/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, October 5, 2020

இணையத்தமிழ் வளர்முக கலந்துரையாடல் பகுதி 1

 

தமிழ் இணையக் கழகம் சார்பா 04-10 - 2020 மாலை 6 மணிக்கு இணையத்தமிழ் வளர்முக கலந்துரையாடல் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில் இணையத் தமிழின் வளர்ச்சிக்குத் தமிழ் இணையக் கழகம் முன்னெடுக்க வேண்டிய முன்மொழிவுகளை இங்கே கலந்துகொண்ட பேராளர்கள் முன் வைத்திருக்கின்றார்கள்.

அவர்களில் #சிவாப்பிள்ளை, #இனியநேரு, #நீச்சல்காரன், #சிதம்பரம், #உமாராஜ், #அகிலன்,#வாசுதேவன் லட்சுமணன், # சுகு பாலசுப்பிரமணியம், #தகவலுழவன்,# எட்வர்டு பாக்கியராஜ், # மு.மயூரன், #சரவணபவானந்தன், #சத்தியராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையை வழங்கிய காணொலி


முதலில் திரு சிவா பிள்ளை அவர்கள் இணையத்தில் அவரவர்களுடைய தாய் மொழிகளில் கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாகத் தமிழ் மொழியில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மலேசியாவைச் சார்ந்த ஆசிரியர் வாசுதேவன் லட்சுமணன் தொழில்நுட்ப கருவிகளைத் தமிழ் மொழியில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக திறன்பேசியை நாம் தமிழில் பயன்படுத்த வேண்டும். மேலும் தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும், ஊடக பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து நீச்சல்காரன் என்ற ராஜாராமன் அவர்கள் தமிழ் மொழியில் இணையத்தில் கலைக்களஞ்சியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்; பல்வேறு இலக்கிய நூல்களையும் கருத்துக்களையும் ஆவணப்படுத்துதல் வேண்டும்;  இசை, நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பல்வேறு அறிஞர்கள் வழலகிய உரைகளை ஒளி கோப்புகளாக நாம் பாதுகாக்க வேண்டும்; தமிழ் மென்பொருள்களைப் புதிது புதிதாக உருவாக்க வேண்டும்; ஆங்கில மொழியில் இருக்கின்ற வடிவமைப்பை போன்று பல்வேறு வகையான தமிழ் எழுத்துருக்கள் ஒருங்குறியில் உருவாக்க வேண்டும்; தட்டச்சுக் கருவிகளும் அதிகமாக தமிழ் மொழியில் உருவாக்க வேண்டும்; கட்டற்ற முறையில் தமிழ் மென்பொருள்களை மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் உருவாக்க வேண்டும்; ஒவ்வொரு நாட்டிற்கும் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப தேடு தளங்கள் உருவாக்கி வைத்திருப்பது போன்று தமிழ் மொழிக்கான தேடு தளங்கள் பல உருவாக்க வேண்டும்; கலைச்சொல்லாக்கம் பல உருவாக்க வேண்டும் என்றார். மேலும் NLP வழியாக தமிழ்ப் பிழை திருத்திகள் பல உருவாக்க வேண்டும்; அதேபோன்று இலக்கண கருவிகள் பலர் உருவாக்க வேண்டும்; ஒரு உரையை சுருக்கி கொடுக்கும் ( word summarizer, content summarizer) கருவிகளை நாம் தமிழ்மொழியில் உருவாக்கி வெளியிட வேண்டும் வேண்டுமென்றார்.

இலங்கையைச் சார்ந்த பொறியாளர் திரு.மு.மயூரன் தொழில்நுட்பங்களில் நாம் கட்டற்ற முறையில் தமிழ் மென்பொருள்களை உருவாக்கி வெளியிட வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைச் சார்ந்த மென்பொருள்கள் பல உருவாக வேண்டும். தமிழ் சூழல் சார்ந்த பல துறைகளைச் சேர்ந்த மென்பொருள்கள் உருவாக்கவேண்டும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஒருங்கே தொழில்நுட்பத்தைத் தமிழ் மொழியில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

கனடாவில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் அவர்கள் மாணவர்களுக்கு அமேசான் ஊடாக  சின்ன, சின்ன கவிதைகள்; சிறு, சிறு சிறு கதைகள்; தமிழ் நூல்களை வெளியிட அல்லது வெளியிடுவது எவ்வாறு என்பது குறித்து நாம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

 இதன் மூலம் இனிவரும் சந்ததிர்களுக்குத் தேவையானப் பணத்தை சம்பாதித்துக் கொள்வதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றார்.

முனைவர் இனியநேரு தமிழ் இணையதள பயன்பாட்டை நாம் அதிகரிக்கவேண்டும். பல்வேறு குழுக்களாக நாம் பிரிந்து பல பயிற்சிகளை ஆங்காங்கே தமிழகத்தில் உலக நாடுகளில்  நாம் நடத்த வேண்டும். அதேபோன்று மின்நூல்களை வெளியிட வேண்டும். புதிய தமிழ்ச் செயலிகளை உருவாக்க மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இலங்கையைச் சேரந்த தமிழறிதம் அமைப்பின்  செயலாளர் ஆசிரியர் சரவணபவானந்தன் அவர்கள் இலங்கை தமிழகம் மற்றும் உலக நாடுகளில் தமிழ் விக்கிபீடியாவை பற்றிய அறிமுகத்தை நாம் செய்ய வேண்டும். குறிப்பாக அதில் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் பல நாட்டு அறிஞர்களின் கூட்டு உழைப்போடு நுட்பியல் கலைச்சொற்களை உருவாக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் சி. சிதம்பரம் அவர்கள் தமிழ் இணையக் கழகம் சார்பாக கணினித் தமிழ், இணையத் தமிழ் ஆய்விதழ் ஒன்றை தொடங்க வேண்டும்; மேலும் தமிழ் இணைய ஆய்வுகளை இணையத்தில் ஒன்றிணைக்க வேண்டும்; இதுவரை வெளிவந்துள்ள இணையம் சார்ந்த நூல்களையும் ஒரே இடத்தில் தொகுத்து வழங்க வேண்டும். இவ்வாறு தொகுத்த வழங்கினால் ஆய்வாளர்கள் புதிய சிந்தனையில் அவர்கள் ஆய்வு செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தைச் சார்ந்த எட்வேர்டு பாக்கியாராஜ் மருத்துவ நூல்களையும்  மின்னாக்கம் செய்து அதனை வெளியிட வேண்டும்; தமிழ் மொழிக்கானத் தேடுபொறியை, இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்தி உருவாக்கவேண்டும் என்றார். மேலும் இணைய வசதி இல்லாமலேயே பேசினால் தட்டச்சு செய்யும் மென்பொருளை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தைச் சார்ந்த பேராசியர் சத்யராஜ் அவர்கள் கணினித்தமிழ், இணையத்தமிழுக்கான ஆய்விதழ் ஒன்று தொடங்க வேண்டும்; பள்ளி, கல்லூரிகளில் பயிற்சிகளை வழங்க வேண்டும். அதேபோன்று அமேசானுக்கு இணையான மின்பதிப்பாக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாளராப் பணியாற்றி வரும் முனைவர் இரா அகிலன் அவர்கள் இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டாளர்களை அதிகரிக்க வேண்டும்; குறிப்பாக இணையப் பயன்பாடுகள் தமிழ் மென்பொருட்களில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு தமிழ் இணையக் கழகம் வழிவகை செய்ய வேண்டும் என்றார். அடுத்து content யே தமிழ் மொழியில் அதிகமாக உருவாக்க வேண்டும் என்றும் பல்வேறு புதிய கணித்தமிழ் ஆராய்ச்சியை உருவாக்கி வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்

தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் திரு.தகவலுழவன் என்பவர் நமது தமிழ் இணையக் கழகம் சார்பாக இணையத் தமிழ் வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கத்தில் இருக்கின்ற உயர் அதிகாரிகளிடம் அடிக்கடி இது தொடர்பாக பேசி ஒரு நல்ல முடிவை எட்ட வேண்டும் என்றான்.

பேராசிரியர் உமாராஜ் அவர்கள் தமிழ் ஆங்கிலம் அகராதியை நாம் உருவாக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டுக்கும் தமிழ் - சிங்கள மொழி, தமிழ் - உருது மொழி, தமிழ்- இந்தி மொழி, தமிழ் - சமஸ்கிரத மொழி, தமிழ் - சீன மொழி, போன்ற சின்னச் சின்ன அகராதிகளைப் உருவாக்கி இணையத்தில் வெளியிட வேண்டும் என்றார். மேலும் தமிழ்நாடு இந்தியா உலகளாவிய பல்கலைக்கழகங்களில் இருக்கும் பேராசிரியர்களை ஒன்றிணைத்து புதிய நோக்கில் கணினித்தமிழ் ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

0 comments: