தமிழ் இணையக்
கழகம் சார்பா 04-10 - 2020 மாலை 6 மணிக்கு இணையத்தமிழ் வளர்முக கலந்துரையாடல்
நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில்
இணையத் தமிழின் வளர்ச்சிக்குத் தமிழ் இணையக்
கழகம் முன்னெடுக்க வேண்டிய முன்மொழிவுகளை இங்கே கலந்துகொண்ட பேராளர்கள் முன்
வைத்திருக்கின்றார்கள்.
அவர்களில் #சிவாப்பிள்ளை, #இனியநேரு, #நீச்சல்காரன், #சிதம்பரம், #உமாராஜ்,
#அகிலன்,#வாசுதேவன் லட்சுமணன், # சுகு பாலசுப்பிரமணியம், #தகவலுழவன்,# எட்வர்டு பாக்கியராஜ்,
# மு.மயூரன், #சரவணபவானந்தன், #சத்தியராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையை வழங்கிய
காணொலி
முதலில் திரு
சிவா பிள்ளை அவர்கள் இணையத்தில் அவரவர்களுடைய தாய் மொழிகளில்
கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாகத் தமிழ் மொழியில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று
முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து
மலேசியாவைச் சார்ந்த ஆசிரியர் வாசுதேவன் லட்சுமணன் தொழில்நுட்ப கருவிகளைத் தமிழ் மொழியில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக திறன்பேசியை நாம் தமிழில் பயன்படுத்த வேண்டும். மேலும் தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும், ஊடக பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அடுத்து
நீச்சல்காரன் என்ற ராஜாராமன் அவர்கள் தமிழ் மொழியில் இணையத்தில் கலைக்களஞ்சியம்
ஒன்று உருவாக்கப்பட வேண்டும்; பல்வேறு இலக்கிய
நூல்களையும் கருத்துக்களையும் ஆவணப்படுத்துதல் வேண்டும்;இசை, நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பல்வேறு அறிஞர்கள்வழலகிய உரைகளை ஒளி கோப்புகளாக நாம் பாதுகாக்க வேண்டும்; தமிழ் மென்பொருள்களைப் புதிது புதிதாக உருவாக்க வேண்டும்; ஆங்கில மொழியில் இருக்கின்ற வடிவமைப்பை போன்று
பல்வேறு வகையான தமிழ் எழுத்துருக்கள் ஒருங்குறியில் உருவாக்க வேண்டும்; தட்டச்சுக் கருவிகளும் அதிகமாக தமிழ் மொழியில்
உருவாக்க வேண்டும்; கட்டற்ற முறையில் தமிழ்
மென்பொருள்களை மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் உருவாக்க வேண்டும்; ஒவ்வொரு நாட்டிற்கும் அந்தந்த மொழிகளுக்கு
ஏற்ப தேடு தளங்கள் உருவாக்கி வைத்திருப்பது போன்றுதமிழ் மொழிக்கான தேடு தளங்கள் பல உருவாக்க வேண்டும்; கலைச்சொல்லாக்கம் பல உருவாக்க வேண்டும்என்றார். மேலும்
NLPவழியாக தமிழ்ப் பிழை திருத்திகள்பல உருவாக்க வேண்டும்; அதேபோன்று இலக்கண கருவிகள் பலர் உருவாக்க
வேண்டும்; ஒரு உரையை சுருக்கி கொடுக்கும் ( word summarizer, content
summarizer) கருவிகளை நாம் தமிழ்மொழியில்
உருவாக்கி வெளியிட
வேண்டும் வேண்டுமென்றார்.
இலங்கையைச்
சார்ந்த பொறியாளர்திரு.மு.மயூரன் தொழில்நுட்பங்களில் நாம் கட்டற்ற முறையில்
தமிழ் மென்பொருள்களை உருவாக்கி வெளியிட வேண்டும். புதிய
தொழில்நுட்பங்களைச் சார்ந்த
மென்பொருள்கள் பல உருவாக வேண்டும். தமிழ் சூழல்
சார்ந்த பல துறைகளைச் சேர்ந்த
மென்பொருள்கள் உருவாக்கவேண்டும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஒருங்கே
தொழில்நுட்பத்தைத் தமிழ் மொழியில்
பயன்படுத்த வேண்டும் என்றார்.
கனடாவில்
வசிக்கும் பாலசுப்பிரமணியம் அவர்கள் மாணவர்களுக்கு அமேசான் ஊடாக சின்ன, சின்ன கவிதைகள்; சிறு, சிறு சிறு
கதைகள்; தமிழ் நூல்களை வெளியிட அல்லது வெளியிடுவது எவ்வாறு என்பது குறித்து
நாம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இதன் மூலம் இனிவரும் சந்ததியர்களுக்குத் தேவையானப் பணத்தை சம்பாதித்துக் கொள்வதற்குவசதியை ஏற்படுத்திக்
கொடுக்கவேண்டும் என்றார்.
முனைவர் இனியநேரு தமிழ் இணையதள பயன்பாட்டை நாம் அதிகரிக்கவேண்டும். பல்வேறு குழுக்களாக நாம் பிரிந்து பல
பயிற்சிகளை ஆங்காங்கே தமிழகத்தில் உலக நாடுகளில்நாம்
நடத்த வேண்டும். அதேபோன்று மின்நூல்களை
வெளியிட வேண்டும். புதியதமிழ்ச் செயலிகளை
உருவாக்க மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இலங்கையைச் சேரந்த தமிழறிதம் அமைப்பின் செயலாளர் ஆசிரியர் சரவணபவானந்தன் அவர்கள் இலங்கை தமிழகம் மற்றும் உலக நாடுகளில்
தமிழ் விக்கிபீடியாவை பற்றிய அறிமுகத்தை நாம் செய்ய வேண்டும். குறிப்பாக அதில் பயிற்சிகளை மாணவர்களுக்கு
வழங்க வேண்டும். இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் பல நாட்டு
அறிஞர்களின் கூட்டு உழைப்போடு
நுட்பியல் கலைச்சொற்களை உருவாக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தை
சேர்ந்தபேராசிரியர் சி. சிதம்பரம்
அவர்கள் தமிழ் இணையக் கழகம் சார்பாக கணினித் தமிழ், இணையத் தமிழ்
ஆய்விதழ் ஒன்றை தொடங்க வேண்டும்; மேலும் தமிழ்
இணைய ஆய்வுகளை இணையத்தில் ஒன்றிணைக்க வேண்டும்; இதுவரை
வெளிவந்துள்ள இணையம் சார்ந்த நூல்களையும் ஒரே இடத்தில் தொகுத்து வழங்க வேண்டும். இவ்வாறுதொகுத்த வழங்கினால் ஆய்வாளர்கள் புதிய சிந்தனையில் அவர்கள் ஆய்வு
செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தைச் சார்ந்த எட்வேர்டு பாக்கியாராஜ் மருத்துவ நூல்களையும் மின்னாக்கம் செய்து அதனை வெளியிட வேண்டும்; தமிழ் மொழிக்கானத் தேடுபொறியை, இயங்கு தளத்தை
தமிழில் பயன்படுத்தி
உருவாக்கவேண்டும் என்றார். மேலும் இணைய
வசதி இல்லாமலேயே பேசினால் தட்டச்சு செய்யும் மென்பொருளை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தைச் சார்ந்த பேராசியர் சத்யராஜ் அவர்கள் கணினித்தமிழ், இணையத்தமிழுக்கான ஆய்விதழ் ஒன்று தொடங்க வேண்டும்; பள்ளி, கல்லூரிகளில்
பயிற்சிகளை வழங்க வேண்டும். அதேபோன்று அமேசானுக்கு
இணையான மின்பதிப்பாக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
செம்மொழி
தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாளராகப் பணியாற்றி வரும் முனைவர் இரா அகிலன் அவர்கள்
இணையத்தில் தமிழ் மொழியின்
பயன்பாட்டாளர்களை அதிகரிக்க வேண்டும்; குறிப்பாக இணையப்
பயன்பாடுகள் தமிழ்
மென்பொருட்களில் இருக்க வேண்டும் என்றும்அதற்கு தமிழ்
இணையக் கழகம் வழிவகை செய்ய வேண்டும் என்றார். அடுத்துcontent
யே தமிழ் மொழியில் அதிகமாக
உருவாக்க வேண்டும் என்றும் பல்வேறு புதிய கணித்தமிழ் ஆராய்ச்சியை உருவாக்கி
வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்
தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் திரு.தகவலுழவன்
என்பவர் நமது தமிழ்
இணையக் கழகம் சார்பாக இணையத் தமிழ் வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் அரசு
என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கத்தில் இருக்கின்ற உயர் அதிகாரிகளிடம் அடிக்கடி
இது தொடர்பாக பேசி ஒரு நல்ல முடிவை எட்ட வேண்டும் என்றான்.
பேராசிரியர் உமாராஜ் அவர்கள் தமிழ் – ஆங்கிலம் அகராதியை நாம் உருவாக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டுக்கும் தமிழ் - சிங்கள மொழி, தமிழ் - உருது மொழி, தமிழ்- இந்தி மொழி, தமிழ் - சமஸ்கிரத மொழி, தமிழ் - சீன மொழி, போன்ற சின்னச் சின்ன அகராதிகளைப்உருவாக்கி
இணையத்தில் வெளியிட
வேண்டும் என்றார். மேலும் தமிழ்நாடு
இந்தியா உலகளாவிய பல்கலைக்கழகங்களில் இருக்கும் பேராசிரியர்களை ஒன்றிணைத்து புதிய
நோக்கில் கணினித்தமிழ் ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
Thursday, October 1, 2020
முனைவர் துரை.மணிகண்டன் - துரை.மணிகண்டன் - கச்சை மணிகண்டன்
Offline, Online இரண்டிலிருந்தும் Word File யைPDFFile - ஆகமாற்றலாம்.
Word File PDF File -ஆகமாற்றலாம்
Word to PDF, Convert
DOC to PDF,Word to PDF online, DOC and DOCX files easy, Word to PDF ofline, How To convert Word To PDF File, How word to pdf
converter, How to Word File To PDF File, How To convert Word documents To PDF,
வேர்டு to pdf
Monday, September 28, 2020
பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி (UG,PG) தேர்வு விடைத்தாளை இணையவழியில் அனுப்பும் வழிமுறைகள்.
தமிழ் இணையக்
கழகம்சார்பாக27- 9-
2020 அன்றுஞாயிறு மாலை 6 மணிக்குச் செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்கணினி நிரலாளராகப் பணியாற்றிவரும் திரு. அ. முருக சுவாமிநாதன் செம்மொழி
நூல்களுக்கான மின்சுவடிகள்
உருவாக்கமும் பயன்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். இந்த உரையில்
ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்களை மின்படிவமாகஎவ்வாறுமாற்றிப் பாதுகாப்பது
என்றும் அவ்வாறு உருவாக்கியதை எவ்வாறு பயன்படுத்துவது என்றம் விளக்கினார். நிகழ்வின் இறுதியில்
பல்வேறு பேராளர்கள் கேட்ட வினாக்களுக்கு விரிவான விளக்கத்தையும் வழங்கினார். அந்த வகையில்
பேராசிரியர் முரளிதரன், உமாராஜ், சிதம்பரம், திருமதி பானுமதி, தகவலுழவன், நிரலாளர்
முனைவர் அகிலன், எட்வேர்டு பாக்கியராஜ் போன்றோர் தெளிவான வினாவை முன்வைத்தனர்.
manuscripts in tamil, manuscripts in classical tamil, #ஓலைச்சுவடிகள், ஊ,வே.சா,
#முருகசுவாமிநாதன், #மணிவானதி, manuscripts in sangamtamil, tamil manuscripts in
sangam, https://www.cict.in/, how to make
olai chuvadi in tamil, how to make olai chuvadi in tamil
Wednesday, September 23, 2020
தமிழ்நாடு காவல்துறைப் பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (Tamil Nadu Uniformed Services Recruitment Board, ) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, மற்றும் மீட்பு பணிகள் துறை போன்ற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மொத்தம் 10906 + 72 = 10978 காலியிடங்களை நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் வரவேற்கப்பட உள்ளன. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 26-09-2020 லிருந்து 26 – 10 - 2020 க்குள் தங்கள் விண்ணப்பங்களை https://tnusrbonline.org/ என்ற இணைய வழி மூலம் சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.
youtube comment analytics software - A Machine Learning System To Classify In Tamil & Malayalam
தமிழ் இணையக் கழகம் சார்பாக 20 – 09- 2020 ஞாயிறு மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெற்ற இணையத்தமிழ் சொற்பொழிவில் பெங்களூர் DataWeawe நிறுவனத்தில் முதுநிலை தரவு விஞ்ஞானியாக பணியாற்றி வரும் தமிழ்விக்கிபீடியாவில் மூத்த முன்னோடியான திரு. #இல. சுந்தர் அவர்கள் வழங்கிய A Machine Learning System To Classify The Sentiment Polarityt Of Comments In Tamil and Malayalam என்ற தலைப்பில் உரையை இந்த காணொலியில் காணலாம். இதன்மூலம் அயர்லாந்து பல்கலைக்கழம் நடத்திய youtube video Comment மென்பொருள் போட்டியில் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து உருவாக்கிய தீதும் நன்றும் என்ற மென்பொருள் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அதன் இணைப்பையும் key worde – ல் கொடுத்துள்ளேன்.
முனைவர் சண்முகம் – மாணவர்களை youtube ல் தரமான காணொலியைப் பார்க்கச்செய்வதற்கான மென்பொருள் ஏதேனும் உண்டா?
கணிப்பொறியாளர் முனைவர் அகிலன் - சங்க இலக்கியங்கள் ஆராய்ச்சியில் data science அடிப்படையில் மாணவர்களுக்கு எந்த மென்பொருளைப் படிக்கச் சொல்லலாம்?
மென்பொருளாலர் யாழ்பாவாணன் – தமிழில் ணொருண்மை மயக்கத்தை உங்கள் மென்பொருள் எவ்வாறு சுட்டிக்காட்டும்?
பேராசிரியர் தெய்வசுந்தரம் – தமிழில் சொற்களை ஆய்வு செய்துதான் database உருவாக்கியுள்ளார்கள். ஆனால் machine learning program க்கும் database க்கும் என்ன வித்தியாசம்?
முனைவர் துரை.மணிகண்டன் - கூகுள் மொழியறிதல் உள்ளீடு என்றால் என்ன? சுகு பாலசுப்பிரமணியம், எட்வேர்டு பாக்கியராஜ் ஆகியோர்கள் கேட்ட வினாக்களுக்கு விடையும் வழங்கியுள்ளார்.
HOW TO reduce image size in kb, HOW TO
Compress JPEG images, HOW TO Compress Now, HOW TO
Compress JPEG images and photos, how to reduce image size
in tamil, how to reduce image size in photoshop tamil, how to reduce jpeg file size, HOW
TO image size reduce in tamil,#MANIVANATHI, PHOTO, FILE, SIZE, மணிவானதி,
தமிழ் இணையக் கழகம் சார்பாகப் பேராசிரியர் தமிழ்ப்பரிதிமாரி
அவர்கள் கட்டற்ற வளங்களும் கணித்தமிழும் என்ற தலைப்பில் 13-09-2020 1 அன்று வழங்கிய உரையில் பேரா.சண்முகம், பேரா.வள்ளி, கணிப்பொறியாளர்கள்
திரு.யாழ்பாவாணன், முனைவர் அகிலன்,
முனைவர் இனியநேரு, திரு.சுகு,
திரு.சேது, திரு.ரவிக்குமார் போன்றோர்கள் கேட்ட வினாவிற்கு விடை வழங்கிய காணொலி
கட்டற்ற வளங்கள், கட்டற்ற வளங்களும் கணித்தமிழும், #பேராசிரியர் தமிழ்ப்பரிதிமாரி,
#தமிழ் விக்கிப்பீடியா, #விக்கித்தரவு,
#விக்கிமூலம், #விக்சனரி, #மணிவானதி, #முனைவர் துரை மணிகண்டன், #தமிழ் இணையக் கழகம், விக்கி நூல்கள்,விக்கிச்செய்தி, tamil internet academy, #Thamizhpparithi Maari, #manivanathi, open source in
tamil, open source tamil,
தமிழ் இணையக் கழகம் சார்பாகப் பேராசிரியர்
தமிழ்ப்பரிதிமாரி அவர்கள் இணையத்தில் கட்டற்ற வளங்கள் மூலமாக குறிப்பாகத் தமிழ்மொழியை வளர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல
வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் விக்கிபீடியாவில் அனைவரும் பங்கேற்று கட்டுரை
எழுதுவது, விக்கிமூலம், விக்கி டேட்டா, விக்கி நூல்கள், விக்கி காமன்ஸை எவ்வாறு
பயன்படுத்துவது மேலும் இன்னும் 5 ஆண்டுகளில்
தமிழ் விக்கிபீடியாவில் பல லட்சம் சொற்களை நாம் உள்ளீடு செய்ய வேண்டும் என்பது
குறித்து வழங்கிய உரையின் தொகுப்பு.
கட்டற்ற வளங்கள், கட்டற்ற வளங்களும் கணித்தமிழும்,
#பேராசிரியர்
தமிழ்ப்பரிதிமாரி, #தமிழ் விக்கிப்பீடியா, #விக்கித்தரவு, #விக்கிமூலம், #விக்சனரி,
#மணிவானதி, #முனைவர் துரை மணிகண்டன், #தமிழ் இணையக் கழகம், விக்கி நூல்கள்,விக்கிச்செய்தி, tamil internet academy, #Thamizhpparithi Maari, #manivanathi, open source in
tamil, open source tamil,