/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, January 24, 2012

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு


எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஐந்தாவது நாளில் கலை அமர்வில் மேணான் பேராசிரிவயர் கி.அரங்கன் அவர்கள் தொடரியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



தொடரியியல் என்றால் என்ன என்பதையும் அது தொடர்பான விளக்கத்தையும் கூறினார். தொடரியியலில் அமைப்பு மொழியில் அமையும் ஆய்வும் நோம்சாம்ஸ்கியின் தொடரியல் கோட்பாட்டைக்கொண்டு தெளிவாக விளக்கினார்.
அவ்வாறு அமைப்பு மொழியியல் செய்த ஆய்வுகளையும் மாற்றிலக்கணக் கோட்பாடுகள் என்பது மொழியின் இயல்பை புரிந்துகொள்வது என்று விளக்கினார்.
மாற்றிலக்கண முன்மாதிரியை முதன் முதலில் தொடங்கியவர் நோன்சாம்ஸ்கி என்றார்.மேலும் இலக்கணம் என்றால் என்ன? மாற்றுவிதிகளை எவ்வாறு உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவது போன்ற செய்திகளை விளக்கினார்.


அடுத்த அமர்வில் திராவிடப் பல்கலைக்கழகக் கணினிமொழித் துறைப்பேராசிரியர் முனைவர் செல்வராஜ் அருள்மொழி அவர்கள் சொல்வளங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



சொல்வளங்களின் பயன்பாடு இயற்கைமொழியாய்விற்கு மிக முக்கியமானது, ஒரு மொழியின் சொற்களை எடுத்து பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற முறையில் சொல்வளம் பயன்படுகிறது. தற்பொழுது இந்திய மொழிகளில் 11 மொழிகளுக்கு மட்டும் சொல்வளம் செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும், இது 2012 பிப்ரவரி முதல் மத்திய அரசு இணையத்தில் வெளியிட உள்ளனர் என்றும் கூறினார். பல இணையதளங்களுக்குச் சென்று சொல்வளம் குறித்தச் செய்திகளைப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு நேரடிக்காட்சிமூலம் எடுத்துக்காட்டினார்.


மதிய அமர்வில் பாரதியார் பல்கலைக்கழக மேணான் மொழியியல் துறைத் தலைவர் சி.சண்முகம் அவர்கள் பொருணமையியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.




பொருண்மையியல் என்றால் என்ன்? பொருளின் திறன் என்ன என்று விணா எழுப்பி விளக்கினார்.
பொருண்மையியலின் ஆராய்ச்சி மொழியைச்சார்ந்த ஆராய்ச்சி, மனதை சார்ந்த மொழி ஆராய்ச்சி, பொறி அடிப்படையிலான மொழி ஆராய்ச்சி என்ற முறையில் அமைந்துள்ளது.
உடலியியல்,உளவியல், சமூதாயவியல், உலகவியல், பண்பாட்டுக்கூறுகள் அடிப்படையில் பொருண்மையிலை ஆராயும் உத்தியையும் கையாண்டால் நாம் கணினிமொழிக்குத் தேவையான பொருண்மைக்கூறுகளை நாம் எழிதில் உருவாக்கிவிடலாம் என்றார்.

இறுதியாக விவேகானந்த கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் மு.முத்தையா அவர்கள் நன்றி கூறினார்.

பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள்.


நிகழ்ச்சியில் பேராசிரியர் மு.முத்தையா மற்றும் பேராசிரியர்கள் கி.அரங்கன்,சி.சண்முகம். தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கணினிதத்துறை விரிவுரையாளர் சு.லெ.அப்துல்ஹலீம்.


சிறப்பு சொற்பொழிவாளர்களுடன் மலேயா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்







0 comments: