/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, October 22, 2020

ஒப்பிலக்கியம் - Comparative Literature

 

தொடர்புகொள்ள - முனைவர் துரை.மணிகண்டன், 9486265886

பொருளடக்கம்

அலகு - 1

         இலக்கியமும் ஒப்பிலக்கிய வரையறை - இலக்கியம் என்ற சொல்லின் வரையறை - மரபும் இலக்கியமும் - புதுத்திறனாய்வு - ஒப்பிலக்கியம் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - ஒப்பிலக்கிய வரையறை -பிற அறிஞர்களின் வரையறை - எவை ஒப்பிலக்கியம் - ஒப்பிலக்கிய நூல்கள் - ஒப்பிலக்கியப் படைப்பும் படைப்பாளரும் படைப்பு என்பதன் வரலாறு - ஒப்பிலக்கியப் படைப்பின் பயன் - கவத்தில் கொள்ள வேண்டியவை - ஒப்பிலக்கியப் படைப்பாளர்கள் - ஒப்பிலக்கியப் படைப்பாளர்களின் தகுதிகள் - பண்புகள்.

அலகு - 2

         இலக்கியத் திறனாய்வும் திறனாய்வாளரும் - தமிழ் திறனாய்வு நெறிகள் - திறனாய்வு வகைகள் - திறனாய்வாளன் - திறனாய்வாளனின் தகுதிகள்

         ஒப்பிலக்கியத் திறனாய்வும் ஒப்பிலக்கியத் திறனாய்வாளரும் - ஒப்பிலக்கியத் திறனாய்வுக் கோட்பாட்டாளர்கள் - இன்றைய ஒப்பிலக்கியக் கோட்பாடுகள் - கூர்தலறக் கோட்பாடு - சார்பியல் கோட்பாடு - அடிக்கருத்துக் கோட்பாடு - மாற்றுவடிவக் கோட்பாடு - மீட்டுருவாக்கக் கோட்பாடு - தாக்கக் கோட்பாடு - கலையியல் கோட்பாடு - ஒப்பிலக்கியத் திறனாய்வாளர்களின் பண்புகள்

அலகு - 3

         ஒப்பிலக்கியப் படைப்பில் கலைகளின் பங்கு - இலக்கிய கலையின் பண்பு - பல்வகைக் கலைகளின் மாண்பு - கலைகளின் பங்கு - ஒப்பிலக்கியப் படைப்பில் மொழிபெயர்ப்புக் கலை, பணிகள் - நமது இன்றியமையாக் கடப்பாடுகள் - மொழி பெயர்ப்பாளர்களுக்குரிய கடப்பாடுகள் - சிறப்பாக கருதவேண்டிய கடப்பாடுகள் 

அலகு - 4

         ஒப்பிலக்கியக் கட்டுரைகள் - கட்டுரைகளின் அமைப்பு - கட்டுரையின்  சிறப்பம்சங்கள் - கட்டுரையும் மொழிபெயர்ப்பும் - ஐக்கூகவிதைகள் - தமிழ் - கிரேக்க மறவர் பண்பு - புறநானூற்று தமிழ் மறவர் - கிரேக்க மறவர் - கையறுநிலை - உள்ளுணர்வும் கையறு நிலையும்

அலகு - 5

         தமிழ் ஆங்கிலக் கவிதைகளில் பக்திப்பார்வை - வினா விடை பாடல்கள் - ஜான் மில்டன் - திருச்சாழல் - சோனட் பாவடிவு - பாடல் வடிவம் - இரு அந்தக் கவிஞர்கள்.

         திருக்குறள் சுக்கிரநீதிக் கருத்துக்கள் ஒப்பீடு - திருக்குறளின் பழமையும் சிறப்பும் - சுக்கிர நீதிச்சாரம் பெற்ற தனித்தன்மைகள் - ஒற்றுமைகள் - வேறுபாடுகள் 


                                                         அமேசானில் நூலைப்பெறலாம்.

https://www.amazon.com.au/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-Comparative-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ebook/dp/B08J3Y6R47

                    நூலைப்பற்றி பேராசிரியர் முனைவர் ம. திருமலை அவர்களின் கருத்து

முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய “ஒப்பிலக்கியம்” என்ற நூலை படித்தேன். இந்நூல் ஐந்து இயல்களைக் கொண்டதாக மணிகண்டன் அமைத்திருக்கிறார். ஒப்பிலக்கியம் துறை இலக்கிய ஆய்வில் தனித்து விரிவாக  வளர்ந்த போது பல்வேறு சமூகத் தேவைகள் இருந்தன. பல்வேறு கலை, இலக்கியப் பிரிவுகளின் மீது அறிவியல் சிந்தனைகளின் தாக்கம் மிகுதியாக ஏற்பட்ட சூழல் நிலவியது என்று கூறலாம். உலக நாடுகளில் பல்வேறு தேசிய இனங்கள் தங்களின் அடையாளத்தைத் தேட அல்லது  நிலைநிறுத்த முற்பட்டபோது ஒப்பிட்டாய்வு முறை வேறூன்றியது என்று ஒருவாறு கூறலாம். ஒரு தேசிய இனம் உலகின் மற்ற இனங்களுக்கு தன்னைப் பலப்படுத்தும்  முயற்சியின் விளைவாக ஒப்பிட்டு முறை தோன்றியது. ஆதி காவியமான ஹோமரின் கவிதைகளை யுக்கோஸ்லொவியா நாட்டுப்புறப் பாடல்களுடன் ஒப்பிட்ட மில்பன் பரியின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? உலகின் தொன்மைகளுக்கே அடிப்படையாக அமைந்தது நாட்டுப்புறப் பாடல்கள்தான் என்பதை நிறுவுவதுதான் நோக்கம். நாட்டுப்புறப்பாடல்கள் / நாட்டுப்புறவியல் என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளமாகுமே என்பதை எவரும் மறுக்கமாட்டார்! எனவே தொன்மைமிக்கதும் பெருங்கதையாடலுமான ஆதிகாவியங்களின் மீது நாட்டுப்புறப் பாடல்களின் சாயல்கள் இருக்கின்றன என்று நிறுவும் முயற்சியின் இறுதி நோக்கங்கள்  தேசிய இன அடையாளத்தைத் தேடுவது,  அதனை முன்னிருத்துவது என்பதைத் தவிர வேறென்ன?

 இந்தியாவில் குறிப்பாக தமிழக்கதில் சுதந்திரப் போராட்டம்  முனைப்பாக நடந்துகொண்டிருந்த காலத்தில் ஆந்திர மாநிலம் (இன்றைய) பெல்லாரி சிறையில்  அடைக்கப்பட்டிருந்த வ.வே.சு Kambaramayana- A Study- என்ற ஆங்கில நூலை எழுதினார்,  அடிமைப்பட்டுக் கிடந்த பாரத நாட்டின் அரிய கலை பொக்கிஷங்கள் மிகவும் உயர்ந்தவை; ஒப்பிலக்கியத்திலும் உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுடன் ஒப்பவைத்து எண்ணத்தக்க பெருமையை உடையவை என்ற செய்தியை ஆங்கில அறிவு சீவிகளுக்கு  உணர்த்துவதற்காகவே வ.வே,சு அவர்கள் Kambaramayana- A Study என்ற நூலை எழுதினார்.  அதுவும் ஆங்கிலத்தில் எழுதினார். உண்மையில் அந்த அரிய ஆய்வுநூல்  தமிழர்களுக்காக எழுதப்பட்டது என்று கூறுவதைவிட ஆங்கிலையர்களுக்காக எழுதப்பட்டது என்று கூறவேண்டும். இந்திய விடுதலைப்போரில் அறிவு சார்ந்த ஒரு போராட்ட வாழ்வு என்றுதான் வ.வே.சு அவர்களின் நூலைக் குறிப்பிட வேண்டும்.

 சுதேசிய மறுமலர்ச்சி உணர்வு /  தன் மேம்பாட்டுணர்வு அரசியல் தளங்களில் மாபெரும் வெற்றிகளைச் சில குறிப்பிட்ட அரசியல் இயக்கங்கள் அடைய உதவி இருக்கின்றன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற செவ்வியல் இலக்கியங்கள் சுவடிகளிலிருந்து அச்சுவடிவத்தினை அடைந்த பின் அவை மேலும் இலக்கியங்களாகப் பார்க்கப்படவில்லை; தமிழ் மக்களின் பண்பாட்டு வரலாற்று ஆவணங்களாகவும் அடையாளங்களாகவும் தமிழ் அறிவு சீவிகளால் பார்க்கப்பட்டன. 1894 இல் அச்சு வடிவம் பெற்ற இவற்றை மேனாட்டு தமிழறிஞர்கள் பலரும் படித்து மனத்தைப் பறிகொடுத்தனர். எனவே ஒரு இனத்தின் அடையாளத்தை நிறுவுவதில் , மீட்டெடுப்பதில் இலக்கியங்களுக்கு  பெரும்பங்கு உள்ளது. பண்பாட்டுத் தளங்களில் சிக்கல்கள், தவிப்புகள் தோன்றும் போதெல்லாம் தமிழ்சார்ந்த  இலக்கியங்கள் மேலெழும்பி பிரம்மாண்டத் தோற்றம் கொள்கின்றன. இச்சூழல்களில் ஒப்பீடு, ஒப்பியல் ஆய்வுகள் தவிர்க்க இயலாத கருவியாகப் பயன்படுகின்றன.

சமுதாயக் கட்டமைப்பு, சமுதாய மாற்றம் போன்ற தளங்களிலும் பொருளியல் இயக்கவியல் சிந்தனைகளுக்கு நிகராக இலக்கிய ஒப்பாய்வு பேரிடம் பெறுகின்றது. தமிழ் மக்களைத் தன் மேம்பாட்டு இயக்கநிலைக்குக் கொண்டுசெல்ல அரசியல் இயக்கங்கள் செவ்வியல் இலக்கியங்களையே பயன்படுத்தின மறுதலையாம் தன்மேம்பாட்டு இயக்கநிலையில் இருந்த மக்களை யதார்த்த நிலைக்குத் திரும்ப கொண்டுவந்து உண்மையை உணர்த்தவும் அதேசெவ்வியல் இலக்கியங்கள் பயன்பட்டிருந்ததை இலக்கிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. பேராசிரியர் க.கைலாசபதியின் “Tamil Heroic Poetry” என்ற ஆங்கில நூல் ஒப்பிட்டு ஆய்வின் மூலம் உண்மையைத் தெரிவிக்கும் முயற்சிக்கு நல்ல சான்றாகும்! இவ்வாறு ஒப்பிலக்கிய ஆய்வின் பயன்கள் பற்பல.

ஒப்பிலக்கியம் ஒரு பாடப்பிரிவாகக் கல்வி நிலையங்களில் பயிற்றுவிக்கப்படத் தொடங்கியபோது சில கருவி நூல்கள் தமிழில் எழுதப்பட்டன. ஜே.டி,ஷா, நியூட்டன் ஸ்டாக்நெட், எஸ்.எஸ்.பிராவர், உல்ரிச் வைசெடைன் ஹார்ட் பிரென்ஸ், சி.எம்.பவ்ரா போன்றவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவந்த நூல்களின் சாராம்சத்தைப் பெற்றுக்கொண்ட நிலையில் தமிழில் ஒப்பிலக்கியம் பற்றிய பாடநூல்கள் அல்லது கருவிநூல்கள் சில வெளிவந்தன. ரெனிவெல்லார்க்-austin wurann ஆங்கிலத்தில் எழுதப்பட்ட”இலக்கியக் கொள்கை” என்ற நூலும் தமிழில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர்களின் கற்றல் நிலை இந்த ஒரு சில நூல்களின் அளவிலேயே நின்று போனது ஒரு துரதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. இவ்வாறு கூறும்போது நான் மிகுந்த மன வேதனையுடன்தான் கூறுகின்றேன்.!

         தமிழில் கிடைத்த கருவி நூல்களை அடிப்படையும் வைத்து கொண்டு உயர்நிலை பயன்பாட்டு நூல்கள் எழுதப்படவேண்டும்.  உயர்நிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

         பேராசிரியர் க.கைலாசபதியின் “ஒப்பியல் இலக்கியம்” என்ற நூல் பெரிதும் சுதேசியத் தன்மையுடனும் பயன்பாட்டு நிலையிலும்  எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.

         முனைவர் துரை.மணிகண்டன் எழுதியுள்ள ஒப்பிலக்கியம்  என்ற இந்நூல் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதற்பகுதி இலக்கியம்-ஒப்பிலக்கியம் வரையறை பற்றிப் பேசுகிறது. பல்வேறு அறிஞர்களின் கருத்தும் இப்பகுதியில் தொகுத்தும் கூறப்பட்டுள்ளன. ஒப்பிலக்கியப் படைப்பும் படைப்பாளரும் என்ற பகுதியில்  இதுவரை தமிழில் ஒப்பிலக்கியம் பற்றி பல்வேறு தமிழறிஞர்களால் எழுதப்பட்ட நூல்களினின்று கருத்துக்கள் திரட்டிக் கூறப்பட்டுள்ளன.  “ஒப்பிலக்கியப் படைப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய சிறப்புப் பண்புகள்” என்ற பகுதியே பொறுத்தப்பாடு குறைவாகக் காணப்படுகிறது. இலக்கியங்களை படைப்பாளிகள் உருவாக்குபவர்கள்; பல்வேறு மொழி இலக்கியங்களின் உள்ளீட்டில் ஒப்புகைக் கூறுகள் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இந்த ஒப்புமைக் கூறுகளை எடுத்தியம்புவதே ஒப்பிலக்கிய ஆய்வாளரின் பணி! இலக்கியங்களைப் படைப்பது புலவர்களின் பணி. அவற்றின் ஒப்புமைகளைக் கண்டறிவது ஒப்பிலக்கிய ஆய்வாளரின் பணி! புலவர்களே ஒப்பிலக்கியத்தைப் படைப்பது எங்ஙனம்? எனவே இது குறித்த தெளிவினை நூலாசிரியர் மேலும்  பெற வேண்டும் என்று தோன்றுகிறது.

         இலக்கியத் திறனாய்வும் திறனாய்வாளரும் என்ற பகுதியில் திறனாய்வுப் பற்றியச் செய்திகளைத் தொகுத்து விளக்குகிறது.  திறனாய்வாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றியும் இப்பகுதியில் கருத்துக்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஒப்பீட்டுத் திறனாய்வு பற்றியச் செய்திகள் ஒரு பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளன. ஒப்பீட்டுத் திறனாய்வு(Comparative Criticism) ஓப்பிலக்கிய ஆய்வு ( Comparative research) என்ற இருண்டுமே நோக்கங்கள், வழிமுறைகள் வேறுபட்டவை என்பதை நூலாசிரியர் மேலும் சிறிது ஆழ்ந்து சான்றுடன் விளக்கி இருந்திருந்தால் இந்நூல் மிகவும் பயனுடையதாக  இருந்திருக்குமே என்று தோன்றுகிறது. இப்பகுதியிலும் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

          “ஒப்பிலக்கியப் படைப்பில் கலைகளின் பங்கு”  என்ற இயலும் இவ்வாறே கருத்துக்களின் தொகுப்பாகவே அமைந்திருக்கிறது.

          “மொழிபெயர்ப்பு” பற்றிய பகுதியிலும்  பல்வேறு செய்திகளை நூலாசிரியர் துரை.மணிகண்டன் எடுத்துக் காட்டியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட மொழியின் சிறப்பு அதில் பிறநாட்டு இலக்கியங்கள் எந்த அளவிற்கு மொழிபெயர்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவோ அந்த அளவிற்கே அமைகின்றது.

         ஒப்பிலக்கியக் கட்டுரைகள்” பகுதியில் ஒருசில கட்டுரைகளை உள்ளவாறே மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர்.

         தமிழ் - கிரேக்க மறவர் மாண்பு” என்ற பகுதியில் புறநானூற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களின் வீரவுணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர் துரை.

         தமிழ் ஆங்கில பக்திப் பாடல்கள் பற்றிய கட்டுரையில் ஜான் மில்ட்டன்னின் On His Blindness  என்ற கவிதை வரிகளை மாணிக்கவாசகரின் திருச்சாழல் பகுதியுடன் ஒப்பிட்டுள்ளார் நூலாசிரியர். இது போன்ற கட்டுரைகள் மேலும் எழுதப்பட வேண்டும்.

         திருக்குறள் , சுக்கிரநீதி ஆகிய இரண்டு நூல்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ள பகுதி குறிப்பிடத்தக்கது. இப்பகுதியை மேலும் விரிவுப்படுத்தித் தனி நூலாக அமைக்கலாம். இனிமேல் ஒப்பிலக்கிய ஆய்வுகள் செல்ல வேண்டிய  நெறியும் இதுவே!

         இந்நூல் இன்றைய இளையத் தலைமுறைக்கு ஒப்பிலக்கியம் பற்றிய விரிவான தகவல்களை அடிப்படையிலிருந்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மேலும் மாணவர்களுக்கும் ஒப்பிலக்கியம் பற்றி எதுவுமே தெரியாத பாமர மக்களுக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது உண்மை.

         முனைவர் துரை. மணிகண்டன் மேலும் சிறந்த ஒப்பாய்வு நூல்கள் பலவற்றை எழுத என் வாழ்த்துக்கள்.



0 comments: