடு – மூன்றுமாநாடு – நான்குமாநாடு – ஐந்தாம்மாநாடு – ஆறாம் மாநாடு – ஏழாம் மாநாடு – எட்டாம் மாநாடு – ஒன்பதாம் மாநாடு – பத்தாம் மாநாடு – பதினொன்றாம் மாநாடு –பன்னிரண்டாம் மாநாடு – பதிமூன்றாம் மாநாடு – பதிநான்காம் மாநாடு -பதினைந்தாவது மாநாடு.
4.4. கணிப்பொறித் திருவிழாக்கள் (Festivals of Computer)
4.5. தமிழ்க் கணினி மொழியியல் (Tamil computational Linguistics)
4.6. தமிழ்க் கணிப்பொறி வல்லுநர்கள்  (Genius of Tamil Computing)
      நா. கோவிந்தசாமி – ஆரம்பகாலம்- எழுத்துத் துறையில் ஆற்றிய பங்கு –கணினித்துறையில் ஆற்றிய பங்கு – உமர்தம்பி – தேனி இயங்க உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் –உமர்தம்பியின் ஆக்கங்கள் – யாழன் சண்முகலிங்கம்-முரசொலிமாறன்-சுஜாதா – முனைவர் கு. குல்யாணசுந்தரம் – மலேசியாவில் இணையவழித் தமிழ் – முத்துநெடுமாறன் – காசி ஆறுமுகம் – தகடூர் கோபி – தகடூர் தமிழ் மாற்றி – உமர்பன்மொழிமாற்றி – அதியமான் எழுத்துரு மாற்றி – அதியமான் \பயர்பாக்ஸ் நீட்சி-தமிழ் விசை \பயர்பாக்ஸ் நீட்சி –சமூகத் திட்டங்களில்  பங்களிப்பு – முகுந்தராஜ் சுப்பிரமணியன் – தமிழா  கணிமைத் திட்டம் ஏ – கலப்பை – தமிழ் விசை பயர்பாக்ஸ் – தமிழா சொல்திருத்தி – சமூக திட்டங்களில் பங்களிப்பு – மா. ஆண்டோபீட்டர்-எழுதிய நூலகள் –பொறுப்புகள் –முனைவர் மு. பொன்னவைக்கோ- முனைவர் ந. தெய்வசுந்தரம் - திரு. செல்வமுரளி- முனைவர் இராதாசெல்லப்பன் – இ.மயூரநாதன்  - சிவாப்பிள்ளை – பேரா. வாசுரெங்கநாதன்.
4.7. இணையத் தமிழ்  பங்களிப்பாளர்கள் (Internet Tamil users)
      முனைவர் துரை. மணிகண்டன் – முனைவர் மு. இளங்கோவன் – முனைவா தி.நெடுஞ்செழியன் – முனைவர் மு. பழநியப்பன் – தேனி மு. சுப்பரமணியன்.
4.8. கணினித்தமிழ் விருதுகள் (Awards of Tamil Computing)
      முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – நோக்கம் – தமிழ்க் கணிமைக்கான சுந்தரராமசாமி விருது – விருது பெற்றவரின் விவரம் – S.R.M. பல்கலைக்கழக தமிழ்க் கணிமை விருது
அலகு – 5
தமிழ் இணையப் பயன்பாடுகள் மற்றும் கற்றல் கற்பித்தல் (பக். 146-252)
5.1. மின் அஞ்சல் என்றால் என்ன? (Electronic Mail – E Mail)
      மின்னஞ்சல் பயன்பாடுகள் (Email users) – முதல் மின்னஞ்சல் EMail Uses முகவரி (First Email) – மின்னஞ்சல் உருவாக்கம் (Creation of Email)
5.2. தமிழ்  வலைப்பூக்கள் (Tamil  Blog)
      வலைப்பூ – வலைப்பதிவு – தமிழ் வலைப்பூ – வலைப்பூ  சேவை  - முதல் தமிழ்  வலைப்பூ – தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி – வலைப்பூக்களின் வகைப்பாடுகளும் வளர்ச்சியும் – தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் – வலைப்பதிவர் திருவிழா.
5.3. தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் (Creation of  Blogs )
5.4. வலைப்பதிவுகளின் திரட்டிகள் (Collection of Tamil Blogs)
      தமிழ்மணம் – திரட்டி – தமிழ்வெளி – சங்கமம் – தமிழ்க்கணிமை – வேர்ட்பிரசு – டெக்னோரட்டி – மாற்று – தமிழீழத்திரட்டி –– இலங்கை வலைப்பதிவர் – தமிழ்வௌனி – மசேிய தமிழ் வலைப்பூ – பூவாசம் – முத்துக்கமலம்.
5.5. தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்தல் (Tamil Font Download)
     NHM writer எழுத்துரு பதிவிறக்கம்
5.6. தமிழ் எழுத்துரு மாற்றிகள் (TamilFont Converter)
      எழுத்துரு பிரச்சனை – எழுத்துரு மாற்றிகள் – பொங்குதமிழ் எழுத்துரு மாற்றி (Suratha) – அதியமான் எழுத்துரு மாற்றி (Adhiyaman) – தமிழ் எழுது்துரு மாற்றி (Kandupidi) – சிலம்பம் (Silampum) – இஸ்லாம் கல்வி எழுத்துரு மாற்றி (Islamkalvi) என். எச்.எம். எழுத்துரு மாற்றி (N.H.M.) – எழுதி மாற்றி (Tamilexicon) – கொழும்பு பல்கலைக்கழகம் – தமிழ் 24 செய்தி (Tamil 24 News) – பயன்பாடுகள்
5.7 தமிழ் மின்னியல் நூலகம்  (Tamil Digital Library)
      மின்னியல் நூலகம் – உலக மின்னியல் நூலகம் – தமிழ் மின்னியல்  நூலகம் – ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – மதுரைத் திட்டம் (Project Madurai) – தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual Academy) சிறப்புக் கூறுகள் – தேவாரம் (Thevaram) – காந்தளகம்  (Tamilnool) – அறக்கட்டளை  (Tamilheritage) – நூலகம். நெட் (Noolaham) – இந்திய  மின்னியல் நூலகம் (Digital Ligbrary of India) – சென்னை நூலகம் (Chennai Library) – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (Ulakththamizh) – மின்னில் நூலகப் பயன்பாடு.
5.8. மின்நூல்கள் (E-Book)
      மின்நூல் – மின்நூல் வரலாறு – தமிழ் மின்நூலகள் – பிளாஷ் மென்பொருள் – கையாவண நூல் (PDF Book) – மீயுரை நூல்  (HTML Book) – புரட்டு நூல் (Flip Book) – மென்னூல் (Equp Book) – கிண்ணூல் (Mobi Book)
5.9. மின் நூல் உருவாக்கம்  (Creation of E- Book)
5.10.  மின் மொழி பெயர்ப்புகள் (Machine Translation)
      கூகுள் மொழிபெயர்ப்பு – தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (National Translation Mission) – தோற்றம் – விரிவான  திட்டம் – இந்திய  மொழிகளுக்கான  இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்பு – மொழிகள் – தமிழ்  இந்தி – இந்தி தமிழ் – தமிழ் தெலுங்கு மற்றும் தெலுங்கு தமிழ் – தனி மின் மொழிபெயர்ப்பு – மின் மொழிபெயர்ப்பின் நன்மைகள்.
5.11. தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)
      விக்கிப்பீடியா பொருள் விளக்கம் – தோற்றம் – தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றம் – தமிழ் – பண்பாடு – வரலாறு – அறிவியல் – கணிதம் – தொழில்நுட்பம் – புவியல்.
5.12. சமூக ஊடகங்கள் (Social Media)
      ட்விட்டர் (Twitter) – முகநூல் (Facebook) – வாழ்க்கை வரலாறு – முகநூல் தொடக்கம் – இடப்பெயர்தல் – நியூஸ்பீடு (Newspeed) – முகநூல் இயங்குதளம் – பயன்பாட்டாளர்கள் – வாட்சாப் வரலாறு (History Whatsapp) – வாட்சாப் பிறப்பு – பயன்பாடுகள் – இன்ஸ்டாகிராம்  (Instagram) – ஸ்னாப்சட் (Snapset)
5.13. ஸ்கைப் (Skype) – வைபர்  (Viber)
5.14. தமிழ் குறுஞ்செயலி (Application)
      குறுஞ்செயலி விளக்கம் – தோற்றம் – பயன்பாடுகள் – குறுஞ்செயலிகள் கிடைக்கும் இடம் – செயலிகளை உருவாக்க உதவும் தளங்கள்  - குறுஞ்செலிகளின் வகைப்பாடுகள்  - குறுஞ்செயலிகளின் தாக்கம் – ஒருசில தமிழ் குறுஞ்செயலிகள் – தொழில் நுட்ப குறுஞ்செலிகள் – உத்தமம்.
5.15. கற்றல் கற்பித்தலில் தொழில் நுட்பத்தின் பங்கு
      நோக்கம் – மின்வழிக் கற்றலின் பயன்பாடுகள் – தொழல்நுட்ப வழிகள் எவை? – PPT  வழி கற்றல் – தமிழ் இணையக் கல்விக்கழகம் – தெற்காசிய மொழிவள மையம் – தமிழ்க் கழகம் – அநிதம் – மூடுல்ஸ் – தமிழகம். வலை – அலைபேசி மற்றும் குறுஞ்செயலிகள் மூலம் கற்றல் – வலைப்பதிவுகளின் மூலம்  கற்றல் – சமூக ஊடுகங்களின் வழிக் கற்றல் – ஓம்தமிழ் – மென்பொருள்கள் மூலம் கற்றல் – கற்றலில் மென்பொருள் தேவை  - கற்றல் பாதையை உருவாக்கும் மென்பொருள் (Transhuttle) – மனவரைபடம்  (Mindmeister) – பல்லூடகம் (Blenspace) – வினாடி வினா (Bravo) – கற்றல் கற்பித்தலிழல் சிக்கல்களும் தீர்வுகளும்

பின்னிணைப்புகள்
இணைப்பு 1 – கலைச்சொற்கள்                                       253
இணைப்பு 2 – முக்கியமான தமிழ் இணைதள முகவரிகள்              256
இணைப்பு 3 – காணொளி காட்சிகளின் முகவரி                        267
இணைப்பு 4 – வலைப்பூக்களின் முகவரி                              268

இணைப்பு 5 – குறுக்கு விசைகள்                                     272


தொடர்பிற்கு 
முனைவர் துரை.மணிகண்டன் - 9486265886

நூலின் விலை ரூ.325
மாணவர்களுக்கு -ரூ.250
குறிப்பு; நான்காம் பதிப்பு -  2023.
தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள், மத்திய அரசு நடத்தும் UGC தேர்வுகளில் அதிகமான வினாக்கள் இந்த நூலிலிருந்து கேட்கப்படுகிறது.