தமிழ் இணையக் கழகம் சார்பாக 20 – 09- 2020 ஞாயிறு மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெற்ற இணையத்தமிழ் சொற்பொழிவில் பெங்களூர் DataWeawe நிறுவனத்தில் முதுநிலை தரவு விஞ்ஞானியாக பணியாற்றி வரும் தமிழ்விக்கிபீடியாவில் மூத்த முன்னோடியான திரு. #இல. சுந்தர் அவர்கள் வழங்கிய A Machine Learning System To Classify The Sentiment Polarityt Of Comments In Tamil and Malayalam என்ற தலைப்பில் உரையை இந்த காணொலியில் காணலாம். இதன்மூலம் அயர்லாந்து பல்கலைக்கழம் நடத்திய youtube video Comment மென்பொருள் போட்டியில் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து உருவாக்கிய தீதும் நன்றும் என்ற மென்பொருள் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அதன் இணைப்பையும் key worde – ல் கொடுத்துள்ளேன்.
முனைவர் சண்முகம் – மாணவர்களை youtube ல் தரமான காணொலியைப் பார்க்கச்செய்வதற்கான மென்பொருள் ஏதேனும் உண்டா? கணிப்பொறியாளர் முனைவர் அகிலன் - சங்க இலக்கியங்கள் ஆராய்ச்சியில் data science அடிப்படையில் மாணவர்களுக்கு எந்த மென்பொருளைப் படிக்கச் சொல்லலாம்? மென்பொருளாலர் யாழ்பாவாணன் – தமிழில் ணொருண்மை மயக்கத்தை உங்கள் மென்பொருள் எவ்வாறு சுட்டிக்காட்டும்? பேராசிரியர் தெய்வசுந்தரம் – தமிழில் சொற்களை ஆய்வு செய்துதான் database உருவாக்கியுள்ளார்கள். ஆனால் machine learning program க்கும் database க்கும் என்ன வித்தியாசம்? முனைவர் துரை.மணிகண்டன் - கூகுள் மொழியறிதல் உள்ளீடு என்றால் என்ன? சுகு பாலசுப்பிரமணியம், எட்வேர்டு பாக்கியராஜ் ஆகியோர்கள் கேட்ட வினாக்களுக்கு விடையும் வழங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment