/// பத்மவானி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சேலம். ஒருநாள் தமிழ்க்கணினி பயிலரங்கம். நாள்: 27/07/2018. // எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, January 25, 2012

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (25-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஆறாம் நாளில் காலை அமர்வில் மேனாள் மொழியியல் துறை இயக்குநர் பேராசிரியர் க.முருகையன் அவர்கள் ஒலியியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


பேராசிரியர் முருகையன்

ஒலியியல் என்றால் என்ன? ஒலியியல் என்பது அறிவியல் முறையில் ஆராய்வது.
ஒலியியன்களைப் பற்றி தொல்காப்பியர் கூறிய இலக்கணங்களையும், இன்று மொழியியல் நோக்கில் ஒலியியலையும் விளக்கிக் கூறினார். இதழ் ஒலி,மூக்கொலிகள்,பல்லிதழ்கள் மூலம் ஒலியன்கள் தோற்றம் பெறும் பாங்கை விவரித்தார்.
இவ்வாறு ஒலியன்களின் தோற்றம் வளர்ச்சி இன்றைய கணினி மொழிக்கு எவ்வாறு கொடுத்தால் கணினி ஏற்றுக்கொள்ளும் என்பதையும் பல இலக்கியக் கதைகள் மூலமும் பயிற்சிமூலமும் தெளிவுபடுத்தினார்.

அடுத்த அமர்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொழில்நுட்ப அலுவளர் திருமதி இரா. இராணி அவர்கள் ஒலியியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். எழுத்துக்கள் பிறப்பின் மூலத்தை காட்சிவிளக்க முறையிலும், பல ஒளி,ஒலி வடிவிலும் எடுத்துக்காட்டினார்.திருமதி இரா.இராணி

மதிய அமர்வில் அண்ணாப்பல்கலைக்கழகக் கணிப்பொறியியல் துறை பேராசிரியர் திருமதி இரஞ்சனி பார்த்தசாரதி அவர்கள் அறிவுப் பகராண்மை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அறிவு என்றால் என்ன? அறிவை எப்படி கணினிக்குக் கொடுக்கவேண்டும்? என்பன போல உரையை முன் வைத்தார். தமிழ் மென்பொருள் உருவாக்கம் செய்ய தேவையான சின்ன சின்ன இயற்கை அறிவின் கூறுகளை கணினிக்குக் தொகுத்துக் கொடுக்க வேண்டும்.அடுத்து உலக அறிவையும் நாம் தொகுத்து கணினிக்குக் கொடுக்க வேண்டும்

பேராசிரியை திருமதி இரங்சனி பார்த்தசாரதி

இவையல்லாமல் தற்பொழுது நாம் web1.0 விலிருந்து web2.0 விற்கு சென்றுள்ளோம் இன்னும் நாம் கணினியில் web3.0, மற்றும் web4.0 என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த தரமான எல்லையை நாம் கணினியில் அடையவேண்டும். அதற்கு உலக அளவில் உள்ள அறிவை ஒன்றுபடுத்தி அதன் உட்கூறுகளைக் கணினிக்குள் உள்ளிடவேண்டும் என்றார்.இறுதியாக தொகைவிரி(ontology) பற்றிய கருத்துக்களை விளக்கினார்.


இறுதியாக சி.பி.எம் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் ப.சோ.சந்திரசேகர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்